66வது நேஷ்னல் அவார்ட்ஸ்: ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது

66வது நேஷ்னல் அவார்ட்ஸ்: ‘மகாநடி’ கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National Film Awards 2019 Best actress Keerthi suresh for Mahanati இந்திய சினிமாவிற்கான 66வது தேசிய விருதுகள் இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகளை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

இந்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர்க்குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

இந்தாண்டில் மட்டும் 419 படங்கள் போட்டியிட்டன. இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விருதினை, உத்தர்காண்ட் மாநிலம் வென்றுள்ளது. (சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் அவார்ட்)

மற்ற விருதுகள் விவரம்..

சிறந்த தமிழ்ப்படம் – பாரம்
சிறந்த நடிகர் : அந்தாதுண் படத்திற்காக ஆயுஷ்மான் குரானா, உரி படத்திற்காக விக்கி கவுசல்
சிறந்த நடிகை – நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ்
சிறந்த ஆக்ஷன் திரைப்படம் : கேஜிஎஃப் சாப்டர் 1
சிறந்த நடனம் – பத்மாவத் படத்திற்காக கொமார்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – கேஜிஎஃப்

சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.

சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டது.

National Film Awards 2019 Best actress Keerthi suresh for Mahanati

‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் இல்லை; பொறுப்பில்லாத நயன்தாரா டீம்

‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் இல்லை; பொறுப்பில்லாத நயன்தாரா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issueகமல், மோகன்லால் இணைந்து நடித்த உன்னைப் போல் ஒருவன் பட இயக்குனர் சக்ரி டூலோட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம்.

இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் எப்போதோ உருவாகி எப்போதோ வந்திருக்க வேண்டும்.

ஆனால் பல பிரச்சினை மற்றும் தடைகளால் உருவாகியும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் வெளியாகவில்லை. தமிழகத்தில் காலை, மதியம், மாலை காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை.

ஆனால் பல தியேட்டர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இருந்தன.

இதனால் ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். (இந்த செய்தி வெளியாகும்வரை எங்கும் படம் வெளியாகவில்லை)

படம் வெளியாகவில்லை என்றால் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா?

தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அறிக்கை வெளியிடும் நயன்தாரா படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவலை சொல்லியிருந்தால் நாங்கள் இப்படி ஏமாற்றத்துடன் திரும்பி இருக்க மாட்டோம் என ரசிகர்கள் நொந்தப்படி கூறி சென்றனர்.

தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களை சம்பந்தபட்டவர்கள் இப்படி ஏமாற்றுவது நியாயம்தானா..?

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issue

யோகிபாபுவின் அடுத்த கலக்கல் காமெடியில் உருவாகும் “காதல் மோதல் 50/50”

யோகிபாபுவின் அடுத்த கலக்கல் காமெடியில் உருவாகும் “காதல் மோதல் 50/50”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்சன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.

யோகிபாபுவின் தர்மபிரபு மற்றும் கூர்க்காவின் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் “காதல் மோதல் 50 /50”. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் “த்ரயா” என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.

தற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் “கண்ணைநம்பாதே ” என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .

‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்.; சுரேஷ் காமாட்சி அதிரடி

‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்.; சுரேஷ் காமாட்சி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu is out of Venkat Prabhus Maanadu Movie will start with new heroவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான்.

ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!”

Simbu is out of Venkat Prabhus Maanadu Movie will start with new hero

திருட்டு கும்பலுக்கு டி.ஆர். துணை; ‘டைம் இல்ல’ டைரக்டர் சதீஷ் கர்ணா குமுறல்

திருட்டு கும்பலுக்கு டி.ஆர். துணை; ‘டைம் இல்ல’ டைரக்டர் சதீஷ் கர்ணா குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Time illa director statement against T Rajendarஅறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’.

இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பேர் போட்டுக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

இது என்ன மாதிரியான திருட்டு வேலை என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குனர். ஒரு படத்தை இயக்குவது என்பது தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து உழைக்கும் இயக்குனருக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட அவமரியாதையை யார் வந்து கேட்பது…

இதற்கு தயாரிப்பாளரிடம் இயக்குனர் விளக்கம் கேட்டதற்கு, “இயக்குனர் பாலா ரீமேக் பன்ன படத்துல இருந்து பாலாவையே தூக்கி போடலியா” அப்படீன்னு சொல்றாராம்.

அப்படக்கம்பெனி பாலாவ தூக்கிட்டு, அவர் இயக்கிய ஒரு காட்சிய கூட அவர் பயன்படுத்தல என்பது தயாரிப்பாளர் மனோ பார்த்திபனுக்கு தெரியுமா., தெரியாதா..??

ஒரு இயக்குனரை அந்த படத்திலிருந்து தூக்க வேண்டும் என்றால், நீங்கள் படம் முழுவதையும் வேறு ஒரு கதை கொண்டு எடுக்க வேண்டும்…

இப்படி அடுத்தவர் உழைப்பையும், அறிவையும் திருடும் கும்பல் ஒன்று, கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது…

இந்த அறிவு திருடும் கும்பலுக்கு பிரபல இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு கொடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ததுதான் கொடுமை.

காரணம், டி.ராஜேந்திரன் உயிருள்ள வரை உஷா இயக்கி முடித்த போது அவருக்கும் இதே போல சிக்கல் வந்தது. பல போராட்டத்துக்கு பின் தான் இயக்குனர் அடையாளமே அவருக்கு கிடைத்தது. அப்படி இருக்கும் போது ஒரு படைப்பாளியின் உணர்வை புரியாதவரா டி.ஆர்.

தயாரிப்பாளர் நடிகர் மனோ பார்த்திபன் எந்த சமரசத்திற்கும் வராததால் வேறு வழியின்றி தனது அடையாளத்தை காப்பாற்றி கொள்ள முறைப்படி, சென்சார் போர்டு, கில்டு சங்கம், காவல்துறை என அனைத்து இடங்களிலும் இயக்குனர் சதீஷ் கர்ணா புகார் கொடுத்திருக்கிறார்.

Time illa director statement against T Rajendar

Time illa director statement against T Rajendar

நாற்பத்தைந்து நாட்கள் நாற்பது லொக்கேஷன்கள். படக்குழுவினரை பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்

நாற்பத்தைந்து நாட்கள் நாற்பது லொக்கேஷன்கள். படக்குழுவினரை பிரமிக்க வைத்த ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.

அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.

அறிமுகமான படம் வெளியாகும் முன்னே பாராட்டுகளை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத் தக்கது.

More Articles
Follows