சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான “SIIMA 2020″ திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் ‘மாயோன்” படம் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், தனது தயாரிப்பில், கடந்த வருடம் மிகப்பெரும் வெற்றி பெற்ற “சைக்கோ” திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றதற்கு, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை சாத்தியமாக்கிய “SIIMA 2020” திரை விருது குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார். முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் தான் படத்தின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணமென அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ‘மாயோன்’ திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி, அவரது இசை படத்தின் மிகப்பெரும் தூணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“சைக்கோ” திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( Double Meaning Productions ), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்).

ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

Mysskin’s Psyco nominated for 9 categories in SIIMA 2020 awards

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்.; சூரியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்.; சூரியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது.

அவர் அளித்த பேட்டி:

இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே?

இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வருவது தான் முதலில் நிம்மதியை தருகிறது.

படப்பிடிப்புக்காக தாடி எடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் எடுக்க சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முன்பு தாடியில் எடுத்த போட்டோக்களே வைரலாகி வெற்றி அண்ணன் முதல் ரஜினி சார் வரை பலரும் பாராட்டினார்கள்.

இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் உற்சாகப்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ரசிகர்கள் என் பிறந்தநாளுக்காக பல நலத்திட்டங்கள் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும்.

கதையின் நாயகனாக விடுதலை படம் குறித்து?

இறைவன் அருளாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன்.

சின்ன வேடங்களில் நடிக்கும்போது நமக்கும் கைதட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன்.

இவை அனைத்துமே நடந்தது. கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்துகொண்டுதான் இருந்தன.

காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன்.

காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில் தான் நடிக்க வேண்டும் என்பது கட்டாயமா? அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன். எனவே அப்படி களம் இறங்கும்போது அது கவனிக்க வைக்கும் நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும் கதையாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

என் இன்னொரு பக்கத்தை காட்டும் கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. அசுரன் படத்துக்கு முன்பு பேசியது. அசுரன் படம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வரிசைகட்ட நம் படம் தாமதம் ஆகலாம் என நினைத்தேன்.

ஆனால் வெற்றி அண்ணன் இந்த படத்தை தொடங்கியது அவரது பெரிய மனதை காட்டியது. அவர் அழைத்ததே ஆச்சர்யமாக இருக்க இன்னொரு ஆச்சர்யமாக உடனே அட்வான்சை கொடுத்தார். அடுத்து பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பு என்றதும் மகிழ்ச்சி ஆனேன்.

முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தாலும் இது பல கோடிக்கு சமம் அல்லவா? நேராக சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு குடும்பத்திடம் சொன்னேன்.

மேனேஜருக்கே அதன் பின்னர் தான் சொன்னேன். விடுதலை தொடங்கியதை விட இப்போது இன்னும் பெரிய படமாகி விட்டது. இந்த படத்தில் ஒரு நடிகனாக இருப்பதே பெரிய பாக்கியம் தான். வெற்றி அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.

அவரது அயராத உழைப்பால் மிக சிறந்த படமாக தயாராகி வருகிறது. படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை.

சிறுவயதில் தீபாவளிக்கும் முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அதுபோன்ற மனநிலையில் இருந்தேன். 45 ஆண்டுகளாக இசைக்கே ராஜாவாக விளங்குபவரின் இசையில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அவரை சந்தித்தபோதும் மெய்மறந்தேன்.

அதேபோல் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்.

விடுதலை படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்ததாக கேள்விப்பட்டோமே?

படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைவருமே தங்களது அபார உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை பொறுத்தவரை லோகேஷன் தான் முதல் நாயகன். இரண்டாவது கதை.

அதன் பின்னர்தான் நடிகர்கள். 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மலை கிராமத்துக்கு செல்லவே 3 மணி நேரம் ஆகும். அந்த ஊரில் மொத்தமே 75 குடும்பங்கள் தான்.
எங்கள் படக்குழுவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள்.

