‘சல்லியர்கள்’ ஒரு வரலாற்று பதிவு.; என் தலைவனுக்கு 5 ஆண்டுகள் கிடைத்திருந்தால்… – சீமான்

‘சல்லியர்கள்’ ஒரு வரலாற்று பதிவு.; என் தலைவனுக்கு 5 ஆண்டுகள் கிடைத்திருந்தால்… – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள 2வது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது…

* “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும் வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.

கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.

விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறுதான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த ‘சல்லியர்கள்’ படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்தி விட்டார் கிட்டு. அதில் பிரம்மாண்டம் எதுவும் தேவைப்படவில்லை.

என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது.

இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது.

நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும்.

அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள்.. வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும் ? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது.

இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார்.

ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; சேது கருணாஸ் & கரிகாலன்

இணை தயாரிப்பு ; சாத்தனூர் சிவா

இயக்கம் ; கிட்டு

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , கென்-ஈஸ்வர்

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; விக்னேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

If my leader Prabakaran got 5 years to rule all might have changed says seeman

வரலாறு எல்லார்க்கும் தெரியணும்.. ‘சல்லியர்கள்’ படம் எடுக்க காரணம் என் மகன் தான்.. – கருணாஸ்

வரலாறு எல்லார்க்கும் தெரியணும்.. ‘சல்லியர்கள்’ படம் எடுக்க காரணம் என் மகன் தான்.. – கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள 2வது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் *கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது,* “சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார்

*தயாரிப்பாளர் சிவா கிலாரி பேசும்போது,*

“எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரிந்தாலும் இங்கே அண்ணன் சீமான் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதனால் தமிழில் தான் பேச போகிறேன். என் முதல் படம் ‘விசித்திரன்’. இரண்டாவது படம் ‘போகும் இடம் தூரம் இல்லை’. அதில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. படம் பற்றி கொஞ்சம் பாசிட்டிவாக எழுதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். திரையரங்குகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.

*இயக்குநர் பொன்ராம் பேசும்போது,*

“இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.

சல்லியர்கள்

*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,* :

இயக்குநர் கிட்டு தனது முதல் படமான மேதகு படத்தையும் சிறப்பாக எடுத்திருந்தார். ஓடிடியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான படம் அது. இந்த படத்தையும் நான் பார்த்தேன். நல்ல தரமான படைப்பாக வந்திருக்கிறது. இதை ஒரு இலங்கை படம் என பாராமல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல ஒரு காதல் படமாக பாருங்கள். ஒரு இசையமைப்பாளராக கருணாஸின் மகன் கென் இன்னும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். அருமையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்” என்று கூறினார்.

*இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது…

* “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும்

பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.

இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.

*நடிகர் திருமுருகன் பேசும்போது,*

“நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனது மனதுக்கு நிறைவான படம். தம்பி கிட்டு ஆரம்பத்தில் எடுத்த குறும்படத்தில் நான் தான் நடித்தேன். ஆனால் மேதகு படத்தில் நடிக்க முடியவில்லை. கிட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படைப்பாளி. மேதகு படத்தை விட சல்லியர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். சல்லியர்கள் யுத்த களத்தில் நடக்கின்ற ஒரு படம். ஆனால் பார்வையாளர்களை பொருத்தவரை அது ஒரு ஹீரோ வில்லன் படம் தான். முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். ஒரு அரக்க கூட்டத்திற்கும் அறத்துடன் நிற்கும் கூட்டத்திற்கும் இடையில் நடக்கிற கதை இது. வெகு ஜன ரசிகராக நீங்கள் இருந்தால் 100% இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். தமிழ் உணர்வாளர்களாக இருந்தால் ஆயிரம் முறை உங்களுக்கு பிடிக்கும். இந்த படைப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்ததற்கு காரணம் கருணாஸ் அண்ணன் தான். இந்த படம் அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். யுத்த களத்தை மையப்படுத்திய வெளிநாட்டு படங்களை பார்க்கும் நம்மவர்களுக்கு ஏன் நம்மூரில் இப்படி ஒரு படம் வருவதில்லை என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி நம் ஊரில் போர்க்களத்தை மையப்படுத்தி வந்த படங்களில் இந்தப் படம் தான் ஆகச்சிறந்த படமாக இருக்கும்” என்று கூறினார்.

