தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று டிசம்பர் 13ஆம் தேதி.. இன்றோடு ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதனை முன்னிட்டு இயக்குனர் அமீர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில்… கடந்த ஒரு மாதமாக எனக்கு ஆறுதலாக பேசி வந்த ரசிகர்கள் ஊடகங்கள் திரைத்துறைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ‘மௌனம் பேசியதே’ படம் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் தன் வெற்றிக்கு கரம் கொடுத்த நடிகர் சூர்யா, லைலா, த்ரிஷா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘மௌனம் பேசியதே’ திரைப்படம் அமீரின் முதல் படம் மேலும் நடிகை திரிஷாவுக்கும் நாயகியாக அதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Ameer thanks note Suriya Trisha and Yuvan