விநாயகர் சதுர்த்தி அன்று 2.0 ட்ரீட்; டைரக்டர் ஷங்கர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி அன்று 2.0 ட்ரீட்; டைரக்டர் ஷங்கர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar going to release 2point0 movie Glimpses on Vinayagar Chathuruthi at 6pmநாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தில் உள்ள சில காட்சிகளின் தொகுப்பை வெளியிட விருக்கிறாராம்.

இதனை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரூ. 400 கோடியில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

Shankar going to release 2point0 movie Glimpses on Vinayagar Chathuruthi at 6pm

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி. பிரகாஷ்

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash teamsup with Director Arivazhaganஅரை டஜன் படங்களை கூட ஒரே சமயத்தில ஒப்புக் கொண்டு அசால்ட்டாக இசையமைத்து நடித்து வருபவர் ஜிவி.பிரகாஷ்.

இவரின் நடிப்பில் செம மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 4ஜி, அஞ்சாதே, ஐங்கரன், 100% காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் நாயகி மற்றும் இதர கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV Prakash teamsup with Director Arivazhagan

காலா சூட்டிங்கில் விபத்து; அருள்தாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

காலா சூட்டிங்கில் விபத்து; அருள்தாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala stillsரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த் ஒரு நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், மற்றும் வில்லன் நடிகர் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள, மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது.

இதில், ரஜினி இருக்கும்போது அருள்தாஸ் பேசிக்கொண்டிருப்பது போல காட்சி இருந்தது.

அப்போது ஒரு ஜீப் வருவது போல காட்சி இருந்தது.

அந்த ஜீப் திடீரென அருள்தாஸ் மீது மோதியது. அவரது இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது.

இதில் அவரது 3 விரல்கள் நசுங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது அங்கு தெரிய வந்துள்ளது.

தற்போது அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விவேகம் டிக்கெட் இல்லை; பேனரை கிழித்து ரசிகர்கள் ஆத்திரம்

விவேகம் டிக்கெட் இல்லை; பேனரை கிழித்து ரசிகர்கள் ஆத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith in vivegamஇன்று அஜித் நடித்த விவேகம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படம் புதுச்சேரியில் காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி திரையரங்கில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது.

எனவே, ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட் கிடைக்கும் என நேற்று காலை முதலே ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இரவு வரை டிக்கெட் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

பின்னர் திடீரென் நள்ளிரவில் டிக்கெட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கோபம் கொண்ட அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர்.

திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த மற்ற நடிகர்களின் பேனர்களை சிலர் கிழித்து எறிந்தனர்.

விவேகம் பட டிக்கெட் வேண்டும். உடனே விற்பனை செய் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எனவே புதுச்சேரி காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

விவேகம் சீன்ஸ் லீக்கானது; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

விவேகம் சீன்ஸ் லீக்கானது; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam stillsசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம் ’விவேகம்’.

இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்துக் கொண்டிருப்பதால் நல்ல நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் இந்த காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகீறது.

இதனால் அஜித் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘Never ever give up’இது விவேகம் தத்துவம்; அஜித்தின் தத்துவம் எது தெரியுமா..?

‘Never ever give up’இது விவேகம் தத்துவம்; அஜித்தின் தத்துவம் எது தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stills in vivegamஅஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள விவேகம் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வளர்ந்த விதம் குறித்து இயக்குனர் சிவா கூறியதாவது…
‘வேதாளம்’ படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் தான் கொடுத்தார்.

அதுபோன்ற கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம்.

இதில் ஆக்சனுடன் சேர்த்து எமோஷன்களும் உள்ளன.

அஜித் அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.

இவை அனைத்தும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு படையலாக இருக்கும். சண்டை காட்சிகளுக்கு ‘டூப்’ வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிற்பவர்.

இப்படத்தில் அஜித் செய்த ஒரு அசுர பைக் ஸ்டாண்டை பார்த்த அதனை இயக்கிய ஹாலிவுட் சண்டை இயக்குனர் காலோயன் வொடெனிசரோவ் [ Kaloyan Vodenicharov ]அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.

ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது.

இந்த படத்துக்காக அஜித் சார் ஜிம்மூக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார்.

அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’ வை மையமாக வைத்தே இப்படத்தில் ‘Never ever give up’ என்ற வசனத்தை எழுதினோம்.

எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போடப்பட்டுள்ளது.” என்றார்.

More Articles
Follows