நார்வே நாட்டில் *நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன் பேசும்போது,* “அகிம்சை ஏந்தி போராடிய எங்கள் இனம் ஆயுதம் ஏந்தி போராடிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று அறிவாயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் எம் இனம் விழுந்து கிடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா என்னும் ஊடகத்தின் ஊடாக சரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்ற 10 நோக்கங்களில் ஒரு நோக்கத்திற்காக நார்வே திரைப்பட விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வலிகளை பேசுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் அடையாளம் என்றால் அந்த சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அப்படிப்பட்ட படங்களை தான் கடந்த 14 வருடங்களாக நாங்கள் தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கிட்டு மேதகு திரைப்படத்தை கலைக்கூத்து வழியாக அழகான கதை நகர்த்தல் மூலம் சொல்லி இருந்தார். தமிழகமாக இருந்தாலும் தமிழீழமாக இருந்தாலும் போதை வஸ்து, வன்முறை கலாச்சாரம் இவற்றை விதைக்கும் விதமாகத்தான் படங்கள் வருகின்றன என்பது வருத்தமாக இருக்கிறது, சல்லியர்கள் போன்ற படங்கள் தமிழகத்திலும் சரி, வெளிநாட்டிலும் சரி வெளியாவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.

சல்லியர்கள்

*நடிகர் சேது கருணாஸ் பேசும்போது…

“இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான்.

இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது.

தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன்.

அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான்.

ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான்.

காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான்.

அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்..

அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன்.

இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன். உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

சல்லியர்கள்

My son ken is reason for salliyargal movie says Karunas

ரஜினி உதவியை மறுத்தேன்.. பணம் பறிக்கும் டாக்டர்ஸ்..; சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு தமிழருவி மணியன் நன்றி

ரஜினி உதவியை மறுத்தேன்.. பணம் பறிக்கும் டாக்டர்ஸ்..; சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு தமிழருவி மணியன் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் தற்போது நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘முடக்கறுத்தான்’.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்.. விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன்…

” நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன்.

என் மனைவி இதய நோயால் பாதிக்கப்பட்டாள். அவளுக்காக சிகிச்சை செய்ய நான் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டை கூட விற்று விட்டேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் உதவுவதாக முன் வந்தார்.

ஆனால் அவரின் உதவியும் தவிர்த்து விட்டேன் நான் உண்மையாக நேர்மையாக வாழ வேண்டும் என நினைப்பவன். எந்த உதவியும் எதிர்பார்க்காதவன்.

லட்சக்கணக்கில் உதவி செய்தும் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறை பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. மிகப்பெரிய டாக்டர்கள் சிகிச்சை செய்தும் இந்தப் பிரச்சனை தொடர்ந்தது.

ரமணா படத்தில் விஜயகாந்த் சொன்னது போல.. நம்மிடம் பணம் பறிக்கும் கும்பல் தான் இந்த டாக்டர்கள்..

அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்”, என்று கேட்டு கொண்டார்.

விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.

‘முடக்கறுத்தான்’ திரைப்படம் ஜனவரி-25 திரையரங்குகளில் வெளியாகிறது.

Tamilaruvi Maniyan praises Siddha treatment and Doctor Veerababu

ஒன் மேன் ஆர்மி வீரபாபு.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மூலிகைதான்.. – மஹானா

ஒன் மேன் ஆர்மி வீரபாபு.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மூலிகைதான்.. – மஹானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா (COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி, இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் ‘முடக்கறுத்தான்’.

இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது.

இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் முதலாவதாக பேசிய வீரபாபு, தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளதாக கூறினார். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார்.

அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

சுரேஷ் காமாட்சி பேசும்போது..

Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.

இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் பேசும்போது…

“தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது.

கரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார்.தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார்”, என்றும் கூறினார்.

தங்கர் பச்சான் பேசும்போது…

Dr.K.வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றிப்பதாகவும் அவரின் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்திருப்பதாகவும் அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை என்றும், தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த படத்தை தமிழ் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.

படத்தின் கதாநாயகி மஹானா பேசும்போது..

” வீரபாபு அவர்கள் ‘ஒன் மேன் ஆர்மி’ போல நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என படத்தின் அனைத்து துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றினார்.

