தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளம் மற்றும் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன்.
இவர் தமிழில் ‘மெர்சல்’, ‘சைக்கோ’ ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.
இந்த நிலையில் நித்யா, தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்
“¿தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி (கர்ப்பம்) டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் And, the Wonder Begins… என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து நடிகை பார்வதியும் தன் இன்ஸ்டாகிராமில் இதே போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது… அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரமோஷன் என தெரிய வந்துள்ளது.
நடிகைகள் நித்யா மேனன், பத்மப்ரியா, பார்வதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களாக நடிப்பதால் இதுபோன்ற படங்களை பதிவிட்டு வருகிறார்களாம்.
Actress Parvathy and Nithya shared picture of positive pregnancy test