தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம்.
இவர் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்றது.
மேலும் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தங்கமீன்கள் & சவரக்கத்தி & சைக்கோ ஆகிய படங்களிலும் நடிகராக நடித்துள்ளார் இயக்குனர் ராம்.
இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி & அஞ்சலி ஜோடியை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார் ராம்.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய மதி.VS படத்தொகுப்பு செய்து வருகிறார்.
நடன இயக்குனராக சாண்டியும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வாவும் பணியாற்றியுள்ளனர்.
V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு “ஏழு கடல் ஏழு மலை” என பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் டைட்டிலை அறிவிக்கும் வகையில் டைட்டில் அறிவிப்பு வீடியோவையும் படக்குழுவி வெளியிட்டுள்ளது.
இன்று அக்டோபர் 11ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின்பாலி ஆகியோரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Nivin Pauly and Anjali Joining movie title release