கடவுளுக்கு மெட்டு போட்ட ஸ்ரீகாந்த் தேவா.; யோகிபாபு & நட்டி பாராட்டு

கடவுளுக்கு மெட்டு போட்ட ஸ்ரீகாந்த் தேவா.; யோகிபாபு & நட்டி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது*

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.

முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் ‘செல்லக்குட்டி பேபி’ அக்ஷரா லஷ்மி பாடியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

யோகிபாபு மற்றும் நட்டி

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில்…

“வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்,” என்றார்.

பாடலை எழுதிய இயக்குநர் பவண், “இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,” என்றார்.

நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

யோகிபாபு மற்றும் நட்டி

Srikanth Deva composes a song on Lord Muruga for the first time

தேவா பாரு.. தேவா பாரு..; இசை காற்றில் வருட ரெடியான தேனிசைத் தென்றல்

தேவா பாரு.. தேவா பாரு..; இசை காற்றில் வருட ரெடியான தேனிசைத் தென்றல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ALVI Digitech மற்றும் Giant Films இணைந்து வழங்கும் “தேனிசைத் தென்றல்” தேவாவின் இசைக்கச்சேரி முதல்முறையாக கோயம்புத்தூரில்.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்
“தேனிசை தென்றல் “ தேவா.

கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத் தென்றல் எனப் பெயரெடுத்தவர்.

பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.

இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உண்ணி மேனன்,
மற்றுன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றும் சமூக வலைதளங்களான யூடுயூப், இன்ஸ்டா,

ஸ்பாட்டிஃபை என அனைத்து தளங்களில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

“தேனிசைத் தென்றல்" தேவா

Thenisai Thendral Deva Live in concert at Coimbatore

REBEL படத்தின் ரிலீஸ் தேதியை வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழுவினர்

REBEL படத்தின் ரிலீஸ் தேதியை வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.

ரெபல்

உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

https://x.com/StudioGreen2/status/1750383039631564828?s=20

Studio Green announced Rebel movie release date

75வது குடியரசு தினத்தில் அஞ்சலி.. ZEE5 தளத்தில் ‘சாம் பகதூர்’

75வது குடியரசு தினத்தில் அஞ்சலி.. ZEE5 தளத்தில் ‘சாம் பகதூர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சாம் பகதூர்’ திரைப்படத்தை வெளியிடும் ZEE5.

ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது.

இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது.

அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது.

இப்படம். 75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது.

ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும்.

நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது.

தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகிறது.

ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினம் என்பது ஒரு ஆழமான உணர்வைத் தரக்கூடியது. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு நன்நாளில் சாம் பகதூர் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நம் தேசத்தின் உணர்வோடு எதிரொலிக்கும் இதுபோன்ற சொல்லப்படாத கதைகளை, எங்கள் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள்.

மேலும் அவர்களுக்குப் பொருத்தமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தப் படம் ஒரு உண்மையான நிஜவாழ்வு ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்தும் படம். ரோனி ஸ்க்ரூவாலா புரொடக்‌ஷன்ஸ் உடனான எங்கள் கூட்டணி மிகவும் மகிழ்ச்சிகரமானது.

அவர்களுடனான கூட்டணி, தேஜஸ் மற்றும் சாம் பகதூர் போன்ற தேசபக்தி திரைப்படங்களை மீண்டும் வழங்க எங்களுக்கு உதவியது. சாம் பகதூர் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, பார்வையாளர்கள் எங்கள் தளத்திலும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில்…

“சாம் பகதூர் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஐடியா எனக்குள் வந்தது, இப்போது இந்த திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது, எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.

ஐகான்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அவர்களின் கதைகளைக் கொண்டாட நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். துணிச்சலான ஹீரோவான சாம் மானெக்ஷாவின் உத்வேகம் தரும் கதையை வெளிக்கொணரவும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் எனது தாழ்மையான முயற்சி தான் இந்த படம். ZEE5 உடன் இணைந்து இந்த அழகான கதையை, உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி.

இந்த படத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை, பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இயக்குநர் மேக்னா குல்சார் கூறுகையில்…

“இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது, அதை நான் ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சாம் பகதூர் கதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே, விக்கி கௌஷல் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்தேன்.

ஈடு இணையற்ற நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்துள்ளார். இலட்சியங்களும் அதை வாழ்ந்து காட்டும் முன்மாதிரிகளும் காலத்தைக் கடந்தவர்கள், யாராவது ஒருவர் உண்மை மற்றும் நேர்மையுடன் வாழ்ந்தால், அது காலத்தைக் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ZEE5 மூலம் இந்த சொல்லப்படாத கதையை இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படம் என்னையும் சாம் பகதூரின் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைப் போல், பார்வையாளர்களின் மனதிலும் ஆழமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் விக்கி கௌஷல் கூறியதாவது…

“சாம் மானெக்ஷாவின் கதாபாத்திரத்தில் நடித்தது, மிகவும் பெருமையும் மரியாதையும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாகும். அத்தகைய துணிச்சலான மற்றும் புகழ்பெற்ற ஆளுமையைத் திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காகக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படத்தின் திரையரங்க வெளியீட்டின் போது ரசிகர்கள் கதாபாத்திரத்தின் மீது பாச மழை பொழிந்தனர்.

