ஜெயலலிதா வேடத்தில் நடிக்க முடியாது; கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க முடியாது; கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த ஒட்டுமொத்த திரையுலகின் பேராதரவை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை சாவித்திரியாகவே அவர் வாழ்ந்திருந்தார் என பல பாராட்டுக்களை பெற்றார்.

அதனையடுத்து தற்போது உருவாகவுள்ள என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் அவருடைய சமீபத்திய பேட்டியில், தமிழில் பிரபல இயக்குனர்கள் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க உள்ளனர்.

எனவே அம்மா ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்றதற்கு

“ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம்.

எனக்கு பயமாக உள்ளது. அந்த அளவுக்குத் தைரியம் என்னிடமில்லை.” என்று கூறினார்.

பிளாஸ்டிக்கு தடை செய்ய விவேக்-சூர்யா-ஜோதிகா-கார்த்தி பிரச்சாரம்

பிளாஸ்டிக்கு தடை செய்ய விவேக்-சூர்யா-ஜோதிகா-கார்த்தி பிரச்சாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and jyothika in plastic awareness adசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை வருகிற நாளை 25-ந்தேதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துவக்கி வைப்பார்கள்.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷாலின் *அயோக்யா* இன்று தொடக்கம்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷாலின் *அயோக்யா* இன்று தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayogyaவிஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிக்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் G.K. ரெட்டி , கலைப்புலி S. தாணு , ரவி பிரசாத் , KS ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் A.R. முருகதாஸ் , லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரா. பார்த்திபன் , KS ரவிக்குமார் , சச்சு , வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு இசை சாம் C.S , கேமரா R. கார்த்திக் , கலை S.S. மூர்த்தி , எடிட்டிங் ரூபன் , ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , நடனம் பிருந்தா , ஷோபி , காஸ்டியூம் உத்தாரா மேனன் , ப்ரொடெக்ஷன் மேனேஜர் முருகேஷ் , புரொடெக்ஷன் எக்சிகியூடிவ் ஆண்டனி சேவியர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ECR – ல் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் வைத்து நடைபெறவுள்ளது.

*உன்னால் என்னால்* படத்தில் மிரட்டும் வில்லியாக சோனியா அகர்வால்

*உன்னால் என்னால்* படத்தில் மிரட்டும் வில்லியாக சோனியா அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonia aggarwalஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “

இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் A.R.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கிச்சாஸ் / இசை – முகமது ரிஸ்வான்

பாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.

எடிட்டிங் – M.R.ரெஜிஷ் / கலை – விஜய்ராஜன்

நடனம் – கௌசல்யா / ஸ்டன்ட் – பில்லா ஜெகன்.

தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன்.

தயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.

தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.

இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.

உன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும் என்றார் இயக்குனர்.

சீரியல் நடிகரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்.!

சீரியல் நடிகரை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rioபிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது கனா படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

இதன் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது தனது அடுத்த பட தயாரிப்பு தகவலையும் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ-வை ஹீரோவாக வைத்து 2வது படத்தை தயாரிக்கிறார்.

யூடியுப்பில் பிரபலமான் BlackSheep Team இதில் பங்கு வகிக்கிறது.

ஆர்ஜே விக்னேஷ்காந்தும் இதில் நடிக்கிறார்.

நான் தேசிய விருது வாங்கினாலும் என் அடையாளம் சிவகார்த்திகேயன் தான்.. : பாண்டிராஜ்

நான் தேசிய விருது வாங்கினாலும் என் அடையாளம் சிவகார்த்திகேயன் தான்.. : பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director pandirajகடந்த 2009ல் வெளியான பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.

இப்படம் சிறந்த பட பிரிவில் தேசிய விருதையும் பெற்றது.

அதன் பின்னர் டிவியில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மெரினா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கனா பட இசை வெளியீட்டில் பாண்டிராஜ் பேசும்போது…

“நான் தேசிய விருது பெற்றாலும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கியவரா? அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவரா? என்று தான் கேட்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தான் என் விசிட்டிங் கார்டு” என்று பேசினார்.

More Articles
Follows