மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாகுபலி நாயகன் பிரபாஸ் இதில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் இந்த புதிய படத்திற்கு ‘ப்ராஜெக்ட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்-க்கு தேசிய விருது பெற்று தந்த ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக்அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 500 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

ஹிந்தி சினிமாவில் இருந்து அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தமிழில் இருந்து நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து துல்கர் சல்மானும் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகுகிறது.

நாக்அஸ்வின்

Prabhas Suriya and Dulquer will be part of Project K

கூடுதல் தகவல்…

கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாலார் மற்றும் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் அகிய 2 படங்களும் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ‘பிராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

30 வருடங்களாக ரசிகர்களை கிறங்கடித்த ‘சொப்பன சுந்தரி’-க்கு உருவம் கொடுத்த ஐஸ்வர்யா

30 வருடங்களாக ரசிகர்களை கிறங்கடித்த ‘சொப்பன சுந்தரி’-க்கு உருவம் கொடுத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடித்த திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமான பெயர் சொப்பன சுந்தரி.

இந்த கற்பனை பெயருக்கு இன்று வரை தமிழ் சினிமாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடிக்கும் சொல்லான இந்த சொப்பன சுந்தரியை தற்போது கண்டெடுத்துள்ளனர்.

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிட்டுள்ளார் இயக்குனர் சார்லஸ்.

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டிருப்பதால் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர்.

நகைச்சுவை வேந்தர்களான கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு வரை.. இந்த பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சொப்பன சுந்தரி

Aishwarya Rajesh’s next film in Soppana Sundari

‘சேத்துமான்’ இயக்குனருடன் ‘உறியடி’ விஜயகுமார்.; 2 படங்களிலும் 1 நாயகனை ஒப்பந்தம் செய்த ரீல்குட்

‘சேத்துமான்’ இயக்குனருடன் ‘உறியடி’ விஜயகுமார்.; 2 படங்களிலும் 1 நாயகனை ஒப்பந்தம் செய்த ரீல்குட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உறியடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது.

கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள்.

இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான், ’வடசென்னை’ பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜும் பணியாற்றியுள்ளார்கள்.

பிரபல எழுத்தாளர் அழகிய பெரியவன் , விஜய்குமார், தமிழ் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தில் பணிபுரிந்த C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார்.

கலை இயக்குநராக ஏழுமலை ஆதிகேசவன் பணியாற்றியுள்ளார். ’ஸ்டன்னர்’ சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஸ்ரீகிரிஷ் மற்றும் ராதிகா நடனம் அமைத்துள்ளனர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதனிடையே இதே ரீல்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திலும் உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijaykumar and Reel Good Films complete their 2nd film in a single stretch

தொழிலதிபரின் பவுன்சராக மாறினார்.; தமன்னாவின் தடாலடி அவதாரம்.!

தொழிலதிபரின் பவுன்சராக மாறினார்.; தமன்னாவின் தடாலடி அவதாரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமன்னா நடிப்பில் உருவாகி ரிலீஸ் ரெடியான படம் ‘பப்ளிக் பவுன்சர்’.

ஒரு கோடீஸ்வரரின் லேடி மெய்காப்பாளராக (பவுன்சர்) நியமிக்கப்படும் பெண்ணின் கதை இது.

BabliBouncer

டைரக்டர் மதுர் பந்தார்கர் இயக்கியுள்ளார்.

கரீனா கபூர் நடித்த ஹீரோயின் படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.

இந்த படத்தை வினீத் ஜெயின் ஜங்கிளி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளனர்.

காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

Babli Bouncer படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 23ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பப்ளி பவுன்சர் படம் ஹிந்தியில் உருவானாலும் தமிழ் & தெலுங்கு மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

BabliBouncer

Here’s the trailer of film #BabliBouncer @tamannaahspeaks
https://t.co/dfufP7s5Ka
#BabliBouncerOnHotstar @DisneyPlusHS from sept 23rd
@starstudios_ @JungleePictures

#BabliBouncer Official Telugu Trailer

Link: https://t.co/CJq2thts7T

#Tamannaah #TamannaahBhatia #TamannaahSpeaks #BabliBouncerOnHotstar #BabliBouncerFromSep23

.@tamannaahspeaks

Tamannah turned businessman’s bouncer

இவர்தான்யா உண்மையான மாணவன்.; ஆசிரியர்கள் தினத்தில் ராஜ்கிரண் செய்த ஆச்சர்ய செயல்.; நம்மால் முடியுமா?

இவர்தான்யா உண்மையான மாணவன்.; ஆசிரியர்கள் தினத்தில் ராஜ்கிரண் செய்த ஆச்சர்ய செயல்.; நம்மால் முடியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 2வது ஜனாதிபதியாக பதவி வகித்த மறைந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக இன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தான் பள்ளியில் படித்த போது தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களின் ஒவ்வொருவரையும் நினைவு வைத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.

ஆசிரியர் தின நன்னாளில்,

எனக்கு கல்விப்பிச்சை அளித்த,
ஆசிரியப்பெருந்தகையினர்
அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்…

1955 முதல் 1966 வரையிலான காலகட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியின்

முதல் வகுப்பு ஆசிரியர்
மோஸஸ் ஐயா அவர்களுக்கும்,
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்
குமார் ஐயா அவர்களுக்கும்,
மூன்றாம் வகுப்பு ஆசிரியை
ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும்,
நான்காம் வகுப்பு ஆசிரியை
செல்லம் அம்மா அவர்களுக்கும்,
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்
மாதவன் ஐயா அவர்களுக்கும்,

சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின்

ஆறாம் வகுப்பு ஆசிரியர்
சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும்,
ஏழாம் வகுப்பு ஆசிரியர்
நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும்,
சிறப்பு தமிழாசிரியர்
நடராஜன் ஐயா அவர்களுக்கும்,
எட்டாம் வகுப்பு ஆசிரியர்
கேசவன் ஐயா அவர்களுக்கும்,

ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில்
ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்
ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும்,
பத்தாம் வகுப்பு ஆசிரியர்
ராஜு ஐயா அவர்களுக்கும்,
பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர்
ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும்,

சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின்
தலைமை ஆசிரியராய் இருந்த,
செல்வம் ஐயா அவர்களுக்கும்,

ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின்
தலைமை ஆசிரியராய் இருந்த,
ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும்,

என் பணிவையும் நன்றிகளையும்
காணிக்கையாக்குகிறேன்…

அவர்களெல்லாம்,
இப்பொழுது எங்கிருக்கிறார்கள்
என்பது தெரியாவிடினும்,
அவர்கள் மனச்சாந்தியுடனும்,
சமாதானத்துடனும், நிறைவோடு வாழ,
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்திக்கிறேன்…

– Actor Rajkiran – ராஜ்கிரண்

Actor Rajkiran’s unique teachers day wishes

நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடகக் காதல் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலை மையமாக வைத்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் சிறந்த படம் என அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் .

இதனால் உற்சாகம் அடைந்த இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

More Articles
Follows