நாங்க சேர்ந்தா தான் நாடு உருப்படுமா.?; யாரை சொல்கிறார் மிஷ்கின்.?

நாங்க சேர்ந்தா தான் நாடு உருப்படுமா.?; யாரை சொல்கிறார் மிஷ்கின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் நிறைய படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது.

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கும்போது இவருக்கும் நடிகர் விஷாலுக்கு மோதல் ஏற்படவே அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

தற்போது விஷால் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் விஷால் உடன் மீண்டும் இணைவீர்களா? என்ற கேள்விக்கு மிஷ்கின் பதில் அளிக்கையில்.

“எனக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது முன்பெல்லாம் கோபமாக இருந்தேன் இப்போது அந்த கோபம் குறைந்து விட்டது.

இனிமேல் அவனுடன் சேர்ந்து என்னால் படம் பண்ண முடியாது. ஒருவேளை விஷால் என்னிடம் கேட்டால் அவனுக்காக படம் இயக்குவேன். நானாக சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன்.

நாங்கள் இணைந்தால் தான் இந்த நாடு உருப்படப்போகுதா என்ன? அது அப்படியே இருக்கட்டும்.

ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் வணக்கம் சொல்லுவேன் கட்டிப்பிடித்துக் கொள்வேன் அவ்வளவுதான்.” என மின்னலாக பதில் அளித்துள்ளார் மிஷ்கின்.

Mysskin talks about working vishal again?

ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த்.; பிரபு சொன்ன சீக்ரெட்!

ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்டார் ரஜினிகாந்த்.; பிரபு சொன்ன சீக்ரெட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2005 இல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’.

பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா பிரபு நாசர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார்.

பிரபுவின் ஒரு பேட்டியில்..

“சந்திரமுகி சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

சந்திரமுகி படம் எங்கள் நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை கொடுத்தது. ஒரே திரையரங்கில் 816 நாட்கள் ஓடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

நானும் ரஜினியும் சூட்டிங்க்கு ஒன்றாக தான் செல்வோம். நாங்கள் செல்வதற்கு முன்பு மேக்கப் போட்டு ரெடியாக இருப்பார் ஜோதிகா.

எனவே ஜோதிகாவிடம் நாங்கள் லேட்டாக வந்துட்டோம் எங்களை மன்னிச்சிடுங்க அப்படி ரஜினி சொல்லிடுவார்.

நானும் சாரீ ஜோ.. நாங்க லேட்டா வந்தோம் என்போம்” இப்படியாக அந்த சம்பவத்தை ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் பிரபு.

உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா ..

உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா சில வாரங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அது அவருக்கு உதவவில்லை என்றும் செய்திகள் வந்தன.

இதனால் மேம்பட்ட சிகிச்சைக்காக சாம் தென் கொரியாவுக்குச் செல்வதாகவும், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

35 வயதான சாம் தனது சரும பராமரிப்புக்கு கொரியன் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

கமல் ரசிகர் ரோபோ ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்

கமல் ரசிகர் ரோபோ ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர்.

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தீவிர கமல் ரசிகர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் விஜய்யின் பிகில், கார்த்தியின் “விருமன்’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நட்சத்திரக் குடும்பமாக வலம் வரும் ரோபோ ஷங்கருக்கு இன்று நவம்பர் 29 தேதியில் 22வது திருமண நாள்.

இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வர குடும்பத்துடன் சென்று வாழ்த்து பெற்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் ரோபோ ஷங்கரின் குடும்பத்திற்கு இந்த சர்ப்ரைசை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

பிரபல தொகுப்பாளருக்கு ஜோடி.; முதன் முறையாக சன் டிவி தொடரில் ஆலியா மானஸா

பிரபல தொகுப்பாளருக்கு ஜோடி.; முதன் முறையாக சன் டிவி தொடரில் ஆலியா மானஸா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் மீண்டும் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. உங்கள் SUN TV – ல் வரும் டிசம்பர் 5 ந்தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர்.

அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள்.

ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா,

இனியா

ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலிஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன்.

எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை சுவாரஸ்யமாகவும், திடீர் திருப்பங்களோடும் சொல்ல வருகிறாள் இனியா.

இனியாவாக ஆலியா மானஸா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். சன் டிவியில் அவர் நடிக்கும் முதல் தொடர் இது.

சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி விக்ரமாக நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் மெகாத்தொடர் இது. மற்றும் சந்தான பாரதி, பிரவினா, L.ராஜா, மான்ஸி,தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி நடித்துள்ளனர்.

இந்தத் தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் B R விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் L. ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சரிகம நிறுவனம் சார்பாக B R விஜயலட்சுமி தயாரிக்க கதை : சரிகம கதை இலாகா

திரைக்கதை : கலைமாமணி சேக்கிழார்

வசனம் : மாரிமுத்து

இயக்கம் : நாராயணமூர்த்தி

கிரியேட்டிவ் ஹெட் : ப்ரின்ஸ் இமானுவேல்

இனியா

First Time Alya Manasa in Sun TV Mega Serial

Pushpa The Rise.; ரஷ்ய மொழி பேசும் ‘புஷ்பா’.; டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

Pushpa The Rise.; ரஷ்ய மொழி பேசும் ‘புஷ்பா’.; டிரைலர் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் வெளியாகி பட்டைய கிளப்பிய திரைப்படம் ‘புஷ்பா’.

பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உஊம்.. சொல்றியே மாமா…’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார்.

இந்த பாடலும் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் ரஷ்யன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ட்ரெய்லர் நாளை நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

ரஷ்ய நாட்டில் டிசம்பர் 8ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

மேலும் ரஷ்யாவில் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் ரஷ்ய மொழியில் இந்த படம் டிசம்பர் 1ல் திரையிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் பிரிமியர் காட்சியில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான விழா டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

புஷ்பா படத்துடன் சூப்பர் ஹிட் ஆன 6 இந்திய தபடங்களும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

Pushpa movie Russian language trailer & release updates

————-

#PushpaTheRise Russian language trailer tomorrow at 11.07 AM ?

Special premieres on Dec 1st at Moscow & Dec 3rd at St. Petersburg ?

#PushpaInRussia

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @MythriOfficial @4SeasonsCreati1

More Articles
Follows