தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது…..
“மெட்ராஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி சார் சரியாக பொருந்தியிருந்தார். இதற்காக நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள்.
இப்போது ஜப்பான் திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். மொத்த குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது…
‘கார்த்தி சார் எப்போதுமே சினிமாவை பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. அதுமட்டுமல்ல அதுபற்றிய மிகப்பெரிய அறிவையும் அவர் கொண்டுள்ளார்.
ராஜூ முருகன் சாரிடம் இருந்து ஜப்பான் போன்ற ஒரு ஆச்சரியமான விருந்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. ராஜூ முருகனுக்கும் கார்த்தி சாருக்கும் ஜப்பான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.
சக்தி பிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது…
, “கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்து இருக்கிறார். அதில் 18 படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கின்றன. சிவாஜி கணேசன் சார் தான், தனது முதல் படமான பராசக்தியிலேயே தான் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தவர். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்தில் நடித்த கார்த்திக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல ஐந்து வருடங்களில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகர் யாரென்றால் அது கார்த்தி மட்டுமே. பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் அவர் வேறுவித வடிவம் பெற்றார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கஜினி ஆகிய படங்கள் தான் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் மொழிமாற்று படங்களில் ஒரு புதிய டிரென்டை உருவாக்கின” என்றார்.
இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசும்போது….
“கார்த்தி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை கொண்டு என்னை வசீகரித்ததன் மூலம் நான் ஒரு முழுமையான இயக்குனராக மாறினேன். எந்த நேரமும் சினிமா பற்றியே யோசித்துக் கொண்டு இருக்க கூடிய நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.
இயக்குநர் முத்தையா பேசும்போது….
“பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததுடன் அந்த படத்தில் அழகான மதுரை பாஷையில் கார்த்தி சார் பேசியிருந்தது ரசிருப்பதாக இருந்தது.
கொம்பன் படத்திற்காக அவரை அணுகியபோது நான் அவரிடம் ராமநாதபுரம் வித்தியாசமான ஒரு பாஷையை கொண்டது என கூறினேன். அவரும் அதற்கேற்ற மாதிரி தன்னை தயார் செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.
Lokesh and Ranjith speech at Japan audio launch