நாகேஷ் பட டைட்டிலை ஜெயம் ரவி படத்துக்கு வைத்த கிருத்திகா உதயநிதி

நாகேஷ் பட டைட்டிலை ஜெயம் ரவி படத்துக்கு வைத்த கிருத்திகா உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வணக்கம் சென்னை’, ‘காளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் உதயநிதி மனைவி கிருத்திகா.

தற்போது இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வருகிறார். நித்யாமேனன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு, வினய் ராய், லால் என்கிற எம்.பி. மைக்கில் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

கடந்த 1964-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற பெயரில் படம் வெளியாகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

காதலிக்க நேரமில்லை

Jayamravi and Nithyamenon starring Kadhalika Neramillai

அனில் – சௌந்தரராஜா – ராமச்சந்திரன் கூட்டணியின் ‘சாயாவனம்’ கொல்கத்தா திரைப்பட விழாவிற்கு தேர்வு

அனில் – சௌந்தரராஜா – ராமச்சந்திரன் கூட்டணியின் ‘சாயாவனம்’ கொல்கத்தா திரைப்பட விழாவிற்கு தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அனில்பாபு. இவர் ’சாயாவனம்’ என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர் 36+க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணசித்திர கேரக்டர் என பல வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் ‘ஒரு கனவு போல’ & ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

இவர்களுடன் தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் படத்தொகுப்பு செய்ய போலி வர்கீஸ் இசையமைக்கிறார். தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க மூடுபனி மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகும். தேவானந்தா நடிக்கும் சீதை கேரக்டரைச் சுற்றி நகரும் கதையாகும்.

இந்த நிலையில் 29ஆவது கொல்கத்தா திரைப்பட விழாவிற்கு ‘சாயாவனம்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Soundararaja starrer Saayavanam selected in 29th Kolkata International Film Festival 2023

வில்லன் வேடங்களில் நடிக்க முடியாது.. விஜய்சேதுபதி திடீர் முடிவு ஏன்.?

வில்லன் வேடங்களில் நடிக்க முடியாது.. விஜய்சேதுபதி திடீர் முடிவு ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ வேடம் என்றாலும் வில்லன் வேடம் என்றாலும் எந்த கேரக்டருக்கும் நான் ரெடி என்பதாக பல படங்களில் வில்லனாக நடித்து வந்தார் விஜய்சேதுபதி.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு வில்லனாக ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

எனக்கு நிறைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.. ஆனால் எந்த விதத்திலும் ஹீரோவின் கேரக்டரை மிஞ்சி விடக்கூடாது என்பதற்காக எனக்கு நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது.

எனவே வில்லன் கேரக்டரை ஏற்கக் கூடாது என முடிவெடுத்து விட்டேன்” என தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi wont act in villain roles

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகனாக விஜய்

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகனாக விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநகரம்’ என்ற முதல் படத்தை இயக்கிய போதே தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டவர் லோகேஷ் கனகராஜ்.

அதன் பின்னர் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இதனையடுத்து விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்த நடித்த ‘மாஸ்டர்’ என்ற படத்தை உருவாக்கி இருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் தன்னுடைய அபிமான நடிகருக்கு ‘விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை உருவாக்கி கொடுத்தார். இந்த படம் 400+ கோடிக்கு மேல் வசூலித்து கமல்ஹாசனுக்கு பெரிய மாஸ் ஓபனிங் படமாகவும் லாபகரமான படமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் விஜய் நடித்த ‘லியோ’ படத்தை உருவாக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று 400 கோடி வசூலை எட்டியது.

'உறியடி' விஜயகுமார்

விரைவில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் 2024 ஏப்ரலில் தொடங்கப்படும் என லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் லோகேஷ். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்தப் படத்தில் நாயகனாக ‘உறியடி’ விஜயகுமார் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். வழக்கம் போல லோகேஷ் கனகராஜ் பட சாயலில் ரத்தம் தெறிக்க இந்த போஸ்டர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

'உறியடி' விஜயகுமார்

Lokesh Kanagaraj new production first movie starring Vijayakumar

இந்திய நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்த வாமிகா கபி

இந்திய நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்த வாமிகா கபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாமிகா கபி ஒரு பிரபலமான நடிகை. பஞ்சாப்பை பூர்விகமாகக் கொண்டவர். ஹிந்தி நடிகையான இவர் தமிழில், ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த இதர படங்கள்.. ஜெனி, டிக்கி டாக்கா, காளி ஜோட்டா, கால்வாக்டி மற்றும் டோர்பீன்.

ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள வாமிகா தமிழில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு ‘இறவாக் காலம்’ படத்தில் நடித்தார்.

வாமிகா கபி

தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘ஜீனி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் முதல் நாயகியாக தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐ எம் டி பி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் வாமிகா கபி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீனி

Wamiqa Gabbi at 4th Position in IMDbs most popular Indian star.

விஐபி-க்காக மாதம்பட்டி ரங்கராஜனிடம் சமைக்க சொல்லி கன்டிசன் போட்ட விஜய்

விஐபி-க்காக மாதம்பட்டி ரங்கராஜனிடம் சமைக்க சொல்லி கன்டிசன் போட்ட விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவில் அறுசுவை விருந்துகளின் மன்னன் என்றே சொல்லலாம். அவரது பெயர்தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருக்கும் இவர் சுவையான ராசியான சமையல் கலைஞர் என்றும் சொல்லலாம். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்து தமிழக ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான்.

இந்த நிலையில் இவர் நடிகர் விஜய் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில்.. “ஒரு முறை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் இடமிருந்து என் அலைபேசி நம்பரை கேட்டு பின்னர் அழைப்பு வந்தது.

அதன் பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசி விஜய் இடம் கொடுத்தார். என் வீட்டிற்கு ஒரு விஐபி வருகிறார் அவருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவு வீணாக கூடாது. நிறைய ஐட்டங்கள் வேண்டாம்.. குறைவான வகைகள் இருந்தால் போதும்.. அது அந்த விஐபிக்கு மறக்க முடியாத விருந்தாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்படி அவரும் நானும் கலந்து பேசி ஒரு அருமையான பார்ட்டியை உருவாக்கி கொடுத்தோம். அந்த விஐபி தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

அதன் பின்னர் இதுவரை நான்கு முறைகளுக்கு மேல் விஜய் வீட்டில் என் கைப்பட சமைத்துக் கொடுத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.

Madhampatty Rangaraj speaks about Vijay hospitality to Shahrukh

More Articles
Follows