ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த திருநங்கை ஜீவா

New Project (3)சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான படம் ‘தர்மதுரை’.

இப்படத்தில் விஜய்சேதுபதியின் க்ளினிக்கில் நடித்தவர் திருநங்கை ஜீவா.

அவர் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளதை இயக்குனர் சீனு ராமசாமி தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்.. “தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று, இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கை ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு திருநங்கை ஜீவா, “நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை சார்” என பதிலளித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post