சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. போதுமான தண்ணீர் இல்லை என்பதால் திறந்து விடமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

மேலும் கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இது தொடர்பான ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தா’ படம் கர்நாடகத்திலும் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் சித்தார்த். அப்போது அங்கே நுழைந்த காவிரி நீர் போராட்டக்காரர்கள் சித்தார்த்தை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற சொன்னார்கள்.

ஒரு தமிழ் படத்திற்கு இங்கே பிரமோஷன் செய்யக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியின்றி சித்தார்த் பாதியில் புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..

பல ஆண்டுகளாக திறமையற்ற அரசியல் கட்சியினரால் இந்த நிலை நீடித்து வருகிறது. இதில் கலைஞர்களை புறக்கணிக்க கூடாது என தெரிவித்துள்ளார் .

இதே கருத்தை அவர் கன்னட மொழியில் பதிவிடும்போது என் காவேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் பதிவு செய்யும்போது அந்த வார்த்தையை அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash raj double game in cauvery water issue

விஷாலின் அசிஸ்டென்ட் ஹரி கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

விஷாலின் அசிஸ்டென்ட் ஹரி கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் நீண்ட கால நண்பரும் அவரின் உதவியாளரும், தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் அகில இந்திய செயலாளருமான ஹரிகிருஷ்ணன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

சிகிச்சையில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரி கிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Vishal’s assistant Hari Krishnan is admitted to the hospital

லியோ இசை விழா ரத்தான நிலையில் காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்

லியோ இசை விழா ரத்தான நிலையில் காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், “செப்டம்பர் 30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதில் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Audio launch of Vijay’s Leo cancelled due to safety reasons

விபத்தில் மரணமடைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று சூர்யா அஞ்சலி

விபத்தில் மரணமடைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று சூர்யா அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவுக்கு தமிழக மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகர் என்பதையும் தாண்டி அவர் பல்வேறு மாணவர்களுக்கு தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியக்கு உதவி வருகிறார்.

சூர்யா

இந்த நிலையில் சென்னை. செப்-28, சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் கடந்த 24.08.2023 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சூர்யா

நடிகர் சூர்யா இந்தத் தகவல் கேள்விப்பட்டு, எண்ணூரில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

சூர்யா

Actor Suriya visited his fan family

யார் நல்லவர்? யார் கெட்டவர்.? வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் ‘செவ்வாய்க்கிழமை’ பான் இந்தியா படம்

யார் நல்லவர்? யார் கெட்டவர்.? வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் ‘செவ்வாய்க்கிழமை’ பான் இந்தியா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஆர்.எக்ஸ். 100’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ என்ற ரஸ்டிக் திரில்லர் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் அஜய் பூபதி, ‘செவ்வாய்கிழமை’ படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது…

“திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுமையாக இருக்கும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற எளிய கேள்விகளுக்கு கூட எளிதில் பதில்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். திரையரங்குகளில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வித்தியாசமான ஆச்சரியத்தை அனுபவிப்பார்கள்.

படத்தை நவம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

தயாரிப்பாளர்கள் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “ஆர்எக்ஸ் 100′ படத்தின் மூலம் அஜய் பூபதி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கினார்.

இப்போது இவரது ‘செவ்வாய்கிழமை’ ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். வித்தியாசமான படம் இது. இந்தியத் திரையில் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார்.

நவம்பர் 17ஆம் தேதி பார்வையாளர்களும் இதனை உணர்வார்கள். படத்தை 99 நாட்கள் படமாக்கினோம், அதில் 51 நாட்கள் இரவு நேர படப்பிடிப்புகள். இது உயர்தர தொழில்நுட்பம் கொண்ட படம். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளராக பிரபலமான அஜனீஷ் பி லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘விக்ரம் வேதா’, ‘காந்தாரா’, ‘விக்ராந்த் ரோனா’, ‘சலார்’ போன்ற படங்களில் பணியாற்றியவரும் ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருதை வென்றவருமான எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்துள்ளார்.

மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கிறோம்” என்றனர். மேலும், படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த பான் இந்திய படத்தின் இயக்குநரான அஜய் பூபதி இதன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் உள்ளார்.

*நடிகர்கள்:* பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லட்சுமண் மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழுவினர்:*

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: டாக் ஸ்கூப்,
நிர்வாக தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி,
எடிட்டர்: குலப்பள்ளி மாதவ் குமார்,
வசனம்: தாஜுதீன் சையத், ராகவ்,
கலை இயக்குநர்: மோகன் தல்லூரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரகு குல்கர்னி,
ஃபைட் மாஸ்டர்கள்: ரியல் சதீஷ், பிருத்வி,
ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: தேசிய விருது பெற்ற ராஜா கிருஷ்ணன்,
ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா,
நடன இயக்குநர்: பானு,
ஆடை வடிவமைப்பாளர்: முதாசர் முகமது,
இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத்,
கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.

Chevvaikizhamai releasing on Friday 17th November 2023

‘சந்திரமுகி 2’ வெற்றிக்காக ரஜினி பாணியில் ஸ்ரீராகவேந்திர தரிசனம் செய்த லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ வெற்றிக்காக ரஜினி பாணியில் ஸ்ரீராகவேந்திர தரிசனம் செய்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தனி ஆலயம் கட்டி அவர் மீது அளவு கடந்த பக்தியை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி, செப்டம்பர் 28ஆம் தேதியன்று அதாவது நாளை வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே.. இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டிற்கு முன் மந்த்ராலயம் சென்று ராகவேந்திரா சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றிருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Ragava Lawrence visited Manthralayam to pray for Chandramukhi2 success

More Articles
Follows