இசைஞானி வேற லெவல்.; 3 விருதுகளை வென்று மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பித்த ‘சைக்கோ’ தயாரிப்பாளர்

இசைஞானி வேற லெவல்.; 3 விருதுகளை வென்று மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பித்த ‘சைக்கோ’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜா’வுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு.’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் கலந்துகொண்டு,‘ 2021 ஆண்டு பாடலு’க்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் அந்த விருதை அனைத்தும் பார்வைத்திறன அற்றவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘மாயோன்’ என்ற பெயரில் புதிய படமொன்றை தயாரித்து வரும் இந்நிறுவனம், அதனை கோடைக் காலத்தில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.

இப்படத்தின் டீஸர் இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வைத்திறன் சவால் உள்ளவர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில், பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது.

இதற்கு மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது.

ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற மற்றொரு புதிய பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Psycho film win 3 awards at Mirchi music award

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இளையராஜா இசையில் உருவான இவரது பட பாடல்களும் பிரபலம். எனவே மைக் மோகன் என அழைத்தவர்களும் உண்டு்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் 2022 புத்தாண்டில் வெளியிட்டனர்.

இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ இணைந்திருக்கிறார். இந்த ஜோடி தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் 33 வருடங்களுக்கு முன்பு 1988ல் வெளியான ‘ஆத்ம கதா’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து தமிழில் நடிக்கவில்லை.

‘ஹரா’ படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது.

2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஹரா படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியில் தமிழ் புத்தாண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 தேதியிலும் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் 14 தேதியிலும் ரிலீசாகவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mohan’s Haraa joins Tamil New Year race

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து AK61 படத்திற்காக 3வது முறையாக அஜித் இயக்குனர் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவரே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்துடன் பாலிவுட் நடிகை தபு நடிக்கவிருக்கிறார்.

அஜித்தின் 61 வது படம் வங்கி திருட்டு & கொள்ளையர்களை மையப்படுத்தி உருவாகிறதாம்

இதற்காக ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போல ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2ஆம் வாரத்தில் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக சொல்லப்படுகின்றது.

அஜித் 61 படத்திற்கு வல்லமை என பெயரிட உள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் வலிமை என்ற டைட்டிலோடு ஒத்துப் போவதால் இந்த டைட்டில் வேண்டாம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ajith – H Vinoth’s AK 61 update is here

அந்த ஒரு வார்த்தை இதுதான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலர் தேதியை அறிவித்தார் நெல்சன்

அந்த ஒரு வார்த்தை இதுதான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலர் தேதியை அறிவித்தார் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி 4 மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

எனவே ‘பீஸ்ட்’ படம் டீசர் / ட்ரைலர் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் நெல்சன் தன் ட்விட்டர் பக்கத்தில்…. *நாளை* என ட்வீட் செய்து இருந்தார். நேற்று இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இது நிச்சயம் டீசர் அல்லது ட்ரைலர் வெளியீட்டுக்கான அறிவிப்பாகவே இருக்கும் என தெரிவித்து இருந்தோம்.

அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரைலர் வெளியாகும் என நெல்சன் & படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Beast trailer release date announced

அஜித்தை மிரட்டியவர் விஜய்க்கு வில்லனாகிறார்..; ஏப்ரல் 6ல் ‘தளபதி 66’ படப்பூஜை

அஜித்தை மிரட்டியவர் விஜய்க்கு வில்லனாகிறார்..; ஏப்ரல் 6ல் ‘தளபதி 66’ படப்பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள ‛பீஸ்ட்’ படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை 4 மொழிகளில் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ்.

இதன் பின்னர் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகுகிறது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .

இதில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரீத்தி சானோன் நடிக்கவிருக்கிறார்.

அவர் பெயர் தான் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.்

மற்றொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக விவேக் ஓபராய் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 66 movie pooja on April 6th

ஆண்ட்ரியாவின் NO ENTRY.; அஜிஸ் இசையில் நாளை பாடல்கள் வெளியீடு

ஆண்ட்ரியாவின் NO ENTRY.; அஜிஸ் இசையில் நாளை பாடல்கள் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாடகி என பன்முகத் திறமையாளர் ஆண்ட்ரியா.

தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இவர்.

பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய… ” ஊ சொல்றியா மாமா…” பாடல்… சூப்பர் ஹிட்டானது.

தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நாஞ்சில் இயக்கும் ‘கா’ என்ற படத்தில் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இத்துடன் NO ENTRY படமும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.

இயக்குநர் அழகு கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது,

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்கரவர்த்தி, இசையமைப்பாளராக அஜிஸ், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதில் ஆண்ட்ரியா உடன் ரண்யா, மும்பை சாக்‌ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ மானஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு.

இந்த நிலையில் நாளை NO ENTRY படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

Andrea starrer no entry album will be out tomorrow

More Articles
Follows