தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ பாடல் பாடியவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.
இவர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலையும் பாடியுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் சிறு வயது முதலே பாடத் தொடங்கி புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.
தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இந்த நிலையில், பாடகி ரக்ஷிதா மலேசியாவில் தான் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இன்று ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். மலேசியாவில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நான் இருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி கடும் சேதமடைந்தது. அந்த 10 நொடிகளில் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. ஏர்பேகுகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. நல்லவேளையாக நான், ஓட்டுநர் மற்றும் முன்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி ஆகிய மூவரும் சிறிய உள்காயங்கள் மற்றும் வெளிக்காயங்களுடன் தப்பித்தோம். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.
ponniyin selvanbsinger Rakshita Suresh met accident