மத உணர்வுகளுக்கு எதிரானதா.? ஃபர்ஹானாவுக்கு ஃபாரீனில் கூட தடையில்ல.; படக்குழு அறிக்கை

மத உணர்வுகளுக்கு எதிரானதா.? ஃபர்ஹானாவுக்கு ஃபாரீனில் கூட தடையில்ல.; படக்குழு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வணக்கம்,

எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படத்தை வரும் மே 12ஆம் தேதி அன்று, ரசிகர்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது.

மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.

ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் , உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.

மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல.

அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம்.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும்.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம்

– ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

Is it against religious sentiments? Farhana has no restrictions even in foreign.

‘யாத்திசை’-யை ஓடிடியில் பார்த்து யாருப்பா இவங்கன்னு மிரள ரெடியா.?!

‘யாத்திசை’-யை ஓடிடியில் பார்த்து யாருப்பா இவங்கன்னு மிரள ரெடியா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வெளியான படம் ‘யாத்திசை’.

இப்படத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘யாத்திசை’ படம் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.

இந்த நிலையில், ‘யாத்திசை’ படம் மே 12-ம் தேதி நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திசை

yaathisai will release in amazon prime

சமந்தா – தேவ் மோகன் நடித்த ‘சாகுந்தலம்’ ஓடிடி ரிலீஸ் தேதி

சமந்தா – தேவ் மோகன் நடித்த ‘சாகுந்தலம்’ ஓடிடி ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான படம் ‘சாகுந்தலம்’.

இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அதிதி பாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் 3டி தொழில்நுட்பம் இல்லாமல் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

பிறகு 3டி தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றுவதற்காக அந்த ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இறுதியாக, ‘சாகுந்தலம்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில்
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் குணசேகருடன் இணைந்து இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.

கிட்டத்தட்ட ரூ.58 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘சாகுந்தலம்’ படம் மே 12-ம் தேதி நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் “என் 25 ஆண்டு சினிமா பயணத்தில் ‘சாகுந்தலம்’ படம் பெரும் தோல்வி” என தெரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகுந்தலம்

Samantha’s shaakuntalam is streaming amazon prime

மீண்டும் இணைந்த சரத்குமார் – கௌதம் மேனன்.; ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி

மீண்டும் இணைந்த சரத்குமார் – கௌதம் மேனன்.; ‘ஹிட் லிஸ்ட்’ ரெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது.

பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.

நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன் மூலம் இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும் கவனிக்கின்றனர்.

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கூடுதல் தகவல்…

கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். தற்போது கௌதம் – சரத்குமார் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல கே எஸ் ரவிக்குமார் இயக்கிய பல படங்களில் சரத்குமார் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sarath Kumar and gautham Menon joins for hitlist

லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி.; வைரலாகும் போட்டோ

லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி.; வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’.

இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிகர் ஜீவா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், லோகேஷ் கனகராஜ், ஆர்.ஜே.பாலாஜி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

Lokesh Kanagaraj cameo role in ‘Singapore Saloon’

21 Years of Dhanush.; ஜூன் – ஜூலையில் ‘கேப்டன் மில்லர்’ ட்ரீட்

21 Years of Dhanush.; ஜூன் – ஜூலையில் ‘கேப்டன் மில்லர்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் நிவேதிதா சதீஷ் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, மாறன், பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தேதியை அறிவித்துள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனுஷ் ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர்

captain miller first look and teaser release date announced

More Articles
Follows