இந்த படம் பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலை பற்றி பேசும் படம். படப்பிடிப்பின் போதும் கூட மூலிகை உணவுகளை கொடுத்து எங்களை சிறப்பாக கவனித்து கொண்டார். மயில்சாமி,சாம்ஸ், ‘காதல்’சுகுமார், அம்பானி சங்கர் போன்றோரது நகைச்சுவை நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

Actress Mahana speech at Mudakkaruthan trailer launch

‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவி போல ‘மூன்றாம் மனிதன்’ படத்தில் பிரணா.; பாக்யராஜ் பாராட்டு

‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவி போல ‘மூன்றாம் மனிதன்’ படத்தில் பிரணா.; பாக்யராஜ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராம்தேவ் கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர் ‘மூன்றாம் மனிதன்’.

இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக் கின்றனர். இப்படம் டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் கே.பாக்யராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு ஒரு திறமை வேணும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள் என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம்தேவ். நான்கைந்து தயாரிப்பாளர் களை பிடித்துவிடுகிறார்.

ஒரு டெக்னீஷியன் என்ற முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். சரி என்ற ஒப்புக்கொண்டேன். அதற்கு பிறகுதான் தெரிந்தது அவரும் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிக்க நின்றார். முக்கியமான வேடத்தை எடுத்துக் கொண்டு நடித்தார். இப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தது.

படத்தின் ஓப்பணிங்கில் நானும் பிரணாவும் வருவோம் கிளைமாக்ஸ்சிலும் அப்படியே முடியும். கிரைம் சப்ஜெக்ட் என்றாலும் கிளைமாக்சில். சென்டிமென்ட்டாக முடியும் வகையில் கதை அமைத்திருக்கிறார்.

படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா என்று கேட்டால், மெசேஜ் இருக்கிறது. இதில் நடித்திருக்கும் பிரணா அவரது வயதுக்கு மீறிய பாத்திரம் ஏற்று செய்திருக்கிறார். அப்படி செய்வது ஒரு அனுபவம். பாலசந்தர் சாரின் மூன்று முடிச்சு படத்தில் ஶ்ரீ தேவி நடித்தபோது அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரத்தில் நடித்தார். இந்த அனுபவம் அவர்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்.

சோனியா அகர்வாலுடன் இரண்டு நாள் இந்த படத்தில் நடித்தேன். அவர் வசனம் பேசும் போது சத்தமே கேட்காது. ஆனால் லிப் மூவ்மென்ட்ஸ் சரியாக இருக்கும். ஶ்ரீநாத்தும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் அவர் டைரக்ஷன் செய்து கொண்டிருந்தார் இப்போது நடிக்க வந்து விட்டார் டைரக்ஷன் செய்வது கஷ்டம் அதான் நிறைய டைரக்டர்கள். நடிக்க வந்து விட்டார்கள்.

இந்த படத்தை பொறுத்தவரை நிறைய டெக்னீஷியன்கள் ஒத்துழைத்திருக்கிறார்கள் நிறைய பேர் படம் எடுப்பதற்கு ரொம்ப சிரமப்படுவார்கள். படம் எடுத்துவிட்டு அதை ரிலீசுக்கு கொண்டு வருவது அதைவிட பெரிய கஷ்டம் அந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள் தேங்கிக் கிடக்கிறது. ஆனால் இந்த படத்தை 29ம் தேதி வெளியீடு என்று இயக்குனர் ராம் தேவ் அறிவிப்பு கொடுத்து விட்டார்.அதற்கு அவரது விடா முயற்சிதான் காரணம். எங்க இயக்குனர் பாரதிராஜா சார் என்ன எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பார். அதற்காக கடுமையாக உழைப்பார். அதேபோல் ராம் தேவும் என்ன எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார்.

கடுமையாக, சின்சியராக உழைப்பார். ஒரு சிலர் ஒரு நாள் இரண்டு நாள் கூடுதலாக எடுப்பார்கள். ராம் தேவ் பொறுத்த வரை ஒரு நாள் இரண்டு நாள் முன்னதாகவே முடித்த விடுவார்.

தமிழ் ரசிகர்கள் புதியவர்கள் நடித்தாலும் அதை பார்ப்பார்கள். அதன்பிறகு வாய்மொழி சொல் கேட்டு பார்த்து படத்தை வெற்றி பெற செய்வார்கள். ராம்தேவுக்கும் அவரது குழுவும் எனது வாழ்த்துக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்றாம் மனிதன்

*நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது*:

மூன்றாம் மனிதன் படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இதில் லெஜன்ட் பாக்யராஜ் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. அவருடன் நடித்தபோது நிறைய கற்றுக் கொண்டேன் .

