தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.
ஒரு பக்கம் காமெடியில் கலக்கி கொண்டு இருந்தாலும் மறுபக்கம் கதையின் நாயகனாக பல படங்களின் அடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான காமெடி நடிகர் தற்போது இவர் தான்.
ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடனும் இவர் நடித்துள்ளார்.
தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களில் யோகி பாபு காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
அதுபோல ‘தர்பார்’ படத்தில் ரஜினி – யோகி பாபுவின் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
எனவே ரஜினி யோகி பாபு நெல்சன் ஆகியோரது கூட்டணியில் தற்போது காமெடிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் தன்னுடைய காமெடி ட்ராக் குறித்து யோகி பாபு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
‘தர்பார்’ படத்தில் ஓரளவுக்கு ஓட்டியிருந்தோம். இந்த படத்தில் இன்னும் புல்லாவே ஓட்டியிருக்கோம்.
காமெடி வித்தியாசமாக இருக்கும். எப்போதும் உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுப்பார் ரஜினி” என யோகிபாபு கூறியுள்ளார்.
The comedy of ‘Jailor’ is on a different level than ‘Darbar’- Yogi Babu