நடிகையர் திலகம் புகழ் நாக் அஷ்வின் படத்தில் பிரபாஸ்

நடிகையர் திலகம் புகழ் நாக் அஷ்வின் படத்தில் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhasபாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ஒரு உண்மையான சர்வதேச திரை நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்றார் அது மிகையில்லை.

திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிமுகமாகவும் உத்வேகத்தோடும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான வைஜயந்தி மூவிஸ், பல்வேறு மகத்தான வெற்றிப் படங்களையும், மகோன்னதமான கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என் டி ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, சோபன் பாபு, கிருஷ்ணம் ராஜூ உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடிப்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்த இந்நிறுவனம், ஜூனியர் என் டி ஆர், மகேஷ் பாபு, ராம் சரண், நாரா ரோஹித் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல சமகால கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்கும் உரியது.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அஸ்வானி சி தத் நிறுவிய வைஜயந்தி மூவிஸ், நடிகர் பிரபாஸ்-ன் அடுத்த படத்தை தயாரிக்கிறது.

‘நடிகையர் திலகம்’ என தமிழிலும், ‘மகாநடி’ என தெலுங்கிலும் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் பயணத்தை தத்ரூபமாக படம் பிடித்து, சாதனைப் படைத்த இயக்குனர் நாக் அஷ்வின், அடுத்ததாக வைஜயந்தி மூவிஸ் தயாரிபில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் மும்மொழிப் படத்தை இயக்குகிறார். 2019ல் வெளியான இத்திரைப்படம், மூன்று தேசிய விருதுகளையும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் அதிவிரைவில்!

CAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவாகாமி” இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு

CAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவாகாமி” இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Raviபெரு வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.
மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள் பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி இணைந்து “சிவகாமி” படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பாளர்களாக
தங்கராஜ் ,முத்துகுமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே எம் பஷீர் ,நடிகர் ராதாரவி , பவர் ஸ்டார் சீனிவாசன் , MD Cinemas AM.சௌத்ரி, இணை தயாரிப்பாளர்கள் தங்கராஜ், முத்துகுமார் உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர், தயாரிப்பாளர் ஜே எம் பஷீர்
பேசியது…

என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்தப்படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு நம் முதல்வர் அந்நாளை பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார்கள். இப்படம் பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம் அதனால் கண்டிப்பாக இந்தப்படத்தை செய்யுங்கள் என்று சொன்னேன். இன்று CAA, NPR, பற்றி தவறான தகவல்கள் கூறி உறவுகளாக உள்ள இந்து, இஸ்லாம் மக்களை பிரிக்கின்றனர். நம் முதல்வர் எடப்பாடி இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். இங்கு ஹீரோ ராதாரவி சார் தான். எனக்காக அவர் வந்துள்ளார். இந்தப்படத்தை நல்ல முறையில் AM.சௌத்ரி கொண்டு வந்துள்ளார். நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி.

MD Cinemas AM.சௌத்ரி பேசியது…

ஜே எம் பஷீர் சாருக்கு நன்றி அவரால் தான் இந்தப்படம் செய்கிறேன். அவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார். எனக்கும் செய்துள்ளார். ராதாரவி அண்ணணுக்கு என் நன்றிகள். பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம் இது அதனால் தான் இந்தப்படம் செய்கிறேன். அரசாங்கம் பெண் குழந்தை பாதுகாப்பு நாளை அறிவித்துள்ளது அதற்கு நன்றிகள். இந்தப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தேவதானம் பேசியது…

ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி ஆகியோர் தான் என்னை வழிநடத்தினார்கள் அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியது…

நான் படத்தில் நடிக்கும் முன் ராதாரவி அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என நான் நடிக்க போய்விட்டேன். ஆனால் அவர் சொன்னது நல்லதற்குதான் கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன். இங்கு ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் சீக்கிரம் கட்சி ஆரம்பியுங்கள். என்னை சேர்த்து கொள்ளுங்கள், என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள். “சிவகாமி” படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற படகுழுவுக்கு வாழ்த்துகள்.

