தர்பார் விழாவில் சர்ச்சை பேச்சு; கமலை சந்தித்தார் லாரன்ஸ்

Raghava lawrence and kamal haasanரஜினியின் தர்பார் இசை விழாவில்… தன் சிறு வயதில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்ததாக பேசினார் லாரன்ஸ். இது சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழாவிலும் இதற்கு விளக்கமளித்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில் கமலை சந்தித்துள்ளார்..

வணக்கம்!

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.

எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.

அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

– ராகவா லாரன்ஸ்.

Overall Rating : Not available

Latest Post