நேர்மையான போலீஸ் ஆக நடிப்பதை விட வாழ்வது கஷ்டம்… : கார்த்தி

நேர்மையான போலீஸ் ஆக நடிப்பதை விட வாழ்வது கஷ்டம்… : கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi speech at former police officers charitable trust launchஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது.

இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி பேசியதாவது…

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது.

இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.

இந்த நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே போலீஸ் அதிகாரிகள் அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார்.

அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை வேண்டும். அப்படி பட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும் , ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும்.

இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ் நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.

இங்கே இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பிரஷர் அதிகமாகிறது. பிரஷர் அதிகமாவதால் தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள்.

அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும். அதே போல் இன்னும் நிறைய போலீஸ் அதிகாரிகளை புதிதாக பணியமர்த்தினால் தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்யும் நிலை மாறும்.

அவர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள்.

நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

போலீஸ் அதிகாரிகளின் மனசுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி.

இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன்,வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் ரூபாய் 10 லட்சம் விகிதம் 50லட்சம் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்கினர்.

Actor Karthi speech at former police officers charitable trust launch

Former police officers charitable trust event photos (4)

சாவித்ரியாக நடிக்கும் கீர்த்திக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை

சாவித்ரியாக நடிக்கும் கீர்த்திக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhanu priyaஅழகான திறமையான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி வருகிறார் நாக் அஷ்வின்.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தமிழில ‘நடிகையர் திலகம்’ என்றும் தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வருகிற மே 9ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

தமிழ் மற்றும் மலையாளத்தை சரளமாக பேசக்கூடியவர் கீர்த்தி சுரேஷ் என்றாலும் அவரது குரலில் அவ்வளவு மென்மை இருக்காது.

எனவே அவருடைய குரல் சாவித்ரி கேரக்டருக்கு பொருந்தாது என்பதால் முன்னாள் நடிகை பானுப்ரியா குரல் கொடுத்து இருக்கிறாராம்.

கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஆர்யாவின் திருமண நிகழ்ச்சிக்கு தடை?

கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஆர்யாவின் திருமண நிகழ்ச்சிக்கு தடை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aryas Enga Veetu Maappillai show issue Colors TV into troubleகலர்ஸ் டிவி என்ற தனியார் தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் கலந்துக் கொள்ளும் 17 பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்யவிருக்கிறார் நடிகர் ஆர்யா.

தற்போது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோரி கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா தேர்வு, நீக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்.

பெண்களை காட்சிப்பொருளாக இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கின்றனர்

இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் சமத்துவம் மீறப்பட்டுள்ளது.

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் தவறான கருத்தை புகுத்தும் வகையில் உள்ளது.

இவை தொடர அனுமதித்தால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரும், எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவிட்டுள்ளனர்.

Aryas Enga Veetu Maappillai show issue Colors TV into trouble

காலா ரிலீசுக்கு முன்பே ரூ. 125 கோடி கல்லா கட்டிய தனுஷ்

காலா ரிலீசுக்கு முன்பே ரூ. 125 கோடி கல்லா கட்டிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala got nearly Rs 125 Crores profit before releaseகபாலி படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனிடையில் கபாலி இயக்குனர் ரஞ்சித்துக்கு மற்றொரு படமான காலா பட வாய்ப்பை வழங்கினார் ரஜினி.

இரண்டு படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

இதில் லைகா தயாரித்து வரும் 2.0 படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் பட வெளியீடு தள்ளிக் கொண்டே போக, காலா படத்தை வெளியிட முடிவு செய்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

எனவே அப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றது லைகா நிறுவனம்.

ரூ. 75 கோடியில் தயாரிக்கப்பட்ட காலா படத்தின் வெளியீட்டு உரிமை மட்டும் ரூ. 125 கோடியை தொட்டது.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

இந்நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி (ஸ்டார் குரூப்) நிறுவனம் ரூ. 75 கோடிக்கு பெற்று உள்ளது.

விரைவில் ஐபிஎல் 2018 போட்டிகள் தொடங்கவிருப்பதால், காலா படத்தின் விளம்பரங்களை அத்துடன் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாம் ஸ்டார் குழுமம்.

ஆக மொத்தம் காலா படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு விற்பனையாகி விட்டது.

படத்தின் பட்ஜெட்டான ரூ. 75 கோடியை கழித்தால் இதுவரை ரூ. 125 கோடி வரை லாபத்தை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.

படத்தின் பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் சம்பளம் சேர்க்கப்படவில்லை என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

Rajinis Kaala got nearly Rs 125 Crores profit before release

மெர்லின் படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரி மனு; படக்குழு விளக்கம்!

மெர்லின் படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரி மனு; படக்குழு விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Merlin movie and Sexy ghost issue High Court caseமெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது.

இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த பேய் படத்தில வரக்கூடிய் ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வரும் கயல் தேவராஜ் அவர்கள் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், இந்த படத்தில் உள்ள காட்சிகள் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளது.

இது தொடர்பாக சென்சார் போர்ட்க்கு அளித்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்க வில்லை.

எனவே பெண்களுக்கு எதிரான வசனங்கள் வரும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கு படக்குழுவினர் தற்போது வீடியோ பதிவில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Merlin movie and Sexy ghost issue High Court case

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஐ-ப்ரோ அழகி ப்ரியா வாரியர்.?

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஐ-ப்ரோ அழகி ப்ரியா வாரியர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Prakash Warrior teams up with Suriyaசெல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

சினிமா ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

இதில் சாய்பல்லவி மற்றும் ரகுல் பிரித்தி சிங் இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் மூலம் தென்னிந்தியாவையே அதிர வைத்த ஐப்ரோ அழகி ப்ரியா வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya Prakash Warrior teams up with Suriya

More Articles
Follows