தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசும்போது…
“கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்த இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள்.
கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
பையா படத்தில் இடம் பெற்ற அடடா மழைடா என்ற பாடலுக்கு கார்த்தி & தமன்னா மேடையில் நடனம் ஆடினர்.
At starting of my carrier Karthi supported me lot says Tamannah