இப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குனர் ராம் தேவ் மற்றும் படக் குழுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

*நடிகை பிரணா பேசியது*:

இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பை இயக்குனர் ராம் தேவ் கொடுத்திருக்கிறார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் பட்ஜெட் படம் என்பதைவிட நிறைய பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது. நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள் நானே ஒரு புதுமுகம்தான். நிறைய கெட்டப், நிறைய நடிப்பு முக்கியமாக இந்த சமுதாயத்துக்கு தேவைப்படுகிற ஒரு கதை இந்த படத்தில் இருக் கிறது. நடைமுறையில் இருக்கிற ஒரு சம்பவத்தை கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

இது ஒரு நீண்ட நாள் படைப்பு கஷ்டபட்டு உருவாக்கி இருக்கிறோம். இதை மக்களிடம் கொண்டு சென்று மீடியாக்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சின்ன படங்கள் தியேட்டர்ல பார்க்காமல் அப்படியே போய் விடுகிறது. சின்ன படமோ, பெரிய படமோ அதை மக்கள் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும். இந்த படத்தில் பாக்யராஜ் சாருடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். என் அப்பாவுக்கும் பிடித்த நடிகர் அவர் எனக்கும் பிடிக்கும்.

அவருடன் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம். 90ஸ் ஹீரோயின் சோனியா அகர்வால் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம் அவரை எல்லோ ருக்கும் பிடிக்கும். ஒரு குடும்பமா இந்த படம் செய்திருக்கிறோம் பார்த்து வெற்றி பெறச் செய்து ஆதரவு தாருங்கள். நன்றி.

*இயக்குனர், நடிகர் ஶ்ரீ நாத் பேசியதாவது:*

இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம் பாக்யராஜ் சார்தான். ஏனென்றால் நான் பள்ளி பருவத்திலிருந்தே அவருடைய ரசிகன்.

இயக்குனர் ராம் தேவ் கூறும் போது பாக்யராஜ் சாருடன் காம்பினேஷன் அவர் உங்களை விசாரிப்பதுபோல் கிரைம் சப்ஜெக்ட் என்றார். பாக்யராஜ் சாருடன் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. உத்தம புத்திரன் படத்தில் அவருடன் நடித்தேன். அதற்கு பிறகு அவருடன் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்.

இந்த வாய்ப்பு கொடுத்தற்கு இயக்குநர் ராம் தேவுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஒரு டைரக்டர் மட்டும் கிடையாது பன்முகம் கொண்டவர். அவரது ரசிகராக நான் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன். நான் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆனபோது பாக்யராஜ் சார் பற்றி கேள்விப். பட்டுள்ளேன் ஸ்கிரிப்டுக்கு ரொம்ப நேர்மையாக இருக்க வேண்டும் என்று உழைப்பார் என்பார்கள். நான் டைரக்டரானால் அவரைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவர் மீது எனக்கு அன்பு, பாசம் இருக்கிறது. அதனால்தான் அவரது மகன் சாந்தனுவுடன் நான் நட்புடன் இருக்கிறேன்.

சோனியாவுடன் முதல்முறையாக இதில் நடிக்கிறேன் காதல் கொண்டேன் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார் சோனியா, நன்கு நடிப்பார். அவருடைய கண் எனக்கு ரொம்ப பிடிக்கும். இயக்குனர் ராம் தேவ் விடம் அவரது தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் எல்லா வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அவர் வசனம் எழுதுவது. சோசியல் மீடியாவில் போய் ரீச் ஆக வேண்டும் என்ற அளவில் பிரமாதமான வசனங்கள் எழுதி உள்ளார். ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு நல்ல ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். அதேபோல். நடிகை பிரணா அவரது வயதுக்கு மீறியஒரு பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

*முடிவில் இயக்குனர் ராம்தேவ் நன்றி தெரிவித்தார். அவர் பேசியது*:

இந்த படத்தில் லீட் கேரக்டரே பாக்யராஜ் சார்தான். சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா, பிரணா, ஶ்ரீநாத் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் தான் கடவுள்கள். இப்படத்துக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

மூன்றாம் மனிதன்

Bhakyaraj praises Moondram Manithan actress Prana

ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயன் ஆகியோருடன் மோதும் விஜய் & அருண் விஜய் கூட்டணி

ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயன் ஆகியோருடன் மோதும் விஜய் & அருண் விஜய் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர்.

படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

மிஷன் சாப்டர்1

நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

மிஷன் சாப்டர்1

*நடிகர்கள்:*

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ்குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்: மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி

மிஷன் சாப்டர்1

arun vijay’s Mission Chapter1 in cinemas from pongal 2024

More Articles
Follows