உதயநிதி நடித்த சைக்கோ படத்தை யார் எல்லாம் பார்க்க கூடாது?

உதயநிதி நடித்த சைக்கோ படத்தை யார் எல்லாம் பார்க்க கூடாது?

Psycho posterமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‛சைக்கோ’.

நாயகிகளாக அதிதி ராவ், நித்யா மேனன் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் நாளை மறுநாள் ஜனவரி 24ல் வெளியாகவுள்ளது.

மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

இந்த நிலையில் இந்த படக்குழுவினர் இந்த படம் குறித்து கூறியதாவது…

சைக்கோ படம் பாருங்கள். ஆனால் கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் பார்க்க வேண்டாம்.

கொலைக்களமான படம் என்பதால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள்.

ஆனால் 18 வயது நிரம்பியவர்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்காத ரஜினி; நடிகர்கள் ஆதரவு… கட்சிகள் எதிர்ப்பு

மன்னிப்பு கேட்காத ரஜினி; நடிகர்கள் ஆதரவு… கட்சிகள் எதிர்ப்பு

Rajinikanthதுக்ளக் 50 ஆண்டு விழாவில் தந்தை பெரியார் மற்றும் கடவுள் ராமர் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இது தமிழக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும்பாலான கட்சிகள் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் தெரிவித்து இருந்தது.

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

ஆனால் பத்திரிகை செய்தியை நான் படித்தேன் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இதனால் அரசியல் களம் சூடானது. பல டிவிக்கள் இதை வைத்தே 3 நாட்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ, ஒளிப்பதிவாளர் நடிகர் நட்ராஜ், இயக்குனர் நடிகர் பேரரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஜினியின் பேச்சுக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அஜித் ஓகே… ரஜினி-விஜய்யை நம்பி பயனில்லை.; நயன்தாரா அப்செட்

அஜித் ஓகே… ரஜினி-விஜய்யை நம்பி பயனில்லை.; நயன்தாரா அப்செட்

Nayantharaஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா நடித்து வந்தாலும் அவ்வப்போது டாப் ஹீரோஸ் படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

இதற்காக ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளமும் பெற்று வருகிறார்.

அண்மையில் ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் விஸ்வாசம் படத்தில் மட்டும்தான் நயன்தாராவுக்கு பெயர் கிடைத்துள்ளது. சிறப்பான நடிப்பை கொடுத்துத்திருந்தார்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !

ஆனால் தர்பார் மற்றும் பிகில் படங்களில் நயன்தாராவுக்கு பெயர் கிடைக்கவில்லை. அவருக்கான காட்சிகளும் குறைவு.

விமர்சனங்களிலும் நயன்தாரா பெயர் பெரிதாக இடம் பெறவில்லை.

இதனால் நயன்தாராவும் அவரது ரசிகர்களும் கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

TR and Namithaதயாரிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள், வசனம், விநியோகம், கலை இயக்குனர் என அனைத்திலும் கலக்கும் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்.

ஒரே படத்திலேயே இத்தனையும் அவர் செய்துவிடுவார்.

சமீபகாலமாக அவர் படங்களை இயக்குவது இல்லை. அவர் இயக்கிய வீராசாமி படம் வந்து கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

அண்மையில் கவண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய படத்தில் இசை கலைஞராக நடித்து அந்த படத்தை தயாரிக்கிறாராம்.

இவருக்கு ஜோடியாக நமீதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

sid sriram2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.

‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வரும் பெருமைக்குரியது.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

இந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.

அனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.

பெயரை மாற்றி ‘மாயநதி’ படத்திற்கு இசையமைத்த பவதாரிணி

பெயரை மாற்றி ‘மாயநதி’ படத்திற்கு இசையமைத்த பவதாரிணி

singer bavatharini‛மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்,

‛பாரதி’ படத்திற்காக சிறந்த பாடகி தேசிய விருது பெற்றவர் இளையராஜாவின் மகள் பவதாரிணி.

நடிகை ரேவதி இயக்கிய ‛மித்ரு மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையும் அமைத்தார்.

அதன் பின்னர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் வந்தார்.

கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் பணிபுரியவில்லை.

தற்போது ‛மாயநதி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் அபி சரவணன், மற்றும் வெண்பா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய பவதாரிணி இசையமைத்துள்ளார்.

தற்போது தன் பெயருக்கு முன்னால் ராஜா என்ற பெயரை சேர்த்துள்ளார்.

More Articles
Follows