தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ‘நடிகையர் திலகம்’ என்ற படம் உருவாகியுள்ளது.
இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமின் கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.
இப்படம் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது கீர்த்தி சுரேஷ் பேசியதாவது…
‘நடிகையர் திலகம்’ படம் உருவாக காரணம் இயக்குனர் நாகி மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா. இப்படத்தின் கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை.
சிறந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நான் எப்படி நடிப்பது? நிறைய பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரியும். என்று நினைத்தேன். இயக்குனர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.
‘தொடரி’ படத்தை பார்த்துதான் இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நான் அப்படத்தில் நடித்த போது நினைத்தேன். அந்த படத்தை நிறைய பேர் குறை சொன்னார்கள்.
ஆனால், அந்தப் படம் தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.” என்றார்.
சிவகார்த்திகேயனுடன் 2 படங்களிலும் விஜய் 2 படங்களிலும் (1 படம் உருவாகி வருகிறது) நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஆனால் தனுஷ் உடன் நடித்த படமே சாவித்ரி என்ற நடிகையாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthy suresh got Mahanathi chance by Thodari movie role