BREAKING நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவர் நடிகராக பலராலும் அறியப்பட்டவர்.

40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மனோபாலா திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் வால்டர் வீரய்யா, கோஷ்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் மோகன் உடன் நடித்து வருகிறார் மனோபாலா.

சுந்தர் சி இயக்கும் படங்களில் இவருக்கு முக்கியமாக காமெடி வேடம் அளிக்கப்படும்

சந்திரமுகி, ஆம்பள, தெறி, இந்தியா பாகிஸ்தான் அஞ்சான், தீரன் அதிகாரம் ஒன்று, கவலை வேண்டாம் என பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இவர் பல படங்களில் நடித்து காமெடியை சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் 10க்கு மேற்பட்ட படங்களில் படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களும் அடங்கும்.

சதுரங்க வேட்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கியவர் இவர்தான். விஜயகாந்த் நடித்த என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்ற படத்தையும் மனோபாலா இயக்கியிருந்தார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த பாரம்பரியம் சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட படங்களும் இவரது இயக்கத்தில் உருவானதுதான்.

மேலும் பல டிவி சீரியல்களிலும் அல்லி ராஜ்ஜியம், மாயா, செம்பருத்தி உள்ளிட்ட டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்களை பணியாற்றி உள்ள மனோபாலா கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு உள்ளார்.

இவருக்கு லிவர் (கல்லீரல்) பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மே மூன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் மனோபாலா.

மனோ பாலாவுக்கு தற்போது 69 வயது ஆகிறது. இவரது நடிப்பில் உருவாகி வரும் ‘ஹரா’ படம் இன்னும் வெளியாகவில்லை. எனவே அதுதான் இவரது கடைசி படமாக இருக்கும்.

Manobala sir Aged-69

Passed away few minutes before due to Health Issues

Wife Name :Usha
Son Name :Harish

Cremation Time and Date will be Updated Soon

Residential Address:

B/1, Dhanalakshmi Colony Extension,
SriPriya Flats,
L V Prasad Lab Road, Saligramam
Before water fall restaurant

Manager:
Mr Vicky
8778602452

Sabari
9790831018

Location

https://maps.google.com/?q=13.054879,80.205544

actor manobala Manobala passes away

JUST IN புதிய கூட்டணி.: கமல் – சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

JUST IN புதிய கூட்டணி.: கமல் – சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவர் 21 வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 51வது படமாகும். இந்த படத்தை முருகதாஸின் உதவியாளரும் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பது இதுவே முதன் முறையாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது நாள் வரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் மற்றும் இமான் ஆகிய இருவருமே இசையமைத்து வந்தனர்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜிவி பிரகாஷ்

GV Prakash to score music for SK 21

கே‌ஜி‌எஃப் இல் ஷூட்டிங்கை தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன் !

கே‌ஜி‌எஃப் இல் ஷூட்டிங்கை தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா அவர்கள் வெற்றிமாறன் தனுஷ் இணையும் புதிய ‘கேஜிஎஃப்’ சம்பந்தமான திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் தனுஷ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது அந்த படமாக இருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.

வெற்றிமாறன்-ஜூனியர் என்டிஆர்-தனுஷ் இணையும் படம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Vetrimaaran’s new multistarrer movie set in ‘KGF’ ?

ஆர்யாவுக்கு வில்லனாக கௌதம் கார்த்திக்.; FIR டைரக்டரின் Mr X

ஆர்யாவுக்கு வில்லனாக கௌதம் கார்த்திக்.; FIR டைரக்டரின் Mr X

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் *மிஸ்டர் எக்ஸ்* (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின்
படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.

மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு – பிரசன்னா GK.

தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன். சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா. கலை இந்துலால் கவீத்.

தயாரிப்பு மேற்பார்வை
A. P பால்பாண்டி. ஆடை வடிவமைப்பு உத்ரா மேனன்

நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத். இணை தயாரிப்பு
A. வெங்கடேஷ்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக S. லஷ்மன்குமார் தயாரிக்கிறார்.

படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

Mr.X (Tamil) – Official Motion Poster

 Mr X

Arya’s Mr.X movie Motion Poster released

ரஜினிக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இப்போ கார்த்திக்கு.! ‘ஜப்பான்’ நாயகனுக்கு ஜப்பான் ரசிகை

ரஜினிக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இப்போ கார்த்திக்கு.! ‘ஜப்பான்’ நாயகனுக்கு ஜப்பான் ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை.

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக்

ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) வை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) கூறும்பொழுது..

“நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியவில் தங்கியிருந்தேன், அப்பொதிலிருந்து, நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். மிக அட்டகாசமான படம் என்றார்.

கார்த்திக்

நடிகர் கார்த்தியை சந்தித்தது குறித்து கேட்டபோது ..

மிக சந்தோசமான அனுபவம், #ஜப்பான் படப்பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார்.

அவருடன் பல விசயங்கள் உரையாடினேன். RRR படம் போல் இந்தப்படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டேன். ஜப்பானில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

கார்த்தியின் அடுத்த படம் #ஜப்பான் என்ற போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அது ஜப்பான் பற்றிய படமல்ல ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்ற போது கொஞ்சம் வருத்தம் தான். ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும்” என்றார்.

கார்த்திக்

Karthi’s japan fans came to watch and celebrate PS2

மீண்டும் தங்கலான் ஷூட்டிங்கை ஆரம்பித்த இயக்குனர் ரஞ்சித். அனல் பறக்கும் அப்டேட் இதோ!

மீண்டும் தங்கலான் ஷூட்டிங்கை ஆரம்பித்த இயக்குனர் ரஞ்சித். அனல் பறக்கும் அப்டேட் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ரஞ்சித் ‘தங்கலான்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இன்று மீண்டும் தொடங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தது . பொன்னியின் செல்வன் ரிலீஸில் பிஸியாக இருந்த விக்ரம் தற்போது தங்கலான் படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். இப்படத்தின் 80% படப்பிடிப்பை படக்குழுவினர் ஏற்கனவே எடுத்துள்ளனர்.

படம் முழுவதுமாக முடிவதற்குள் இன்னும் இரண்டு ஷெட்யூல்கள் பாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Pa Ranjith to resume Chiyaan Vikram’s ‘Thangalaan’ shooting on this date

More Articles
Follows