அஜித்தின் தல-59 படம் பற்றி டைரக்டர் வினோத் விளக்கம்

Director H Vinothசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கியவர் எச்.வினோத்.

இவர் அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என கூறப்பட்டது.

இந்த தகவல்கள் பல நாட்கள் வலம் வந்தாலும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து டைரக்டர் எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை”. இவ்வாறு கூறியுள்ளார்

Overall Rating : Not available

Related News

மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம்…
...Read More
சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார்…
...Read More

Latest Post