அந்த கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் சென்று படப்பிடிப்பு எடுக்கவேண்டும். எல்லோருமே கடுமையாக சிரமப்பட்டோம். ஆனால் யாருமே முகம் சுளிக்கக்கூடவில்லை. காரணம் வெற்றி அண்ணன் மீதான அன்பு. அனைவருமே அவர்மீது அத்தனை அன்பு செலுத்துகிறார்கள்.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அனுபவம்?

இந்த பிறந்தநாளை போலவே வரும் தீபாவளியும் சிறப்பானதாக அமையப்போகிறது. அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக்கொண்டது.

வீட்டில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்றால் அங்கே சாருக்கும் அடுத்த அறையில் நான். சந்தோஷத்தில் பறக்கவே தொடங்கினேன்.

படப்பிடிப்புக்கு நான் சென்றபோதே அவர் தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரை பார்க்க காத்திருந்தேன். அவரை சந்தித்தபோது இது கனவா? என்று கிள்ளிக்கொண்டேன். ஓ..சூரி எப்படி இருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டார்.

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லிவிட்டு அந்த படங்களை நினைவுபடுத்தி சொன்னார். அதன் பிறகு செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமர வைத்து உரையாடி கூச்சம் போக்கினார்.

அவர் பேச பேச சிறுவயதில் அவர் படங்களை பார்க்க பட்ட பாடுகள் தான் நினைவுக்கு வரும். தளபதி படத்தின் போது அந்த ஸ்டில்களை புது சட்டைகளில் வைத்து அயர்ன் பண்ணி ஒட்டி அணிந்துகொண்டு படத்துக்கு போனது, அதற்காக வீட்டில் வாங்கிய அடிகள் இதெல்லாம் நினைவுக்கு வரும்.

அவர் சினிமாவில் வரும்போது தொண்டை வலிக்கும் அளவுக்கு கத்தியிருக்கிறேன். ஒரு மிக பெரிய இயக்குனர், தலை சிறந்த சூப்பர் ஸ்டார் என அண்ணாத்த படமே என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போயே விடுகிறது. அப்படி ஒரு டவுன் டூ எர்த் மனிதராக பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படி போட சொல்லி இருக்கிறார் என்று கேள்விபட்டதும் நான் விமானத்துக்கு மேலேயே பறந்து தான் வந்தேன்.

அந்த பயணத்தின்போது என்னை பார்த்து ‘நான் உங்களுக்கு கம்ஃபர்டிபிளாக இருந்தேனா…? என்று கேட்க அசந்துபோனேன்.

நான் சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளையே பார்த்ததுபோல் இருக்கிறது என்றேன். வாழ்த்து சொன்னார்.

டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எப்படி இருக்கிறது?

சிவாவுடன் எப்போதுமே நமது கூட்டணியில் நகைச்சுவை களை கட்டும். ஆனால் இது அப்படி இருக்காது. பதிலாக எமோஷனலான ஒரு அண்ணன் மாதிரியான கதாபாத்திரம். நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். பொறுப்பான அண்ணனாக ஒரு குணச்சித்திர வேடம்.

சூர்யாவுடன் நடிக்கும் எதற்கும் துணிந்தவன்?

அது திரையரங்குகளில் ஒரு திருவிழாவாக இருக்கும். பாண்டிராஜ் சார் படங்களுக்கே உரிய குடும்ப செண்டிமெண்டுடன் ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும்.

வழக்கமான காமெடியனாக அல்லாமல் வித்தியாசமாக நாயகனுக்கு எதிராக இருக்கும் வேடம். கதாநாயகியின் தாய்மாமா வேடம்.

உடன்பிறப்பு படத்திலும் பேசப்படும் கதாபாத்திரமாமே?

எனக்கு பிடித்த 2, 3 படங்களில் கத்துக்குட்டி படமும் ஒன்று. அதே போல் என் மனதுக்கு நெருக்கமான அண்ணன்களில் இரா.சரவணனும் ஒருவர். உடன்பிறப்பு படத்தில் பிரிந்துபோன அண்ணன் தங்கை இரு குடும்பங்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கதாபாத்திரம்.

காமெடியை தாண்டி உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்துடன் சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தும் படத்தில் இருக்கும். இரு குடும்பங்களை இணைக்க நான் எடுக்கும் முயற்சிகளால் ரசிகர்களை அழை வைத்துவிடுவேன்.

