தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரு படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா.
இப்படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் வேலைக்காரம் படத்தயாரிப்பாளருமான ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.
இமான் இசையமைத்துள்ளதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரை மாநகரில் இசைத்திருவிழாவை நடத்தவிருக்கிறார்களாம்.
வருகிற ஜீலை 25ஆம் தேதி வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடலை மட்டும் வெளியிட உள்ளனர்.
Sivakarthikeyans Seemaraja audio launch will be happening at Madurai