தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியவர் கார்த்தி.
பருத்திவீரன் படத்தை தொடந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரை பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டார் கார்த்தி.
ரஞ்சனி கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளுக்கு அழகான தமிழில் உமையாள் என பெயர் வைத்தனர்.
தற்போது 6 ஆண்டுகள் கழித்து கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
எனவே விரைவில் மீண்டும் அப்பாவாக உள்ளார் கார்த்தி.
உமையாளுக்கு தம்பி பாப்பா? தங்கச்சி பாப்பா? என காத்திருந்து பார்ப்போம்.
Karthi and Ranjani couple to welcome second child soon