விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் ‘பார்த்திபேந்திரன் பல்லவன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க, தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

சாகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை விக்ரம் பிரபு போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாயும் ஒளி நீ எனக்கு

vikram prabhu’s Paayum Oli Nee Yenakku release date announcement

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்; பெரும் அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்; பெரும் அதிர்ச்சியில் திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் நிதின் கோபி.

நடிகர் நிதின் கோபி திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன்.

இவர் விஷ்ணுவர்தன் நடித்த ‘ஹலோ டாடி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா என 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நிதின் கோபி வெள்ளித்திரை படங்களில் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார்.

இவர் பெங்களூர், இட்டமடுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் நிதின் கோபி வீட்டில் உள்ளபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, வரும் வழியிலயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

39 வயதான நிதினின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

kannada actor nithin gopi passes away at the age of 39

சீயான் விக்ரம் பாணியில் சிலம்பரசன்.; சிலிர்க்க வைக்கும் போட்டோஸ்

சீயான் விக்ரம் பாணியில் சிலம்பரசன்.; சிலிர்க்க வைக்கும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் நீண்ட தலை முடி மற்றும் நீண்ட தாடியுடன் காணப்பட்டார். அவரது இந்த ஸ்டைலிஷ் ஆன லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த படத்திற்கு பிறகு விக்ரம் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை விட ‘தங்கலான்’ படத்திற்காக நீண்ட தலை முடி தாடியை வளர்த்து வருகிறார்.

எனவே தான் ‘பொன்னியின் செல்வன் 2’ ப்ரமோசன்களில் அதே ஸ்டைலிஷ் லுக்குடன் வந்து ரசிகர்களையும் தமிழ் திரை பிரபலங்களையும் அதிர வைத்தார்.

சிம்பு

இந்த நிலையில் சீயானை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது மாஸான லுக்கில் வலம் வருகிறார்.

‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிலம்பரசன்.

இந்த நிலையில் தற்போது லண்டனில் இருக்கும் சிம்புவின் சில புகைப்படங்களை இணையத்தில் லீக்காகியுள்ளது.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து சிலிர்த்து வருகின்றனர்.

சிம்பு

simbu new look photos tranding in social media

முதல் பரிசு ரூ.25000 : கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி

முதல் பரிசு ரூ.25000 : கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராசர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (02.06.2023) மாலை நடைபெற்றது.

கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவைப் போற்றும் விதமாகவும் இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் இலக்கிய உலகினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கினார்.

அவரது நினைவாக ஹைக்கூ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையில், ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கவிதைகளை அனுப்பியிருந்தனர்.

வெவ்வேறு நடுவர் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெறத் தகுதியான கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த முன்னெடுப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி பங்காற்றினார்.

முதல் பரிசு ரூபாய் 25.000 பெறும் கவிதை: வானத்துச் சூரியனை
சிறிது தூரம் சுமந்து செல்கிறாள்
தயிர் விற்கும் பாட்டி. (சா. கா. பாரதி ராஜா செங்கல்பட்டு)

இரண்டாம் பரிசு ரூபாய் 15,000 பெறும் கவிதை: மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை. (பட்டியூர் செந்தில்குமார், துபாய்)

மூன்றாம் பரிசு ரூபாய் 10,000 பெறும் கவிதை மந்தையிலிருந்து தவறிச் செல்லும் ஒற்றை ஆட்டின் பாதை சரியாகவும் இருக்கலாம். (ச.அன்வர் ஷாஜி, நாமக்கல்)

முதல் மூன்று பரிசு பெற்ற மூன்று கவிதைகளோடு, தேர்வு செய்யப்பட்ட ஐம்பது கவிதைகளும் தொகுக்கப்பட்டு, விழாவில் ’டிஸ்கவரி பதிப்பகம்’ வாயிலாக நூலாக வெளியிடப்பட்டது.

விழாவுக்கான வரவேற்புரையை டிஸ்கவரி புக் பேலஸ் மு.வேடியப்பன் வழங்க, பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமை உரையை ஆற்றியதோடு நூலையும் வெளியிட்டார்.

விழா நோக்க உரையை என்.லிங்குசாமி வழங்க, ‘கவிக்கோவும், ஹைக்கூவும்’ என்ற தலைப்பிலான சிறப்புரையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆற்றினார்.

கவிக்கோ நினைவுரையை கவிஞர் ஜெயபாஸ்கரனும் கவிஞர் இளம்பிறையும் வழங்கினர். ஆர்.சிவக்குமார் (விஷ்ணு அசோசியேட்) வாழ்த்துரை வழங்கினார்.

மதிப்புரை தேர்வுக்கும் தொகுப்புக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி பொறுப்பேற்க, நன்றியுரையை கவிஞர், இயக்குநர் பிருந்தாசாரதி வழங்கினார். கவிக்கோ அப்துல் ரகுமானின் காலம் கடந்த நினைவலைகளோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

kaviko abdul Rahman memorial haiku competition 2023

ஒரு வழியாக ரசிகர்களுக்கு கிடைக்கப் போகும் ‘பொம்மை’ தரிசனம்.; ரெடி தானே.?

ஒரு வழியாக ரசிகர்களுக்கு கிடைக்கப் போகும் ‘பொம்மை’ தரிசனம்.; ரெடி தானே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மான்ஸ்டர்’ படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து ஜோடியாக நடித்துள்ள படம் ‘பொம்மை’.

காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாம்.

ராதாமோகன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இதன் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் சில காரணங்களால் நீண்டு கொண்டே போனது.

இந்த நிலையில் ஜூன் 16-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sj suryah’s bommai movie relase on june 16

சிங்கம் சிங்கிளா தான் வரும்.; உதயநிதிக்காக கோலிவுட்டே திரண்டாலும் மாஸ் காட்டிய ரஜினி

சிங்கம் சிங்கிளா தான் வரும்.; உதயநிதிக்காக கோலிவுட்டே திரண்டாலும் மாஸ் காட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஜூன் 1ம் தேதி மாலை உதயநிதி நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஏ ஆர் ரகுமான இசையமைத்துள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார்.

இது உதயநிதியின் (தற்காலிகமாக) கடைசி படம் என்பதால் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கிட்டத்தட்ட 4 மணி நேரமாக இந்த விழா நடைபெற்றது. கமல்ஹாசன், வெற்றிமாறன், மிஷ்கின், விஜய் ஆண்டனி, எஸ் ஜே சூர்யா, சிவகார்த்திகேயன், கவின், சூரி உள்ளிட்ட பல திரை பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘மாமன்னன்’ டிரெண்டாகிக் கொண்டே இருந்தது.

ஆனால் அதே சமயம் ஜூன் 1ம் தேதி மாலை ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ‘ஜெயிலர்’ & ரஜினிகாந்த் உள்ளிட்ட #ஹேஷ் டேக்குகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டானது.

‘மாமன்னன்’ படத்தை விட ‘ஜெயிலர்’ படமே வெகு நேரம் விடிய விடிய ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

rajini’s jailer movie Trending in twitter

More Articles
Follows