ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் இன்று ஜனவரி 23ல் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும்.

இவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் பிரபல பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றுள்ளது.

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. இவரது மகள் அதியாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த புதுமண தம்பதியருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்…

தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டி ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. எனவே அந்த இடைவெளியில் தனது திருமணத்தை ராகுல் நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த திருமண நிகழ வில் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஜோடியின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்வு சில தினங்களுக்கு பின்னர் ஒரு நாள் விமரிசையாக நடத்தப்படும் என தகவல்.

Indian cricketer KL Rahul married the daughter of Rajinikanth’s villain actor

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘பதான்’ .

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .

ஏற்கனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Celebrations begin in TN to mark SRKs return to cinemas after 4 years with Pathaan

பதான் ரிலீஸ் ஷாரூக்கான் ரசிகர்கள் குஷி Celebrations begin in Tamilnadu l Pathaan Release Sharukhkhan l filmistreet l 😱🔥💐 https://youtube.com/shorts/t4yDcOi-R-A?feature=share

இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித்.; பிரான்ஸ் நாட்டில் புகழாரம்

இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித்.; பிரான்ஸ் நாட்டில் புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

தற்போது வரை 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் பிரான்ஸ் நாட்டில் ‘துணிவு’ படத்திற்கு பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது.

அந்த நாட்டின் ஒரு தனியார் டிவி.யின் விவாத நிகழ்ச்சியில் ‘துணிவு’ படம் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித் என அவர்கள் பேசியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ‘துணிவு’ தயாரிப்பாளர் போனிகபூர்… “பிரான்ஸ் நாட்டில் ‘துணிவு’ பட வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இது ஓர் அற்புதமான உணர்வு” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

George Timothy Clooney is an American actor and filmmaker. He is the recipient of numerous accolades, including a British Academy Film Award, four Golden Globe Awards, and two Academy Awards..

அஜித்

France TV channel praises Ajith as Indian Cinema George Clooney

22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்?

22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அவரது இரண்டாவது கோலிவுட் படமான ‘துணிவு’ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

22 வருடங்களுக்கு முன் அஜீத் குமாருடன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக மஞ்சு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் நடித்த பாத்திரத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்ததாக அவர் கூறினார்.

அவர் பல மலையாள படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த நேரத்தில் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

Manju Warrier missed the chance to act with Ajith, 22 years before ?

இதோ வந்துட்டோம்.. கவுண்டமணியின் காமெடி சந்தானத்தின் படத்தலைப்பானது

இதோ வந்துட்டோம்.. கவுண்டமணியின் காமெடி சந்தானத்தின் படத்தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடி இரட்டையர்கள் என்றால் அது கவுண்டமணி செந்தில் தான்.

இவர்களது நகைச்சுவை வசனங்களில் நிறைய வசனங்கள் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றானது.

*வடக்குப்பட்டி ராமசாமி.. இரண்டு வாழைப்பழத்துல ஒன்னு இங்க இருக்கு… கோமுட்டி தலையா.. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..* உள்ளிட்ட பல வசனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற வசனம் தற்போது சந்தானத்தின் புதிய தலைப்பாக மாறி உள்ளது.

வடக்குப்பட்டி ராமசாமி

அதன் விவரம் வருமாறு..

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று PEOPLE MEDIA FACTORY.

தற்போது இந்த நிறுவனம் தமிழில் புதிய படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

தெலுங்கில் Oh Baby, Goodachari, Karthikeya 2 and Dhamaka உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ள பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வடக்குப்பட்டி ராமசாமி

Santhanam’s Next Movie is  Titled Vadakkupatti Ramasamy

‘ஷியாம் சிங்காராய்’ பட நிறுவனத்துடன் இணைந்த விக்டரி வெங்கடேஷ்

‘ஷியாம் சிங்காராய்’ பட நிறுவனத்துடன் இணைந்த விக்டரி வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிட்’ எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் ‘வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார்.

‘எஃப் 3’ எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

‘ஷியாம் சிங்காராய்’ எனும் திரைப்படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘வெங்கி 75’ பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது தொடர்பாக பிரத்யேக புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்- இயக்குநர் சைலேஷ் கொலனு- நடிகர் விக்டரி வெங்கடேஷ் என திறமையான படைப்பாளிகள் கூட்டணி அமைத்திருப்பதால், இப்படைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில் ஃப்ரி லுக் எனப்படும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில், நடிகர் விக்டரி வெங்கடேஷின் சில் அவுட் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

மேலும் அவரது கையில் துப்பாக்கி போன்ற கடுமையான ஆயுதம் இல்லாமல், வேறு ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது. இப்படத்தை பற்றி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பி இருக்கிறது.

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Niharika Entertainment to produce Venkatesh’s Venky75

Victory Venkatesh ‘s Venky 75 Announcement Out January 25th

Victory Venkatesh who is riding high with the blockbuster success of F3 will be joining forces with the very talented director Sailesh Kolanu who delivered consecutive hits with the HITverse, for a high-budget film to be produced by Venkat Boyanapalli of Niharika Entertainment.

The landmark 75th film of Venkatesh- #Venky75 is production No 2 from Niharika Entertainment and they made a successful foray into production with Shyam Singha Roy. The most prestigious project of the production house will be mounted on a large scale. This indeed will be the highest-budget movie for Venkatesh.

Obviously, there will be high expectations on the film coming from successful people. The pre-look poster sees a silhouette image of Venkatesh who holds something in his hand. It’s not a gun and it’s something else that will be revealed on the 25th of this month. The pre-look poster with a huge blast and dense smoke indicates Venkatesh’s intense character and an action genre of the movie.

Sailesh Kolanu who wrote a winning script will be presenting Venkatesh in a first-of-its-kind role in the movie that will feature several prominent actors. Noted technicians will handle different crafts. The makers will announce the other cast and crew soon.

Cast: Venkatesh

Technical Crew:
Writer-Director: Sailesh Kolanu
Producer: Venkat Boyanapalli
Banner: Niharika Entertainment
PRO: Yuvraaj

More Articles
Follows