திகிலுடன் ‘ட்ரெயின்’-ல் பயணிக்கும் தாணு – மிஷ்கின் – விஜய்சேதுபதி

திகிலுடன் ‘ட்ரெயின்’-ல் பயணிக்கும் தாணு – மிஷ்கின் – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்தி உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது.

எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.

டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

ட்ரெயின்

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

*ட்ரெயின் (Train)* படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் ,
கல்யாணம் (Knack Studios)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

*நடிகர்கள்:*
விஜய் சேதுபதி
டிம்பிள் ஹயாதி
ஈரா தயானந்த்
நாசர்
வினய் ராய்
பாவனா
சம்பத் ராஜ்
பப்லு பிருத்விராஜ்
கே.எஸ்.ரவிக்குமார்*
செல்வா சந்திரசேகர்
யூகி சேது
கணேஷ் வெங்கட்ராமன்
கனிஹா
தியா சீதிபள்ளி
சிங்கம் புலி
ஸ்ரீரஞ்சனி
அஜய் ரத்னம்
திரிகுன் அருண்
ராச்சல் ரபேக்கா

*தொழில்நுட்ப குழு:*

இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்
தயாரிப்பாளர்: ‘கலைப்புலி’ எஸ் தாணு
நிர்வாக தயாரிப்பு : எல்.வி.ஸ்ரீகாந்த்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்
கலை இயக்குனர்: வி.மாயபாண்டி
ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்
படங்கள்: ஜெ.ஹரிசங்கர்
ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்
தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு : *ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), Team AIM*

ட்ரெயின்

Thanu Mysskin Vijaysethupathi new combo movie titled Train

கௌதம் மேனனுக்கு 60 கோடி கடன்..; ரிலீஸ் செய்யும் சக்தி இருந்தால் படமெடுங்கள்.. – கே.ராஜன்

கௌதம் மேனனுக்கு 60 கோடி கடன்..; ரிலீஸ் செய்யும் சக்தி இருந்தால் படமெடுங்கள்.. – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’.

பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

“இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப்பெரிய படமான துருவ நட்சத்திரத்திற்கு கூட ரிலீசாக முடியாத அளவிற்கு பொருளாதார பிரச்சனை. அதற்கு காரணம் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு இருக்கும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கடன்.

வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 பெரிய படங்கள் வரை தான் ரிலீஸ் ஆகின்றன. மற்ற நேரங்களில் தியேட்டர்கள் சின்ன படங்களின் ரிலீஸுக்கும் இடம் கொடுக்கிறார்கள். படம் எடுக்க வருபவர்கள் யாரையும் நம்பாமல் படம் எடுத்து தங்களுக்கு ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாருங்கள்.

இதுவரை கிட்டத்தட்ட 30 சின்ன பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பி வாங்க முடியாமல் தவித்து வருகிறேன். அவர்கள் கையில் படம் இருக்கிறது. சென்சாரும் வாங்கி விட்டார்கள். ஆனால் படங்களை ரிலீஸ் பண்ண முடியவில்லை. இன்று பெரிய படங்கள் 800 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்துக் கொண்டு விடுவதால் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்காரர்களும் பெரிய படங்களுக்கே ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு வருடத்தில் ஏற்படும் இழப்பை அதை வைத்து தான் சரி கேட்டுகிறார்கள். சினிமாவிற்கு இன்று சிரமம் தலைக்கு மேல் இருக்கிறது இன்று கூறினார்

தயாரிப்பாளர் கிருஷ்ணமணி பேசும்போது, “நான் சிங்கப்பூரில் பல தொழில்கள் செய்து வருகிறேன். தஞ்சாவூரில் பிறந்து சென்னையில் பணியாற்றியதால் சினிமாவில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். அப்போதுதான் இயக்குனர் கிஷன்ராஜை சந்தித்தபோது இந்த படத்தின் கதையை கூறினார். குறைந்த நாட்களிலேயே இந்த படத்தை எடுத்துக் கொடுத்தார். இது போன்ற நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவருவதற்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்

இயக்குனர் கிஷன்ராஜ் பேசும்போது, “படத்தின் தயாரிப்பாளருக்கு முழு கதையும் தெரியாது. ஒரு அவுட்லைன் மட்டும்தான் கூறினேன். என்னையும் எனது குழுவையும் நம்பி முதலீடு செய்து இப்போது இசை வெளியீட்டு விழா வரை கொண்டு வந்துள்ளார். மதுரை பக்கத்தில் உள்ள தென்னமநல்லூர் என்கிற ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஊர் மக்கள் எங்களை தங்கள் குடும்பத்தினராகவே நடத்தினார்கள். அவர்களுக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படத்தின் பின்னணி இசை உருவாக்கத்தின் போதே இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவிடம் இதை பார்த்துவிட்டு உங்களுக்கு படம் வெளிவருவதற்குள்ளாகவே புதிய வாய்ப்பு தேடி வரும் என்றேன். அதேபோல அவருக்கு ஒரு பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ZEE MUSIC.CO நிறுவனம் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

