‘பீட்சா 3’ ரிலீஸ் அப்டேட் : ரசிக்கவும் ருசிக்கவும் ரெடியா.?

‘பீட்சா 3’ ரிலீஸ் அப்டேட் : ரசிக்கவும் ருசிக்கவும் ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீட்சா’.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் ‘பீட்சா 2’ திரைப்படம் வெளியானது.

தற்போது ‘மங்காத்தா’, ‘மேகா’, ‘ஜீரோ’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்த அஷ்வின் ககுமானு நடிப்பில் ‘பீட்சா 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கும் இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ‘பீட்சா 3’ படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பீட்சா 3

Ashwin Kakimanu starrer ‘Pizza 3’ gets a release date

சூர்யா பிறந்தநாளை தொடர்ந்து தனுஷ் பிறந்தநாளிலும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சூர்யா பிறந்தநாளை தொடர்ந்து தனுஷ் பிறந்தநாளிலும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ என்ற படத்தின் வீடியோ கிளிப்ஸ் வெளியிடப்பட்டது.

மேலும் மாலை வேளையில் ‘கங்குவா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இதனால் இரட்டை விருந்து கிடைத்த சந்தோஷத்தில் சூரியா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இதேபோல நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கும் இரட்டை விருந்து காத்திருக்கிறது.

ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

அன்று அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ பட டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவை மட்டுமல்லாமல் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள அவரின் ஐம்பதாவது படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Double treat for fans on Dhanush birthday

‘பிக்பாஸ் சீசன் 7’ போட்டியாளர்கள் யார்.? கமல் கார் வாங்கி கொடுத்தது இதற்கு தானா.?

‘பிக்பாஸ் சீசன் 7’ போட்டியாளர்கள் யார்.? கமல் கார் வாங்கி கொடுத்தது இதற்கு தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சகலகலா வல்லவன்’ என்ற பெயருக்கு பொருத்தமாகவே பல்வேறு துறைகளிலும் சாதனைகளை படைத்து வருகிறார் கமல்ஹாசன்.

சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் பாடல் ஆசிரியர் பாடகர் இயக்குனர் டான்ஸ் மாஸ்டர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் கமல் அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.

இவையில்லாமல் சின்ன திரையிலும் எந்த இமேஜும் பார்க்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரெடியாகிவிட்டார்.

இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார்.? என்ற தகவல்கள் அவ்வப்போது வருகின்றன.

தற்போது கிடைத்த தகவலின் படி..

நடிகர் பப்லு (பிருத்விராஜ்), ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த ஜாக்குலின், நடிகர் பயில்வான் ரங்கநாதன் உடன் மோதிய சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் திமுக எம்பி கனிமொழியால் வேலையை இழந்த கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா ஆகியோரது பெயர்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு அண்மையில் சொகுசு கார் ஒன்றை கமல்ஹாசன் வாங்கி கொடுத்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bigg Boss Tamil Season 7 New List Of Contestants Is Out

பாலையாவுடன் மோதும் விஜய்.; தளபதி தாங்குவாரா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பாலையாவுடன் மோதும் விஜய்.; தளபதி தாங்குவாரா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலைய்யா என்று செல்லமாக அழைப்பதுண்டு. இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் அங்கு உண்டு.

இவரது படங்களில் லாஜிக் இருக்கோ இல்லையோ நம்பமுடியாத மேஜிக் இருக்கும். எனவே இவரது படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம்.

இவரது நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராகி உள்ள படம் ‘பகவந்த் கேசரி’.

இப்படத்தில் காஜல் அகர்வால், ப்ரியங்கா ஜவால்கர், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே நாளில் தான் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் திரைக்கு வருகிறது.

எனவே ஒரே நாளில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Balakrishna and Vijay’s films to clash at box office during october 19

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் கிரிக்கெட்டர் தோனி.; இது லிஸ்ட்லயே இல்லையே.!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் கிரிக்கெட்டர் தோனி.; இது லிஸ்ட்லயே இல்லையே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது

‘எல்.ஜி.எம்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது சமீபத்தில் படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் தோனியும் நடித்துள்ளதாக வெளியான தகவலினால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

harish kalyan’s lgm movie dhoni played special role

கணவரை விவகாரத்து செய்யும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பட நடிகை??

கணவரை விவகாரத்து செய்யும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பட நடிகை??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி.

இதை தொடர்ந்து ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகை சுவாதி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே 2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சுவாதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை சுவாதி திடீரென்று நீக்கி உள்ளார்.

கணவருடன் சுவாதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் இதனாலேயே திருமண புகைப்படங்களை நீக்கி உள்ளார் என்றும் வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இச்செய்தி திரைத்துறையில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும், இரண்டு வருடத்துக்கு முன்பும் இதுபோன்ற வதந்தி பரவியது. அதனை சுவாதி மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress swathi divorcing to her husband

More Articles
Follows