ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.

முரசொலி முதல் பெரியார், ராமர் ஆகியோர் பற்றி பேசியிருந்தார்.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் ரஜினி உருவ பொம்மையை எறிக்கவும் திட்டமிட்டனர்.

மேலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், ரஜினி வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்த்தை பார்த்தோம்.

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

அந்த கழகத்தினர் வரும் ஜனவரி 23-ம் தேதி காலை 10 மணி அளவில் ரஜினி மன்னிப்பு கேட்காவிடில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகை இட உள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் திடீரென போராட்டத்தை இன்று ஜனவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

மேலும் அந்த எதிர்ப்பை சமாளிக்க ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களை தாண்டி எவரும் வர முடியாது என சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த போராட்டம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிகிறது.

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden

Overall Rating : Not available

Latest Post