தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நிவின் பாலி நடித்துள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதியுள்ளார் மதன் கார்க்கி.
ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது இயக்கியிருக்கும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாதவர்களிடம் கொடுக்கும் ஒருவரைப் பற்றிய கதை இது.
இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
தமிழில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வெளியாக இருக்கிறது. தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
ஏற்கெனவே, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்களுக்கான தமிழ் வசனங்களையும் மதன் கார்க்கி தான் எழுதினார். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார்.
1800-ம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.
“இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும், மையக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே, தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம்.
இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் மொழிமாற்றுப் படத்தைப் பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் மதன் கார்க்கி.