ரஜினியின் பழைய ரூட்டூக்கே சென்று அவரையே மிஞ்சிய கமல்.; ஆகஸ்டில் ஆரம்பிக்கலாங்களா.?

ரஜினியின் பழைய ரூட்டூக்கே சென்று அவரையே மிஞ்சிய கமல்.; ஆகஸ்டில் ஆரம்பிக்கலாங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’.

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு 2024 ஜனவரியில் இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்க அவருக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் வந்த தகவல்களை FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

3 வாரங்கள் மட்டுமே கமல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் கமல். அவருக்கான காட்சிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

1970களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி வில்லனாக அறிமுகமானார். 45+ ஆண்டுகளில் தற்போது ரஜினி மிகப்பெரிய நாயகனாகி ரூ 150 கோடியை சம்பளமாக பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் பழைய வில்லன் ரூட்டுக்கு சென்று ரஜினியின் சம்பளத்தை கமல் தொட்டுவிட்டார் என்கின்றனர் திரைப்பட வல்லுனர்கள்.

Kamal plays as baddie and his salary in Project K updates

ஜெயலலிதாவின் பாடிகாட் ‘நாக் அவுட் கிங்’ சார்பாட்டா நடிகர் ஆறுமுகம் காலமானார்

ஜெயலலிதாவின் பாடிகாட் ‘நாக் அவுட் கிங்’ சார்பாட்டா நடிகர் ஆறுமுகம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸர் ஆறுமுகம். இவர் குத்துச்சண்டை வீரர். 1980 களில் குத்துச்சண்டை போட்டிகளில் ‘சார்பட்டா பரம்பரை’க்காக ஆடிவந்தார்.

அப்போதே ‘நாக் அவுட் கிங்’ என பலராலும் பாராட்டப்பட்டவர்.

மேலும் 1985-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாட் ஆக இருந்துள்ளார் பாக்ஸர் ஆறுமுகம்.

இவருக்கு தற்போது வயது 68 வயதாகிறது.

இவர் ‘தண்ணில கண்டம்’, ‘வா குவாட்டர் கட்டிங்’ & ‘ஆரண்ய காண்டம்’, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார் ஆறுமுகம்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இன்று ஜூன் 17ஆம் தேதி காலமானார்.

பாக்ஸர் ஆறுமுகம்

Boxer Actor Bodyguard Arumugam passes away

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன்; பிரபல ஹாலிவுட் நடிகை பங்கேற்க உள்ளார்

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன்; பிரபல ஹாலிவுட் நடிகை பங்கேற்க உள்ளார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அளவில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 15 சீசனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார்.

அதே போல் 16-வது சீசன் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான்கானே தொகுத்து வழங்கினார்.

ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் ஒடிடி 2 பல சிறப்பு அம்சங்களுடன் இன்று தொடங்குகிறது.

மும்பை பிலிம் சிட்டியில் இந்தி பிக்பாஸ் ஒடிடி 2 நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.புதிய சீசனின் போட்டியாளர்கள் இன்று தொடக்க எபிசோடில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

பிக் பாஸ் சீசன் ஜியோ சினிமா மூலம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இது ஜியோ சினிமா பயன்பாட்டில் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பத் தொடங்கும்.

இதை ஆன்லைனில் இலவசமாகப் பார்க்கலாம் மற்றும் 24X7 நேரலை ஸ்ட்ரீமிங்கைக் கொண்டிருக்கும்.

இந்த நிலையில், பிரபல ஆபாச நடிகை மியா கலீபா வைல்டு கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் தரப்பில் அணுகப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.

Famous porn actress Mia Khalifa who participated in Hindi Bigg Boss

BREAKING அரசியல் எப்போ.? ஓட்டுக்கு காசு வாங்காதீங்க; தெளிவா இருங்க – விஜய்

BREAKING அரசியல் எப்போ.? ஓட்டுக்கு காசு வாங்காதீங்க; தெளிவா இருங்க – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் கல்வி விருது விழா தற்போது சென்னை நீலாங்கரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விருது விழாவில் நடிகர் விஜய் பேசி இருந்தார்.. அவர் பேச்சின் சில துளிகள்…

விஜய் பேசுகையில், அவரது விருப்பமான வசனத்துடன் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்…’ எனத் தொடங்கினார்.

என்னை விட உங்களுக்கு அதிகமான விஷயங்கள் தெரியும். இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் நிறைய தகவல்கள் இருக்கிறது. அதில் முக்கால்வாசி பொய்யான தகவல்.

