தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, ஜோக்கர், ஃபர்கானா, உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்.
இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ் ஆர் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
(இவர் நடிகர்கள் சூர்யா – கார்த்தியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது)
இவரின் ட்விட்டர் பதிவில்…
திரைப்பட வணிகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர்.
இதன் மதிப்பும் படத்தின் வெளியீட்டு தேதி, கதை, போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். இதை புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்க தொடங்கும்போது ஒட்டுமொத்த சந்தையை உயர்ந்து எல்லைகளை தாண்டி விரிவடைகிறது.
சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரைத்துறை. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்பட துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார் எஸ் ஆர் பிரபு.
Super Star era ends says producer SR Prabhu