வளர்ச்சியில்லாத கிராமம்.?; இளையராஜா இசையில் இணைந்த சந்தோஷ் – ரவீனாரவி

வளர்ச்சியில்லாத கிராமம்.?; இளையராஜா இசையில் இணைந்த சந்தோஷ் – ரவீனாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ்K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To – Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும்.

*1962 லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா?*

“வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது.

மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவம் மேற்கொண்ட இத்திரைப்படம் பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்கள் அடங்கிய இத்திரைப்படத்தில், 2017 – இல் தேசிய விருது வென்ற To – Let திரைப்படத்தில் நடித்த சந்தோஷ் நம்பிராஜன் நடித்திருக்கிறார்.

மேலும் லவ் டுடே, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்த ரவீனா ரவி இத்திரைப்படத்தின் கதாநாயகி ஆவார்.

வட்டார வழக்கு

ரவீனா முற்றிலும் மாறுபட்ட கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது இத்திரைப்படத்தின் இசை அம்சமாக பலம் சேர்க்கிறது. இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல் இவ்வளவு ஏன் காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த ஒரு புதுவிதமான காதல் உணர்வை காட்டுகிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.

படத்தில் ஒரு கால் மணி நேர பகுதி படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அடங்கி பல திருப்புமுனைகளை இத்திரைகதையில் நிகழ்த்தியுள்ளது.

1985 ஆம் ஆண்டில் நடக்கின்ற இத்திரைகதையில், 1962 ஆம் வருடத்தில் நடப்பது போல் ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

அப்போது ஒரு மேற்கு மதுரையில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரியவந்தது.

அக்கிராமத்தில் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது”
இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்மாதம் வரும் டிசம்பர் 29 – ஆம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் மற்றும் குழுவினர்கள்:

நடிகர்கள்: சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திர
திரைக்கதை மற்றும் இயக்கம்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன்
ஒளிப்பதிவு: மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன்
படத்தொகுப்பு: வெங்கட்ராஜன்

வட்டார வழக்கு

Santhosh Nambirajan and Raveenaravi starrer Vattara valakku

‘அயலான் ‘அப்டேட்.. : சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் சித்தார்த்

‘அயலான் ‘அப்டேட்.. : சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் ஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘அயலான்’ அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், படக்குழு ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூகஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை யூகித்து சொல்லி வந்தனர். அப்படி இருக்கும்போது ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ஈர்ப்பு, ரகுல் ப்ரீத் சிங்கின் அழகு, வில்லன் ஷரத் கேல்கர், நீரவ் ஷாவின் சிறந்த ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்புக்கு தேசிய விருது பெற்ற ராஜகிருஷ்ணன், சிங்க் சினிமா SFX பணிகளை மேற்கொள்ள, இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திறமையாளர்களின் வரிசையில் தற்போது சித்தார்த்தும் இணைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

’அயலான்’ திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்க ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

*தொழில்நுட்ப குழு:*

எழுத்து, இயக்கம்: ஆர்.ரவிக்குமார்,
ஒளிப்பதிவு: நீரவ் ஷா,
படத்தொகுப்பு: ரூபன்,
தயாரிப்பு வடிவமைப்பு: டி. முத்துராஜ்,
சண்டைப் பயிற்சி: அன்பறிவ்,
விஎஃப்எக்ஸ்: பிஜாய் அற்புதராஜ், பாண்டம் எஃப்எக்ஸ்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: ராஜகிருஷ்ணன்,
நடனம்: கணேஷ் ஆச்சார்யா, பரேஷ் ஷிரோத்கர், சதீஷ் கிருஷ்ணன்,
ஆடை வடிவமைப்பு: பல்லவி சிங், நீரஜா கோனா,
பாடல் வரிகள்: விவேக், மதன் கார்க்கி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
கிரியேட்டிவ் புரோமோஷன்: பீட்ரூட்,
போஸ்டர் வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
வண்ணக்கலைவை: Redchillies.color,
கலரிஸ்ட்: கென் மெட்ஸ்கர்,
தயாரிப்பு: கேஜேஆர் ஸ்டுடியோஸ்,
நிர்வாக தயாரிப்பாளர்: டி ஏழுமலையான்

Sivakarthikeyans Ayalaan update Siddharth joins hands with SK

விஷால் படத்தின் ஓடிடி உரிமையை அலேக்காக தூக்கிய அமேசான்

விஷால் படத்தின் ஓடிடி உரிமையை அலேக்காக தூக்கிய அமேசான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.

