கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணையும் பிரகாஷ் ராஜ்

கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணையும் பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prakash Raj teams up with Keerthy Suresh and Samantha for Savithiri biopicசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது.

‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், ரிப்போர்டராக சமந்தாவும் நடிக்கின்றனர்.

‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜயா வாகினி சக்ரபாணியாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் நாளை முதல் ஹைதரபாத்தில் நடைபெறவுள்ள இப்பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார்.

Prakash Raj teams up with Keerthy Suresh and Samantha for Savithiri biopic

மெர்சல் படத்தின் 4வது பாடல் போஸ்டரும் வெளியானது

மெர்சல் படத்தின் 4வது பாடல் போஸ்டரும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie 4th song Macho poster released

விஜய் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது.

அட்லி இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே படத்தின் பாடல்கள் குறித்த போஸ்டரை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.

முதலில் ஆளப்போறான் தமிழன் பாடல், அதனையடுத்து நீதானே என்ற பாடல், பின்னர் மெர்சல் அரசன் என்ற பாடல் போஸ்டர்கள் வெளியானது.

தற்போது 4வது பாடலான மசோ என்ற பாடல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்பாடல் விஜய் மற்றும் காஜல் அகர்வாலுக்கான டூயட் பாடல் எனவும் இவர்கள் இருவரும் இதில் டாக்டர்களாக நடித்துள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

இப்பாடல் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal movie 4th song Macho poster released

macho mersal

ஒரே கல்லில் மூனு மாங்காய்; இது விஷாலின் விவேகம்

ஒரே கல்லில் மூனு மாங்காய்; இது விஷாலின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalநடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்தவுடனே அங்கு பல அதிரடியான திட்டங்களை அறிவித்தார் விஷால்.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கும் பல விவேகமான முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா டிக்கெட்டுக்கு ஆன்லைனில் புக்கிங் செய்ய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஓர் இணையதளத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதன் மூலமாக புக்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வெறும் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுமாம்.

அந்த 10 ரூபாய்யும் 3 பாதியாக பிரிக்கப்பட்டு,

1. டிக்கெட் ஆன்லைன் இணையதளத்தின் பராமரிப்பு
2. தயாரிப்பாளர்கள் சங்க நன்மைக்கு
3. விவசாயிகளின் நன்மைக்கு என உதவிட திட்டமிட்டுள்ளராம்.

Vishal decided to create website for Online booking and profit should be given to farmers and movie producers

நாச்சியார்+மெர்சல்+சமூக சேவை… ஆச்சரியப்படுத்தும் ஜிவி. பிரகாஷ்

நாச்சியார்+மெர்சல்+சமூக சேவை… ஆச்சரியப்படுத்தும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash as volunteer in Our village Our responsibilityஇசையமைப்பாளராக இருந்த ஜிவி. பிரகாஷ் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகாவுடன் இவர் நடித்துள்ள நாச்சியார் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இதனிடையில் விஜய்யின் மெர்சல் படத்திற்காக ஏஆர். இசையமைப்பில் தான் பாடியுள்ள மெர்சல் அரசன் பாடலை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இவ்வாறாக பிஸியாக இருந்தபோதிலும் ஒரு புறம் விவசாயிகளுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு தன்னார்வத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியுடன் ஸ்மார்ட் போர்டும், அதைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும், அந்தப் பணியின்போதே அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகக் கழிப்பறை கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

‘Our village Our responsibility’ என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்தப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட இவர் தன்னையும் அந்தப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

GV Prakash as volunteer in Our village Our responsibility

ரஜினியை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

ரஜினியை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN congress Leader Thirunavukarasu invited Rajinikanth for his daughter marriageநேரடி அரசியலில் ரஜினிகாந்த் இறங்காவிட்டாலும் அவர் பேசினால் அது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

அண்மைகாலமாக ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார்.

தன் மகளின் திருமணத்திற்கு ரஜினியை அழைக்க அவர் நேரில் வந்ததாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றி இருவரும் ஆலோசித்து இருப்பார்கள் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

TN congress Leader Thirunavukarasu invited Rajinikanth for his daughter marriage

மெர்சல் அரசன் பாடல் வரிகளை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

மெர்சல் அரசன் பாடல் வரிகளை வெளியிட்டார் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash sung Mersal Arasan song for Vijays Mersal movieநாளை மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,

இப்படத்தில் உள்ள ஆளப்போறான் தமிழன் மற்றும் நீதானே ஆகிய இரண்டு பாடல்களை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டனர்.

ஏஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் இருவரும் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனை சிறப்பிக்கும் வகையிலும் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளதாலும் இதன் பாடல்களை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

இதற்கான விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் மெர்சல் அரசன் என்ற பாடலை ஜிவி. பிரகாஷ் பாடியுள்ளார்.

அப்பாடலின் வரிகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வரிகள்…

தொட்டு ஸ்டெப்ப வஸ்டா ஆல் சென்ட்ரு அதகளம் தான்..எட்து கீசி பாத்தா கத்தி சார்ப்பு தான்! #மெர்சல்அர்சன் வாரான் #MersalArasan

GV Prakash sung Mersal Arasan song for Vijays Mersal movie

ar rahman vijay gv prakash

More Articles
Follows