‘விடாமுயற்சி’ சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த சம்பவம்.; வைரலாகும் படங்கள்

‘விடாமுயற்சி’ சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த சம்பவம்.; வைரலாகும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இவர்கள் இணையும் முதல் படம் இது.

இதில் அஜித்துடன் த்ரிஷா மற்றும் அர்ஜுன் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே ‘மங்காத்தா’ படத்தில் இணைந்திருந்தனர்.

இவர்கள் தற்போது இரண்டாவது முறையாக இணைகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.

விடாமுயற்சி

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்தில் அர்ஜுன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரை அழகாக போட்டோ எடுத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

இந்த புகைப்படங்களை அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

எனவே தற்போது அஜித்தின் போட்டோகிராபி படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விடாமுயற்சி

Ajith photography stills goes viral from Vidamuyarchi spot

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை.; LIC தலைப்பு மீது வழக்கு போடும் SS குமரன்

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை.; LIC தலைப்பு மீது வழக்கு போடும் SS குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி செட்டி இணைந்து நடிக்க உள்ள படம் எல்ஐசி.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பிட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் எஸ் குமரன் தன் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.

ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது.

அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


SS குமரன்.

Ss Kumaran warns Vignesh shivan for LIC movie title

பிரபு மகள் ஐஸ்வர்யா – ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

பிரபு மகள் ஐஸ்வர்யா – ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பின்னர் சிம்பு & தமன்னா நடிப்பில் உருவான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படம் படுதோல்வியை அடைந்தது.

மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

இதன் பின்னர் பகீரா & ‘மார்க் ஆண்டனி’ என்ற படங்களை இயக்கியிருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன்.

இதில் ‘மார்க் ஆண்டனி’ படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் இவர் பிரபுவின் மகளும் விக்ரம் பிரபுவின் சகோதரியும் ஆன ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய கொள்ள போவதாக செய்திகள் வந்திருந்தன.

அதன்படி இன்று டிசம்பர் 15ஆம் தேதி இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

மேலும் நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. எனத் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

Celebrities at Adhik Ravichandran and Ishwarya marriage

‘லியோ’ தயாரிப்பாளருடன் இணைந்த விக்னேஷ்சிவன் – பிரதீப் – கீர்த்தி – அனிருத்

‘லியோ’ தயாரிப்பாளருடன் இணைந்த விக்னேஷ்சிவன் – பிரதீப் – கீர்த்தி – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது,

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விக்னேஷ்சிவன் - பிரதீப் - கீர்த்தி - அனிருத்

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார்.

உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விக்னேஷ்சிவன் - பிரதீப் - கீர்த்தி - அனிருத்

Pradeep Ranganathan Keerthy shetty in Vignesh shivan directorial

திரைப்படங்கள் தயாரிப்பதிலும் கமல் பாணியை பின்பற்றும் லோகேஷ் கனகராஜ்

திரைப்படங்கள் தயாரிப்பதிலும் கமல் பாணியை பின்பற்றும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

5 படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இவர் இன்று ரஜினி, கமல், விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்டார்.

‘மாநகரம்’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்து ‘கைதி’ படத்தை இயக்கினார்.

இதனையடுத்து விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ மற்றும் விஜய் நடித்த ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கினார்.

இதனையடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரோகேஷ். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இதன் படபிடிப்பு 2024 ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது நிலையில் தான் ஜீ குவாட் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்.

இதன் மூலம் தரமான படங்களை கொடுக்கவும் புதுமுக இயக்குனர்கள் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் அவர் படங்கள் தயாரிப்பதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில்…

கமல்ஹாசன் ரசிகர்னு சொன்ன மட்டும் போதாது.. அவரை போல சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்ல போடாம சினிமாலயே போடனும்.

நாலு பேருக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல படங்களை தயாரிக்கனும், ஆண்டவன் புண்ணியத்துல படங்கள் இயக்கி நல்ல சம்பளம் வருது. அதுவே எனக்கு போதும்” – எனத் தெரிவித்துள்ளார் லோகேஷ்.

Director Lokesh Kanagaraj follows Kamal formula in production

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த சிவகார்த்திகேயன் படம்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த சிவகார்த்திகேயன் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார்.

பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது.

இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் பெருமைமிகு படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

கொட்டுக்காளி

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளமாக அமைகிறது.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது…

”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர்.

மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது.

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.

’கொட்டுக்காளி’ படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க, இணைத் தயாரிப்பாளர் கலை அரசு மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸூடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பி.சக்தி வேல் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, சுரேன் ஜி & எஸ். அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ராகவ் ரமேஷின் ஒலி ஒத்திசைவு மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் இப்படம் கொண்டுள்ளது.

Kottukaali movie got international attraction

More Articles
Follows