தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”.
இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விதார்த் பேசும் போது…
”மிஷ்கின் சாருக்கு பெரிய நன்றி. சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் கூத்துப் பட்டறையில் இருந்து கால் செய்து வாழ்த்து தெரிவித்தேன்… அப்பொழுது இருந்து எப்பொழுதும் அவர் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இருக்கிறார். அது இன்று வரை மாறாமல் தொடர்கிறது.
அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீகாந்த் சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு நன்றி. என்னை மிக அழகாக திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி.
ஜன்னலோரம் படத்தில் ஏற்கனவே பூர்ணாவுடன் நடித்திருக்கிறேன். எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பார். திறமையான நடிகை. ஜன்னலோரம் படத்தில் அவருக்காக ஏங்கிக் கொண்டு இருப்பேன். சேர முடியாமல் போய்விடும் இப்படத்தில் எங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹரி சாருக்கு நன்றி.
இப்படி ஒரு அழகான படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு. ராதாகிருஷ்ணன் சாருக்கும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன்.
மிஷ்கின் சார் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் இசையமைத்த முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது அதைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதித்தார். அதற்கும் நன்றி.
என் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ஆதித்யா அவர்கள் தான். நெருக்கமான பாடல் காட்சிகளில் அவர் சொல்லிக் கொடுத்ததில் பாதி கூட நானும் அந்த நடிகையும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை.
அவருக்குள் மிக அற்புதமான நடிகன் இருக்கிறான். டெவில் திரைப்படம் ஒரு நல்ல திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்.
படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசும் போது..
வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள், மாதா பிதா குரு தெய்வம், என்பார்கள். படத்தின் மீதான ஆர்வத்தையும் துடிப்பையும், அதன் மீது இருக்க வேண்டிய நேர்மையையும் என் குருநாதர் மிஷ்கின் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி.
அவருக்கு அடுத்ததாக இன்று வரை என்னை சவரக்கத்தி படத்தின் இயக்குநராக அறிய வைத்தது பத்திரிக்கை நண்பர்களின் எழுத்துதான். அவர்களுக்கு நன்றி.
Thanuramn என்கின்ற புத்தகத்தை Land Markல் அண்ணன் வாங்கிக் கொடுத்தார்., அதைப் படிக்கும் போது, அதில் ஒரு அற்புதமான கரு இருப்பது புலப்பட்டது. அதை வைத்துக் கொண்டு மாத்திரம் ஒரு கதை செய்துவிட முடியாது, அதை மீறி அக்கதையில் ஒரு விசயம் தேவை என்று தேடிக் கொண்டு இருக்கும் பொழுதுதான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி-யின் ”ஒளிக்குப் பிறகு இரவுக்கு அப்பால்” புத்தகத்தினை படித்தேன். கலைஞர்கள் எப்போதுமே சமூகத்தை மேம்படுத்தி சிந்திக்க வைப்பார்கள்.
அந்த சிந்தனை அக்கதையில் இருந்தது. அதை வைத்து ஒரு கதையினை உருவாக்கத் துவங்கினேன். அப்பொழுது ஊரடங்கு என்பதால் படித்துக் கொண்டே இருந்து அக்கதையை தயார் செய்தேன். ஞானசேகர் சார் போன் செய்து ஏதாவது கதை இருக்கிறதா.. படம் பண்ணலாமா என்று கேட்டார். இந்தக் கதையை கூறி டைட்டில் டெவில் என்று சொன்னதும் அட்டகாசம் சார்… படம் ஹிட் என்று ஊக்கம் தந்தார்.
மிஷ்கின் சாரிடம் இருந்து கற்று கொண்டது, ஒரு சினிமா பார்வையாளனிடம் என்ன செய்யும் என்பதைக் தான்.. கேளடி கண்மணி, படத்தில் அந்த தலையனையில் இருக்கும் காற்று வெளியேறும் போதும், நந்தலாலா மனப்பிறழ்வு அடைந்த ஒருவன் குழந்தையின் தாயை அறையும் போதும்,, பூவே பூச்சுடவா படத்தில் அந்த காலிங்பெல்லை அந்தப் பாட்டி, பேத்தியின் இறப்புக்குப் பின் மீண்டும் மாட்டும் போதும் நெஞ்சில் தைக்கும் உணர்வு இருக்கும்.
இப்படி திரைப்படம் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் குருநாதரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்… என் அண்ணனிடம் நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை, என் குருநாதரிடன் எல்லாம் கற்றுக் கொண்டேன். எம்.கே.மணி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க என் திரைக்கதைக்கு உதவி செய்தார். கிருஷ்ணா, பாலா உதவி இயக்குநர்கள் உடன் இருந்தார்கள்.
பூர்ணா அவர்கள் என்னுடைய எல்லா படங்களில் இருக்கிறார். அவர்களுக்கு நன்றி. பூர்ணா ஒரு நடிப்புப் பேய்.. ஸ்கார்ஸி படங்களில் எப்படி டி நீரோ இருக்கிறாரோ அது போல், என் படங்களில் எப்போதும் அவர் இருப்பார். நீதி தவறப்படும் போது வாழ்க்கை சிக்கலாகும் என்பதை விதார்த்தின் கதாபாத்திரம் பேசும். ஷார்மிங் ஹீரோ அருணுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.
Vidharth speech about Actress Poorna