சினிமா ஆர்வலர் – கமல்..; அருமை நண்பர் – ரஜினி..: மனோபாலா மறைவுக்கு இரங்கல்

சினிமா ஆர்வலர் – கமல்..; அருமை நண்பர் – ரஜினி..: மனோபாலா மறைவுக்கு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவர் நடிகராக பலராலும் அறியப்பட்டவர்.

40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மனோபாலா திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் வால்டர் வீரய்யா, கோஷ்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் மோகன் உடன் நடித்து வருகிறார் மனோபாலா.

சந்திரமுகி, ஆம்பள, தெறி, இந்தியா பாகிஸ்தான் அஞ்சான், தீரன் அதிகாரம் ஒன்று, கவலை வேண்டாம் என பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

மேலும் 10க்கு மேற்பட்ட படங்களில் படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களும் அடங்கும்.

சதுரங்க வேட்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன், விஜயகாந்த் நடித்த என் புருஷன் எனக்கு மட்டும்தான், சிவாஜி கணேசன் நடித்த பாரம்பரியம், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் உருவானதுதான்.

மேலும் பல டிவி சீரியல்களிலும் அல்லி ராஜ்ஜியம், மாயா, செம்பருத்தி உள்ளிட்ட டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களை பணியாற்றி உள்ள மனோபாலா கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு உள்ளார்.

இவருக்கு லிவர் (கல்லீரல்) பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மே மூன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் மனோபாலா.

இதனையடுத்து இளையராஜா, பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி & கமல் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

— ரஜினிகாந்த்…

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்… https://t.co/x9VldLKPS3

—– கமல்ஹாசன்

Rajini kamal express their shock over the Manobala demise

#Breaking : தங்கலான் சூட்டிங் கேன்சல்; விபத்தில் சிக்கிய விக்ரம்

#Breaking : தங்கலான் சூட்டிங் கேன்சல்; விபத்தில் சிக்கிய விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன் 2’ படம் மாபெரும் வெற்றிப் பெற்று வருகிறது.

விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் பயிற்சியின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக ‘தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

மேலும், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vikram suffers injury at thangalaan shooting

டார்ச்சர் ட்ரீட்மெண்ட் அனுபவிக்கும் சமந்தா ! ரசிகர்கள் அதிர்ச்சி

டார்ச்சர் ட்ரீட்மெண்ட் அனுபவிக்கும் சமந்தா ! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய ஐஸ் கட்டிகளால் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் சமந்தா இருப்பது போல் சமீபத்தில் ஒரு புதிய படம் வெளியாகி உள்ளது மற்றும் அதில் “இது சித்திரவதை நேரம்” என்று தலைப்பிடப்பட்டது, அதைத் தொடர்ந்து #Icebathrecovery மற்றும் #actionmodeon” என்ற ஹேஷ்டேக்குகள் உள்ளன.

நோயில் இருந்து முழுமையாக குணமடைய சமந்தாவின் துணிச்சலான முயற்சிகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஐஸ் குளியல் பாரம்பரியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தசைகளை எளிதாக்கவும் உண்டான சிகிச்கை என சொல்லப்படுகிறது.

Samantha undergoes torture therapy, photo shocks fans

BREAKING நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா. இவர் நடிகராக பலராலும் அறியப்பட்டவர்.

40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மனோபாலா திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் வால்டர் வீரய்யா, கோஷ்டி, கொன்றால் பாவம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் மோகன் உடன் நடித்து வருகிறார் மனோபாலா.

சுந்தர் சி இயக்கும் படங்களில் இவருக்கு முக்கியமாக காமெடி வேடம் அளிக்கப்படும்

சந்திரமுகி, ஆம்பள, தெறி, இந்தியா பாகிஸ்தான் அஞ்சான், தீரன் அதிகாரம் ஒன்று, கவலை வேண்டாம் என பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இவர் பல படங்களில் நடித்து காமெடியை சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் 10க்கு மேற்பட்ட படங்களில் படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களும் அடங்கும்.

சதுரங்க வேட்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கியவர் இவர்தான். விஜயகாந்த் நடித்த என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்ற படத்தையும் மனோபாலா இயக்கியிருந்தார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த பாரம்பரியம் சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட படங்களும் இவரது இயக்கத்தில் உருவானதுதான்.

மேலும் பல டிவி சீரியல்களிலும் அல்லி ராஜ்ஜியம், மாயா, செம்பருத்தி உள்ளிட்ட டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்களை பணியாற்றி உள்ள மனோபாலா கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு உள்ளார்.

இவருக்கு லிவர் (கல்லீரல்) பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மே மூன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் மனோபாலா.

மனோ பாலாவுக்கு தற்போது 69 வயது ஆகிறது. இவரது நடிப்பில் உருவாகி வரும் ‘ஹரா’ படம் இன்னும் வெளியாகவில்லை. எனவே அதுதான் இவரது கடைசி படமாக இருக்கும்.

Manobala sir Aged-69

Passed away few minutes before due to Health Issues

Wife Name :Usha
Son Name :Harish

Cremation Time and Date will be Updated Soon

Residential Address:

B/1, Dhanalakshmi Colony Extension,
SriPriya Flats,
L V Prasad Lab Road, Saligramam
Before water fall restaurant

Manager:
Mr Vicky
8778602452

Sabari
9790831018

Location

https://maps.google.com/?q=13.054879,80.205544

actor manobala Manobala passes away

JUST IN புதிய கூட்டணி.: கமல் – சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

JUST IN புதிய கூட்டணி.: கமல் – சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவர் 21 வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 51வது படமாகும். இந்த படத்தை முருகதாஸின் உதவியாளரும் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பது இதுவே முதன் முறையாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது நாள் வரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் மற்றும் இமான் ஆகிய இருவருமே இசையமைத்து வந்தனர்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜிவி பிரகாஷ்

GV Prakash to score music for SK 21

கே‌ஜி‌எஃப் இல் ஷூட்டிங்கை தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன் !

கே‌ஜி‌எஃப் இல் ஷூட்டிங்கை தொடங்கும் இயக்குனர் வெற்றிமாறன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா அவர்கள் வெற்றிமாறன் தனுஷ் இணையும் புதிய ‘கேஜிஎஃப்’ சம்பந்தமான திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் தனுஷ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது அந்த படமாக இருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.

வெற்றிமாறன்-ஜூனியர் என்டிஆர்-தனுஷ் இணையும் படம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Vetrimaaran’s new multistarrer movie set in ‘KGF’ ?

More Articles
Follows