*நடிகர்கள்*

கார்த்திக், மனோஜ், ரஷ்மிகா திவாரி, வட்டகரா சதீஷ்

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

இயக்குநர் ; கிஷன்ராஜ்

இசையமைப்பாளர் ; விக்னேஷ் ராஜா

ஒளிப்பதிவு ; LD

படத்தொகுப்பாளர் ; ராம்நாத்

பாடலாசிரியர் ; ஹரிஹர சுப்பிரமணியம், வி ஜே விஜய்

களை ; பழனிக்குமார் M

மக்கள் தொடர்பு ; கேப்டன் MP ஆனந்த்

If you have power to release then produce the movie says K Rajan

அமீர் துணிச்சலானவர்.. ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்கனும்.. வீடியோவை நீக்க வேண்டும்.. – எஸ்வி சேகர்

அமீர் துணிச்சலானவர்.. ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்கனும்.. வீடியோவை நீக்க வேண்டும்.. – எஸ்வி சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’.

பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ‘எமகாதகன்’ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி சேகர், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது…

“வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல் அதேசமயம் அனைவரும் புழங்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. இன்று சின்ன படங்கள் தியேட்டருக்கு வருவது சிரமமாக இருக்கிறது.

பெரிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சின்ன படங்களையும் தயாரித்து ஒரே நேரத்தில் திரைக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சின்ன படங்கள் மீதும் கவனம் திரும்பும்.

திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட்டிருந்தால் அந்த படங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. அதை தமிழக முதல்வர் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலையில், அப்படியே கிடைத்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியாத சூழலில் இந்த மானியம் தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். அதேபோல தனிப்பட்ட முறையில் யூட்யூப் நடத்துபவர்களுக்கு என ஒரு நல வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் முதல்வரின் கோரிக்கைக்கு வைக்கிறேன்.

எனக்கு இயக்குனர் அமீரை ரொம்பவே பிடிக்கும். தனது சொந்தப் பெயரை எங்கேயும் மறைத்துக் கொள்ளாமல் அதை துணிச்சலாக எல்லா இடத்திலும் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்தவர். ஒரு தயாரிப்பாளரிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை திரையில் கொண்டு வருவது ஒரு படைப்பாளனால் தான் முடியும். படம் வெளியாகி அதுவும் ஜெயித்த பிறகு பத்து வருடம் கழித்து அதைப்பற்றி தவறாக பேசுவது என்பது சரியானது அல்ல.

இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் மன்னிப்பு கேட்பதுதான் சரியானதாக இருக்கும்..

அதுமட்டுமல்ல ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்த அந்த வீடியோவையும் யூட்யூப்பில் இருந்து நீக்குவது தான் இன்னும் சரியாக இருக்கும். பிடித்ததை செய்தால் அவரை ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசுவதும் நமக்கு பிடிக்காததை செய்தால் அவரை என்ன வேண்டுமானாலும் அவமரியாதையாக பொதுவெளியில் பேசுவதும் தவறான விஷயம்.

நாம் ஒருவரை குறை சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். படம் பார்க்க செல்பவர்கள் படத்திற்கு என்ன சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை கவனித்து தியேட்டர்களுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் யு சர்டிபிகேட் பெற்ற சில படங்களுக்கு மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏ சர்டிபிகேட் தான் கொடுக்கப்படுகிறது. காரணம் அது சர்வதேச நிலைப்பாடு. ஆனால் சென்சார் செய்யப்படும் இடங்களில் உள்ள சில அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக இது போன்று நிகழ்கிறது. எல்லா இடத்திலும் தவறுகள் நடந்தாலும் சினிமா மற்றும் அரசியலில் அவை மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன” என்றார்..

S Ve Sekar condemns Gnanavelraja and supports Ameer

ஒரே நாளில் மோதும் கணவன் அசோக் – மனைவி கீர்த்தி படங்கள்.; வெற்றி யாருக்கு?

ஒரே நாளில் மோதும் கணவன் அசோக் – மனைவி கீர்த்தி படங்கள்.; வெற்றி யாருக்கு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது வழக்கமான ஒன்று. சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, கௌதம் – மஞ்சிமா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் இந்த வரிசையில் இணைந்த ஜோடி அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன். இவர்கள் இருவரும் கடந்து செப்டம்பர் மாதம் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள ஆவார்.

இவர்கள் இருவரும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். அதன்படி திருமணமும் செய்து கொண்டனர்.

சபாநாயகன்

இந்த நிலையில் அசோக் செல்வன் – மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சபாநாயகன்’ என்ற படம் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.

அதுபோல கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்துள்ள ‘கண்ணகி’ என்ற படமும் அதே நாளில் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.