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நீங்க தெளிவா இருக்கணும். நல்ல தலைவர்களை நீங்க தேர்ந்தெடுக்கணும்.

மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய பெற்றோரிடம் காசு வாங்கிட்டு ஓட்டு போடக்கூடாது.

நம்ம கைய வெச்சே நம்மள கணித குத்திக்கக்கூடாது. ஆனா நாம அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம். ஒருத்தருக்கு 1000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குறாங்கன்னா, அவங்க அதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க?

ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்?

எனக்கு இப்போ சினிமா நடிப்பு மட்டும்தான் பிறகு.?

இவ்வாறு விஜய் பேசினார்.

Don’t sell your votes Vijays political speech for students

JUST IN நந்தினிக்கு வைர நெக்லஸ்; சோஷியல் மீடியாக்களில் பொய்..; மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

JUST IN நந்தினிக்கு வைர நெக்லஸ்; சோஷியல் மீடியாக்களில் பொய்..; மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் கல்வி விருது விழா தற்போது சென்னை நீலாங்கரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விருது விழாவில் நடிகர் விஜய் பேசி இருந்தார்.. அவர் பேச்சின் சில துளிகள்…

உங்களைப் பார்க்கும் போது என்னுடைய பள்ளி நாள்கள் ஞாபகம் வருகின்றன.

எனக்கு பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தால் எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

கல்லூரி போறோம், பட்டம் வாங்குறோம். இது மட்டுமே முழுமையான கல்வி கிடையாது என்பதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒன்று சொல்லியிருக்கிறார்.

‘நாம் பள்ளிக்கு போய் கத்துக்கிட்டது படிச்சது எல்லாமே மறந்த பிறகு என்ன எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி.’

நீங்கள் முதல் முறையாகப் பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து வெளியே சென்று மேற்படிப்பு படிக்கப் போகிறீர்கள்.

வெளியே செல்லும்போது நிறையச் சுதந்திரம் கிடைக்கலாம். ஆனால் முறையாக பயன்படுத்த வேண்டும். ஜாலியாக அனுபவித்து வாழுங்கள். உங்க சுய அடையாளத்தை இழந்துவிடாதீர்கள்.

நீங்க பணத்தை இழந்துட்டீங்கன்னா… ஆரோக்கியத்தை இழந்துடீங்கன்னா எதையோ ஒன்றை இழக்குறீங்க. குணத்தை இழந்துட்டீங்கன்னா எல்லாத்தையும் இழந்துவிடுவீர்கள்.

சோஷியல் மீடியாக்களை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், அங்கே அதிகமான பொய்ச் செய்திகள் இருக்கின்றன.

அதிலெல்லாம் ஏமாறாமல் இருக்க நிறைய படிக்கனும்.. பாடப் புத்தகத்தைத் தாண்டியும் நிறையப் படிக்க வேண்டும்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்”

நம்மக்கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது.

நீங்கள் நினைப்பதைத் தைரியமாகச் செய்யுங்கள். உங்களால் முடியாது என யாராவது நெகட்டிவ்வாக சொன்னால் அவர்களின் பேச்சை கேட்காதீர்கள்.

உங்களுக்குள்ள ஒருத்தன் இருப்பான். அவன் என்ன சொல்றானோ அதை மட்டும் செய்யுங்க” என பேசினார்.

மேலும்…

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் நிறைய நேரத்தை செலவழியுங்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

மாணவர்கள் எப்போதும் எக்காரணம் கொண்டு தவறான முடிவுகளை எடுக்கவே கூடாது.” என பேசினார் விஜய்.

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக அளித்தார் விஜய்.

Actor Vijay advice to students in Vijay Students meet

JUST IN கல்வி விருது விழா: மேடையில் ஏறாமல் மாணவர்களுடன் அமர்ந்த விஜய்

JUST IN கல்வி விருது விழா: மேடையில் ஏறாமல் மாணவர்களுடன் அமர்ந்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது.

பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார்.

இவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர்.

பின் அவர் நடிகர் விஜய் 11:00 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் நீலாங்கரையில் உள்ள அரங்கத்திற்கு வந்தடைந்தார்.

இந்நிலையில், விஜய் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவருக்கு அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார்.

அங்கு விஜய்க்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் பரிசு வழங்கினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார்.

பிறகு, நடிகர் விஜய் தற்போது பேசி வருகிறார்.

Vijay sat with the students without going on the stage

More Articles
Follows