நடிகர் ராதாரவி பேசியது…

இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வாழ்த்துகள். என்னை திட்டுவதும் வாழ்த்துவதும் பத்திரிக்கை நண்பர்கள் தான். அவர்களுக்கு நன்றி. “சிவகாமி” படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். இசை வெளியீட்டில் அரசியல் பேசினால் அது வைரலாகி விடுகிறது. எனது வேலையை விட்டுவிட்டு நான் CAA வுக்கு ஆதரவாக பேசப்போகிறேன். நான் வாழும் காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசுவேன். இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்தபடத்தில் சுஹாசினி தவிர அனைவரும் புதுமுகங்கள் ஆனால் படத்தை பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார். சாமி மாதிரியே இருக்கிறார். மோடி, அமித்ஷா பற்றி பேச இங்கு நான் வரவில்லை. அதற்கு வேறு இடம் இருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்துள்ள தேவதானம் கிறிஸ்து, இந்து சாமியை பற்றிய படம், ஜே எம் பஷீர் எனும் முஸ்லிம் உதவியில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மதமும் ஒன்று சேரும் படமாக இப்படம் இருக்கிறது. அனைவரும் இப்படத்தை வாழ்த்த வேண்டும். நாம் இந்தியர் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். CAA வை எதிர்க்க சொல்லி கையெழுத்து வாங்குவதற்கு பதில் இப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம். CAA பற்றி ஒன்றுமே தெரியாமல் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் அவர்களை விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடும். கேவலமாக இருக்கிறது. CAA வேண்டாம் என இப்போது சொன்னால் எதிர்காலத்தில் இங்கே நமக்கு இடமே இருக்காது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். லிஸ்ட் போடுவது தான் NRC. லிஸ்ட் போட்டால் தான் நமக்கே நம்மைபற்றி தெரியும். என் வீட்டில் எத்தனை பேர் என எனக்கு தெரிய வேண்டுமல்லவா. நல்லவேளை என் தந்தை காலத்தில் NRC இல்லை அப்படி கணக்கெடுத்திருந்தால் ஊர் ஊராக அலைந்திருக்க வேண்டும். நம்மை பற்றி தெரிந்துகொள்ள NRC அவசியம். அத்தனை மதங்களும் இணைந்து இந்தியாவை காக்க வேண்டும். பெண் குழந்தையை காக்க வேண்டும் என இந்தப்படம் சொல்கிறது. எல்லோரும் இந்தப்படத்தை பாருங்கள் வாழ்த்துங்கள் நன்றி.

இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram fans says Cobra first look is best look டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து.

இவரின் 3வது படமாக உருவாகி வருகிறது ’கோப்ரா’.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

இந்த போஸ்டரில் விக்ரம் பல விதமான தோற்றங்களில் வருகிறார்.

இது ரசிகர்கள் பெருமளவில் கவர்ந்துள்ளது. முக்கியமாக விக்ரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எத்தனையோ பர்ஸ்ட் லுக்குகளை பார்த்துருக்கோம். இதான் பெஸ்ட் லுக் என்கின்றனர் அவர்கள்.

Vikram fans says Cobra first look is best look

cobra first look

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil movie kayiruஉலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.

ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.

இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.

அதுமட்டுமல்ல. இங்கிலாந்து, நஜீரியா தொடங்கி அமெரிக்கா வரை, இப்படம் லண்டன் சர்வதேச திரை விருது விழா, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பிடித்தது.

சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வந்திருக்கிறது.

‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய் ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.

கயிறு திரைப்படம் இத்தனை விருதுகள் வாங்க காரணம் என்ன?

இது குறித்து இயக்குநர் கணேஷ் கூறியிருப்பதாவது:

தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துக்கிறது. என் படத்தின் கதை தினமும் காலையில் ஒரு இளம் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்யவேண்டுமென்றால் தன்னுடைய தொழிலை விடவேண்டும் என்கிற சூழலுக்கு அவன் தள்ளப்படுகிறான். தான் மிகவும் விரும்பும் காளை மாட்டையும் அவன் இழக்க வேண்டும். இழக்கவேண்டியது அவன் தொழிலை மட்டுமல்ல, தன் தந்தை வழியாக தன்னிடம் வந்த பாரம்பரியத்தையும் தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நம் கலாச்சாரத்தின் ஒரு பழக்கவழக்கத்தை விட வேண்டும். இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான் என்பதே கதை. இப்படம் நம் கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதன் தேவை குறித்தும் பேசுகிறது.

என் படம் மூலமாக சில பொருத்தமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளேன். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதையும்ம் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது. மிக முக்கியமாக விலங்குகளும் பறவைகளும் தாங்கள் உயிர்பிழைத்திருக்க மனிதர்களை சார்ந்திருக்கிறது. நாம் அவற்றை துன்புறுத்த கூடாது. மாறாக, நாம் அவற்றின் மீது அன்பையும் கனிவையும் காட்டவேண்டும்.

இப்படம் பல்வேறு சமூக கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது, அனைத்து வகையான ரசிகர்களும் ரசிக்கும்படியான படமாகவும் இது இருக்கும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மார்ச் 1- அன்று கனடாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மார்ச் 13 இப்படம் வெளியாகும்.

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anbulla Ghilliசமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது…

“அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் அனைவருமே செல்லப்பிராணி மீது காதல் கொண்டவர்கள். உதயநிதியின் கடும் வேலை நேரங்களில் அவரது செல்லப்பிரானியுடன் வரலாற்று நாயகர் திரு கருணாநிதி அவர்கள், கொஞ்சி விளையாடிய சில இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டின் போது எங்களிடம் நேரம் ஒதுக்கி படம் பற்றி, படப்பிடிப்பு பற்றி, பல விசயங்களை கேட்டறிந்து, அனைவரும் வெற்றி பெற வாழ்த்தினார். அவரது எளிமையும் பண்பும் இயல் வாழ்வில் செல்லப்பிராணி மீது அவரது காதலும் எங்களை பிரமிக்க செய்தது. நேர்மறை பாராட்டுகள் கடந்து பலர் செல்லப்பிராணி காதலர்களாக மாறுவது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. “அன்புல்ல கில்லி” நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக எங்கள் படம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள். எனவே இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

“அன்புள்ள கில்லி” திரைப்படம் இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கிறது. மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா இப்படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, இவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது.

Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankarஇந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.
ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.
எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன்.
Art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.
எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், திரு சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

ஷங்கர்

More Articles
Follows