ZEE5 இல் நிகழும் இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர், இக்கதையைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல உதவும். எனவே 75வது குடியரசு தினத்தில் சாம் பகதூர் படம் மூலம் நம் தேசத்திற்கு அழியாத அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு படம் மட்டுமல்ல; இது பார்வையாளர்களுடன் பகிரப்படும் ஒரு பெரும் பயணம், இப்படம் மூலம் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.”

26 ஜனவரி 2024 முதல் ZEE5 இல் சாம் பகதூர் ஸ்ட்ரீமிங்கைப் கண்டுகளிக்கலாம்.

Witness the extraordinary Sam Bahadur on 75th Republic Day

சுசீந்திரன் – நரேன் கூட்டணியின் ‘ஆத்மா’.. ஆட்டிசம் பாதிக்கப்பட்டவனுக்கு கேட்கும் குரல்

சுசீந்திரன் – நரேன் கூட்டணியின் ‘ஆத்மா’.. ஆட்டிசம் பாதிக்கப்பட்டவனுக்கு கேட்கும் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் ஆத்மா, இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில் ஹாரர் திரில்லர் ஆத்மா,

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது.

பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக ‘தில்லுக்கு துட்டு 2’ புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில் நுட்பக் குழு
இயக்கம் – சுகீத்
கதை திரைக்கதை – ராகேஷ் N சங்கர் ,
வசனம் – K சந்துரு
இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு – விவேக் மேனன்
எடிட்டிங் – நவீன் விஜயன்
தயாரிப்பு – நஜீப் காதிரி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Director Suseenthiran presents Athma starring Narain in lead role

வெறும் 100 ரூபாயுடன் வந்து இன்று 400 கோடி பட்ஜெட் படத்தை உருவாக்கும் சந்துரு

வெறும் 100 ரூபாயுடன் வந்து இன்று 400 கோடி பட்ஜெட் படத்தை உருவாக்கும் சந்துரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பல படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு,

RC studios சார்பில் 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் R.சந்துரு,

பல புத்தம் புதிய படைப்புகளுடன் வந்திருக்கும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார்.

வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் அவரது பயணம், வியக்க வைக்கிறது.

400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து, கன்னடத் துறையில் சூப்பர் பவர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அவரது உருவாக்கத்தில் வரவிருக்கும் “ஃபாதர்”, “பி ஓ கே”, “ராம பாணசரிதா”, “டாக்” மற்றும் “கப்ஜா 2” போன்ற படங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பார்வையாளர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.

இந்த படங்களின் பிரமாண்டமான வெளியீடு பற்றிய ஒவ்வொரு தகவல்களும் நிச்சயம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

R.சந்துருவின் RC studios உடன் பாலிவுட் ஜாம்பவான் ஆனந்த் பண்டிட் கைகோர்த்துள்ளார் என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.

சந்துருவிற்கு கிடைத்து வரும் ஆதரவும், அங்கீகாரமும் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனந்த் பண்டிட் “கப்சா 2” மூலம் கன்னட திரையுலகில் நுழைவது, பெரும் உற்சாகத்தை தருகிறது.

அவரது இணைவு இப்படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வரும் என்பது உறுதி. ரசிகர்கள் இவர்களது கூட்டணியை காண ஆவலுடன் உள்ளனர்.

தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் சந்துருவுடன் இணைந்து 5 படங்களைத் தயாரிக்கவுள்ளது. உண்மையிலேயே திரையுலகிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்பமாகும். இவர்களின் இணைவு இந்தியாவைத் தாண்டி பான் வேர்ல்டு வரை விரிவடைவது பாராட்டத்தக்கது.

பிரஸ்மீட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதும், ரியல் ஸ்டார் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்கள் கலந்து கொள்வதும், சந்துருவின் பணிகளின் மீது பெரும் நம்பிக்கையையும், நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அறிவிக்கப்பட்ட “ராம பாணசரிதா” திரைப்படம் வெகு சுவாரஸ்யமாக உள்ளது.

“டாக்” என்ற திரைப்படம், செல்லப்பிராணிகளை விரும்புபவர்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் பார்வையாளர்களுக்கு சந்துரு என்ன ஆச்சரியத்தை வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“கப்ஜா 2” படத்தின் மீது ஏற்கனவே மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஐந்து படங்களையும், RC Studios சார்பில் R.சந்துரு உருவாக்கவுள்ளார்.

மேலும் இப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

R.சந்துரு

Director Chandru movies and huge budget productions

More Articles
Follows