தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான ‘நடிகையர் திலகம்’ என்ற படம் அண்மையில் வெளியானது.
இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன.
மேலும் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்றும் கிட்டதட்ட ஜெமினியை வில்ல்ன் போல சித்தரித்து இருந்தனர்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்றாலும் ஜெமினி கணேசனின் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.
அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த எதிர்ப்பு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.