‘கண்ணகி’ படம் போஸ்டரில் கீர்த்தி கர்ப்பமாக இருப்பது போல அவரின் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு கீழே செல்வது போலவும் அதை ஒரு நபர் தீயில் பற்ற வைப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்ணகி

Ashok Selvan and Keerthy Pandian movies clash

ஷாரூக்கானின் ‘டங்கி’ படத்தை காண தாயகம் திரும்பும் 500+ ரசிகர்கள்

ஷாரூக்கானின் ‘டங்கி’ படத்தை காண தாயகம் திரும்பும் 500+ ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100க்கும் மேற்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள் டங்கி படத்தைப்பார்க்க ஏன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார்கள் இதோ அதன் காரணம் இங்கே…

ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK ரசிகர்கள் இந்த டிசம்பரில் டங்கியைப் பார்க்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

திரைப்படத்தின் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தூண்டும் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியுள்ளது டங்கி.

இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து SRK திரைப்படத்தை இந்தியத் திரையரங்கில் அனுபவிப்பதன், தனித்துவமான மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் ஏங்குகிறார்கள். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகிற இந்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்திற்காக, உலகளாவிய கொண்டாட்டத்தை உருவாக்க உள்ளனர்.

ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள், ஷாரு எனும் நட்சத்திரத்தை உயிராக கொண்டாடுவதற்கும், அவரது படங்களை புதுமையான வழிகளில் விளம்பரப்படுத்துவதற்கும் பெயர் பெற்றவை, இதோ மீண்டும் டங்கி படத்திற்காக தங்கள் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

படத்தின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளனர், இப்படத்தில் ஷாருக் கேரக்டர் தனது அன்புக்குரியவர்களுக்காக நாட்டின் எல்லைகளைக் கடக்கிறார். டங்கி படத்தின் பாத்திரங்கள் நாட்டின் எல்லைகளை சட்டத்திற்கு எதிராக கடப்பதாக கதை அமைந்திருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க சட்டப்பூர்வமான பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அன்புக்குரியவர்களுக்காக ஒரு அசாதராண பயணத்தை மேற்கொள்ளும் உணர்வு மட்டுமே முக்கியம் என்பது, ரசிகர்களிடையே வலுவாக எதிரொலிக்கிறது, படத்தின் கதையுடன் ஒரு அழகான இணைப்பை இது உருவாக்கியுள்ளது.

டங்கி படத்தைக் காண வரும் ரசிகர்கள் வசிக்கும், பல நாடுகளிலும் அங்குள்ள திரையங்குகளில் டங்கி திரையிடப்படுகிறது.. ஆனாலும், ரசிகர்கள் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தங்கள் அன்புக்குரிய SRK படத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புகிறார்கள். விடுமுறைக் காலம். நேபாளம், கனடா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க, தங்கள் தாய்நாடான இந்தியாவிற்கு பயணம் செய்கிறார்கள், பயணிக்கும் ரசிகர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், இது சுமார் 500+க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டங்கி திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டங்கி டிராப் 1 (வீடியோ ) மற்றும் மனதைக் கவரும் டங்கி டிராப் 2: லுட் புட் கயா பாடல் ஏற்கனவே ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர்.

Shahrukh fans returns to India to watch Dungi FDFS

சென்னை சிட்டி மெட்ரோவில் ‘தி வில்லேஜ்’ டீம்..; பயணிகளை பரவசப்படுத்திய ஆர்யா

சென்னை சிட்டி மெட்ரோவில் ‘தி வில்லேஜ்’ டீம்..; பயணிகளை பரவசப்படுத்திய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரைம் வீடியோ தமிழ் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக , சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்தது.

சென்னை மெட்ரோ பயணிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு ஆச்சரிய நிகழ்வை பிரைம் வீடியோ நடத்தியது.

தி வில்லேஜ் சீரிஸில் வரும் ஹாரர் நிகழ்வை, அந்த சீரிஸில் நடித்த நடிகர்களைக் கூட்டி வந்து மெட்ரோ ரெயிலுக்குள் நடத்தி, பயணிகளை எதிர்பாராத ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது தி வில்லேஜ் படக்குழு.

இக்குழுவில் தி வில்லேஜ் நாயகன் முன்னணி திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொள்ள பயணிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களும் இந்த குழுவில் கலந்துகொண்டார்.

கிராஃபிக் நாவலின் திகில் அனுபவத்தை திரையில் கொண்டு வந்த படக்குழு, ரீலில் இருந்து நிஜத்திற்குக் கொண்டு வந்தது, நிச்சயமாக மெட்ரோ பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

வீடியோவை இங்கே பாருங்கள்: XX
https://x.com/PrimeVideoIN/status/1729449366426124299?s=20

இந்தத் சீரிஸை, இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Aryas The Village team surprise visit at Chennai metro

More Articles
Follows