கார்த்தி உடன் இணையும் தானா சேர்ந்த கூட்டம் கூட்டணி

Karthi 17 starts with a formal launch in Chennaiமாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், RJ விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் நடிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் அண்மையில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் , இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட் தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.

இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார்.

யுரோப் நாட்டில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் இப்படம் உருவாக உள்ளது.

Karthi 17 starts with a formal launch in Chennai

Overall Rating : Not available

Related News

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று…
...Read More
சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார்…
...Read More

Latest Post