சசி அண்ணனுடன் கொம்பு வெச்ச சிங்கமடா படத்திலும் நல்ல கதாபாத்திரம். முகேன் ராவ் உடன் நடிக்கும் வேலன் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பற்றி?
சமூக விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக்கொண்டது இல்லை. கொரோனா சமயத்தில் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தது. கண்ணுக்கே தெரியாத வைரஸ் மக்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டது ரொம்பவே மனதை பாதித்தது.

முன்கள பணியாளர்களின் சிரமங்களை பார்த்த பிறகே இதில் ஏதாவது நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் செயலானது. என்னால் முடிந்ததை செய்தேன். அதற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது என் சமூக பொறுப்பை அதிகரித்திருக்கிறது.

கொரோனா நமக்கு பல பாடங்களையும் கொடுத்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. சொந்த பந்தமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையே காட்டிவிட்டது.

கதையின் நாயகன், காமெடி, குணச்சித்திரம் மூன்றிலும் பயணிக்க திட்டமா?

நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான். இது தான் என்று மட்டும் அல்லாமல் எல்லாவித கதாபாத்திரங்களிலும் நடித்து பேர் எடுக்க வேண்டும்.

அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான ராம் அண்ணன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் ஒரு படத்திலும் முத்தையா அண்ணன் இயக்கத்தில் கார்த்தி அண்ணன் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறேன்.

என்ன கதாபாத்திரம் என்பது அடுத்த விஷயம். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். அதற்காக கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறேன்.

இவ்வாறு சூரி மனம் திறந்து பேசினார்.

Actor Soori recent speech about super star

அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி

அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.

இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார்.

தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது.

சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,
சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

#AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு நான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுகிறேன். நாம் அடுத்த படத்தில் இணைவோம் என்று பிரகாஷ் ராஜ் கூறியதை தொடர்ந்து, எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சமுத்திரகனி நடித்து வருகிறார்.

அருண் விஜய், ப்ரியா பவானிசங்கர், சமுத்திரகனி மற்றும் பெரும் நட்சத்திரங்கள் பங்கேற்க “AV33” படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பழனியை தொடர்ந்து படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடரும்.

நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த, குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Samuthirakani replaces Prakash Raj in director Hari’s film

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் & விஜய்சேதுபதி இணையும் ‘மைக்கேல்’

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் & விஜய்சேதுபதி இணையும் ‘மைக்கேல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.

‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’.

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக ‘மைக்கேல்’ படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த படம் குறித்து ரஞ்சித் ஜெயக்கொடி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

A wise man once said.,
மனிதன் இயல்பாகவே அன்பை விரும்பும் சாதுவான பிராணி அல்ல. எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோமென எதிர்பார்த்து திருப்பி அடிக்கத் தயாராவே இருக்கக் கூடிய மூர்க்கமான மிருகம்.
Here is the Title Poster of my Next
#MICHAEL?
@VijaySethuOffl ❤️
@sundeepkishan ❤️ https://t.co/IE5gA61sOH

Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Titled Michael

இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா, மாநாடு ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கெளதம் மேனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது புதிய படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிம்பு, ”எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இருண்ட இரவுகளுக்குப் பிறகும் பிரகாசமான ஒளி இருக்கிறது. நன்றி இறைவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்துடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் சிம்புவே தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Silambarasan TR’s Vendhu Thanindhathu Kaadu second schedule begins.

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தற்போது தமிழக அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தியேட்டர்கள், 50% இருக்கையுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன்சிங் நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படங்களின் சென்சார் சான்றிதழ் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு படத்திற்கும் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

மேலும் ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படம் செப்டம்பர் 9 அன்றும், விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘தலைவி’ படமும் செப்டம்பர் 10ல் வெளியாகிறது.

தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மேலும் 3-4 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, டாப்சி பண்ணு நடித்த அனபெல் சேதுபதி படம், ‛டிஸ்னி ஹாட்ஸ்டாரில்’ செப்டம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறந்தும் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால் இது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Theatre owners dissappoints with Vijay Sethupathi’s decision

More Articles
Follows