தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்’ இன்று ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியானது.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த படத்தை பிரமோஷன் செய்ய இதில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வந்தனர்.
இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களுடன் திரிஷா, விக்ரம் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.
இப்படத்தைப் பார்த்த பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கொண்டனர்.
மேலும் நடிகர் கார்த்தி சென்னையில் பிரபலமான காசி தியேட்டரில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்தார்.
நடிகர் கார்த்திக்கு அசோக் நகர் மேம்பாலத்தில் இருந்து பூக்கள் டிவி ரசிகர்கள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது
கார்த்தியை கண்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர்கள் அங்கும் இங்கு ஓட அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்தது.
இதனால் அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் சென்னையில் உள்ள பிரபலமான வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி படம் பார்த்தார். நடிகர்களை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் தமிழகமெங்கும் உள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரது ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
kasi theatre mirror broke in karthi fans