தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரியை நாயகனாக்கி அழகு பார்த்தவர் வெற்றிமாறன்.
இவர் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் சூரி நாயகனாகவும் கதையின் நாயகனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
தற்போது இந்த படத்தின் (விடுதலை 2) இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதிக்கு அதிகப்படியான காட்சிகள் உள்ளன.
இந்த கதைக்களம் 1960-70களில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே விஜய்சேதுபதி மற்றும் அவருக்கு மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியார் இருவரையும் இளமையாக காட்ட டிஏஜிங் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கூடுதல் தகவல்…
இந்தப் படத்தை முடித்த பின் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அதன்பிறகு தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை 2’ பாகத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vetrimarans Viduthalai 2 news updates