எப்போதும் தமிழ் சினிமாவுக்கும் மலையாள நடிகைக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு.
அண்மைக்காலமாக இது அதிகரித்து வருகிறது.
அதிலும் தனுஷ் படங்களில் மலையாள நடிகைகளே நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
நயன்தாரா, அமலாபால், மஞ்சு வாரியர், மடோனா செபஸ்டியன், அனுபமா, ஐஸ்வர்யா லட்சுமி (டி40 படம்) உள்ளிட்ட பல மலையாள நடிகைகள் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.
தற்போது இந்த வரிசையில் புதிய வரவாக ரெஜிஷா விஜயன் இணைந்துள்ளர்.
இவர் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
இவர்களுடன் நட்டி, லால் நடிக்க வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.