செல்வராகவன்-சூர்யாவுடன் இணைந்தார் தீரன் நாயகி; ட்விட்டரில் கருத்து

செல்வராகவன்-சூர்யாவுடன் இணைந்தார் தீரன் நாயகி; ட்விட்டரில் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakul preet singhதமிழ் சினிமாவில் 50 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. எனவே எந்த படத்தின் சூட்டிங் நடக்காமல் இருந்தது.

தற்போது ஸ்டிரைக் நிறைவு பெற்றதால், பெரும்பாலான படத்தின் சூட்டிங்குகள் தொடங்கிவிட்டன.

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை இன்று சென்னையில் துவங்கியிருக்கிறார் செல்வராகவன்.

இதில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கும் கலந்துக் கொண்டுள்ளார் என்பதை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நாயகியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக ஜெகபதிபாபு நடிக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

துல்கர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நிவேதா பெத்துராஜ்

துல்கர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer salman and nivetha pethurajதேசிங்கு பெரியசாமி இயக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து வருகிறார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.

நாயகியாக ரிது வர்மா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷன் நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் காதலர் தினத்தில் வெளியாகி வைரலானது.

இப்படத்தை முடித்துவிட்டு ரா.கார்த்திக் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர்.

பயணம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் துல்கர் ஜோடியாக 4 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேகா ஆகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இதன் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளனர்.

இதில் ஒரு நாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவேதா நடிப்பில் டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இதனையடுத்து விஜய் ஆண்டனியின் `திமிரு பிடிச்சவன்’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார்.

பிரபாஸின் சாஹோ அப்டேட்ஸ்… பட்ஜெட் 200C; டார்கெட் 500C; சேல்ஸ் 120C

பிரபாஸின் சாஹோ அப்டேட்ஸ்… பட்ஜெட் 200C; டார்கெட் 500C; சேல்ஸ் 120C

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas Saaho Latest News and Hindi remake rightsராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.

இந்தியா தவிர அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

வருகிற மே 4ஆம் தேதி சீனா நாட்டில் பாகுபலியை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அந்த படத்தை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெரப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இன்னொரு முக்கிய வேடத்திற்காக எவலின் ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

ரூ. 200 கோடியில் உருவாகி வரும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘சாஹோ’ படத்தின் ஹிந்தி உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 120 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ்க்கு இந்தியா முழுவதும் தற்போது மார்கெட் ஏற்பட்டுள்ளதால் 500 கோடிக்கும் மேல் ‘சாஹோ’ வசூலிக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Prabhas Saaho Latest News and Hindi remake rights

காலா காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்ட பக்கா-ராஸ்கல்

காலா காலி செய்த இடத்தை பிடித்துக் கொண்ட பக்கா-ராஸ்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pakka movie posterரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை ஏப்ரல் 27ல் ரிலீஸ் செய்யவிருந்தனர்.

ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு ஜீன் 7ல் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காலா அந்த தேதியிலிருந்து காலியானவுடன் மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி நடித்துள்ள பக்கா படத்தை வெளியிடுகின்றனர்.

இதில் ரஜினியின் தீவிர ரசிகையாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இவர்களுடன் பிந்து மாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்க, எஸ் எஸ். சூர்யா அவர்கள் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை அன்றைய தினத்தில் வெளியிடுகின்றனர்.

இதில் அரவிந்த்சாமி, அமலாபால், மீனா மகள் நைனிகா, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து மற்ற படங்களின் அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pakka and Baskar Oru Rascal release confirmed on 27th April as Kaala postponed

baskar oru rascal 27th april

Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

Breaking: போராட்டக்காரர்கள் போலீஸை தாக்கியதில் உடன்பாடில்லை…: சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu condemns Tamilnadu Cauvery Protestors attacked Policeகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்ற போது நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்து சில நாட்களாகியும் அவரை இன்னும் விடுதலை செய்யவில்லை.

அதுபற்றி தெரிந்துக் கொள்ள இன்று சிம்பு போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் வந்தார் சிம்பு.

அப்போது…

மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மற்றபடி எந்தப் பிரச்சனையும் செய்ய நான் இங்கு வரல.

ஐ.பி.எல் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் போராட்டக்கார்ர்கள் மீது திருப்பி தாக்குதல் நடத்தாமல் இருந்ததற்கு என் பாராட்டுகள்.” என்றார்.

சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் போலீஸ் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu condemns Tamilnadu Cauvery Protestors attacked Police

Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

Breaking: மன்சூர் அலிகான் கைது ஏன்.? போலீஸ் கமிஷனரிடம் சிம்பு நேரில் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu at Police Commissioner office to question Why Mansoor Ali Khan arrestedகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வந்த வேளையில் சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என பலர் போராடி வந்தனர்.

அந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வரை சிறையில் உள்ளார்.

அதற்காக நியாயம் கேட்டு கமிஷ்னர் ஆபிஸ் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு நேற்று இரவு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர், “ மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். கூடவே அவரது ரசிகர்களும் வந்திருந்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதால், சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கூறியதாவது…

‘”நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள வந்துள்ளேன். அவரை விடுதலை செய்யும்படி நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன்.

மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை கைது செய்தது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.” என்றார் அவர்.

Simbu at Police Commissioner office to question Why Mansoor Ali Khan arrested

More Articles
Follows