தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.
இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மலையாள இயக்குனர் சித்திக் இஸ்மாயில் மறைவையடுத்து இன்று வெளியாக இருந்த துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
Dulquer’s ‘King Of Kotha’ Trailer release of postponed due to Siddique’s demise