இவரது நடிப்பில் தற்போது ‘ரத்னம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal starrer Rathnam movie Ott updates

‘குறி வச்ச இறை விழனும்..’ விஜய்யை தாக்கி ‘வேட்டையன்’ ரஜினி பஞ்ச் டயலாக்.?

‘குறி வச்ச இறை விழனும்..’ விஜய்யை தாக்கி ‘வேட்டையன்’ ரஜினி பஞ்ச் டயலாக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானது.

ஞானவேல் இயக்கிய வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த டீசரில் ரஜினிகாந்த் பேசும் வசனம் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் குறி வச்சா எர விழனும் என ரஜினி மாஸாக ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பேசும் டயலாக் தற்போது வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார். அதில் இரு வேடன்கள் வேட்டைக்கு செல்கின்றனர்.

ஒருவன் வேட்டையாடி திரும்பி வருகிறார். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். அவனால் வேட்டையாட முடியவில்லை. ஆனாலும் அவனே வெற்றி பெற்றவன்” என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினி பேசிய வசனம் ‘குறி வைச்சா எற விழனும்…’ என்ற பேசிய பஞ்ச் டயலாக் விஜய்க்கு எதிராக உள்ளதாக விஜய்யை கலாய்க்கும் வகையில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி

Rajinis Vettaiyan punch dialogue trolls Vijay?

வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா – த்ரிஷா – யுவனுக்கு நன்றி.. – அமீர் அறிக்கை

வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா – த்ரிஷா – யுவனுக்கு நன்றி.. – அமீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 13ஆம் தேதி.. இன்றோடு ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு இயக்குனர் அமீர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அந்த அறிக்கையில்… கடந்த ஒரு மாதமாக எனக்கு ஆறுதலாக பேசி வந்த ரசிகர்கள் ஊடகங்கள் திரைத்துறைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ‘மௌனம் பேசியதே’ படம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் தன் வெற்றிக்கு கரம் கொடுத்த நடிகர் சூர்யா, லைலா, த்ரிஷா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘மௌனம் பேசியதே’ திரைப்படம் அமீரின் முதல் படம் மேலும் நடிகை திரிஷாவுக்கும் நாயகியாக அதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்

Director Ameer thanks note Suriya Trisha and Yuvan

‘குறி வச்சா இரை விழணும்…; ‘வேட்டையன்’ ரஜினிகாந்தின் மாஸ் டயலாக் டீசர்

‘குறி வச்சா இரை விழணும்…; ‘வேட்டையன்’ ரஜினிகாந்தின் மாஸ் டயலாக் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வேட்டையன்

இந்த டைட்டில் டீசரில்… ரஜினிகாந்த் கண்ணாடி போடும் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.. பலவிதமாக ஸ்டைல்களை கண்ணாடி அணியும் ரஜினி இதில் தனது அடுத்த அதிரடியை காட்டி இருக்கிறார் எனலாம்.

மேலும் ஆரம்பத்தில்… நேதாஜி புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஜெயிலர் படத்தைப் போல இதிலும் வேட்டையன் படத்திலும் ரஜினி போலீசாக நடிப்பதாக தெரிகிறது.

அடுத்தடுத்த ஷாட்டில் லத்தியுடன் நடந்து வருகிறார். ‘குறி வச்சா இரை விழணும்’ என ரஜினி பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது.

Here is the Official Tamil Title Teaser of Thalaivar 170 💥 *filmistreet* 🔥 *#Vettaiyan* 🌟😎🎉

Thalaivar 170 – Title Teaser

Rajinikanths 170 movie titled Vettaiyan

More Articles
Follows