மஞ்சு வாரியரின் 2வது தமிழ் படம்; அறிவழகன் இயக்குகிறார்

மஞ்சு வாரியரின் 2வது தமிழ் படம்; அறிவழகன் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????????????????????????????????????????????????விஜய் நடித்த திருமலை, ஆதி மற்றும் தனுஷ் நடித்த சுள்ளான் படங்களை இயக்கியவர் ரமணா.

இவர் இயக்கும் புதிய படத்தில் அர்விந்த் சாமி மற்றும் மஞ்சு வாரியார் ஜோடியாக நடிக்கின்றனர்.

இதன் மூலம் மலையாளத்தில் பிரபலமான மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனையடுத்து, ஈரம், குற்றம் 23 படங்களின் இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள ஒரு படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகவுள்ளது.

Manju Warrier going to work with Director Arivazhagan for tamil movie

ஒரு ஷோவுக்கு டிவி தொகுப்பாளர்கள் எவ்வளவு வாங்குறாங்க.?

ஒரு ஷோவுக்கு டிவி தொகுப்பாளர்கள் எவ்வளவு வாங்குறாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Your favorite TV anchors salary detailsசினிமா அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் ஊடமாக டிவியும் வளர்ந்துவிட்டது.

செய்திகள், ரியால்ட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல வகையான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி ரசிகர்களை வீட்டுக்குள்ளே கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

மேலும் இதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியை சார்ந்த தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல்கள் வந்துள்ளன.

இதோ அந்த தகவல்கள்…

  • கோபிநாத் – ரூ 5 லட்சம்
  • டிடி – ரூ 3.5 லட்சம்
  • ப்ரியங்கா – ரூ 1 லட்சம்
  • பாவனா – ரூ 1 லட்சம்
  • மா.கா.பா.ஆனந்த் – 2 லட்சம்
  • ஜெகன் – ரூ 2 லட்சம்
  • ஜாக்குலீன் – ரூ 1 லட்சம்.

Your favorite TV anchors salary details

ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.?

ரஜினியை தொடர்ந்து அஜித்தை சந்தித்த கஸ்தூரி; என்னவாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kasthuri shaliniசினிமாவில் சான்ஸ் இல்லையென்றாலும், தன்னை பரபரப்பாக பேச வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் சமூக சார்ந்த விஷயங்களையும், அரசியல் தலைவர்கள் பற்றிய தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் ரஜினியை கடுமையாக சாடியிருந்தார். ஆனால் தன் பிறந்தநாளில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் விவேகம் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்திருக்கும் அஜித் மற்றும் குடும்பத்தாரை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் அந்த படங்கள் மட்டும் வெளியாகியுள்ளது.

Kasthuri meet actor Ajith after Rajinikanth

தமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்

தமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassan body weightகடந்த ஜூலை1ஆம் தேதி இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீரில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி விரியுடன் தமிழக அரசின் 30% வரியும் இணைந்துள்ளதால், இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையற்று மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறைக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு மட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலை நீடித்தால் சினிமா முற்றிலுமாக அழிந்துவிடும்.

தற்போது சினிமா துறையின் அனைத்து பிரிவுகளும் இதனை எதிர்த்து கிளம்பியுள்ளன.

எனவே நானும் தொழில் துறை சார்பாக நான் இந்த வரி விதிப்பினை எதிர்த்து போராடவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

KamalHassan Slams Tamilnadu Government Local tax on Cinema

பாவனா கடத்தல் வழக்கில் விரைவில் திலீப் கைது..? சினிமாவை மிஞ்சிய சீக்ரெட்ஸ்

பாவனா கடத்தல் வழக்கில் விரைவில் திலீப் கைது..? சினிமாவை மிஞ்சிய சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dileep kavya weddingதமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார்.

அந்த மர்மநபர்கள் அவரை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரபல நடிகர் திலீப் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அவரிடம் பலமணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

மேலும் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின்படி திலீப்பின் 2வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

ஒரு மெமரி கார்ட்டில் பாலியல் செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என கேரளாவில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதற்கு பின்னணியில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

1) ஒருகாலத்தில் பாவனாவும் காவ்யா மாதவனும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிய பாவனாவை பழிவாங்க காவ்யா மாதவன் ஆன் வைத்து இதை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

2) நடிகை மஞ்சு வாரியருடன் திலீப் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போதே காவ்யா மாதவனுடன் தொடர்ப்பு வைத்திருந்தாகவும், அதை தன் தோழி மஞ்சுவாரியரிடம் பாவனா கூறியதாகவும் கூறப்படுகிறது.

தன் குடும்பம் பிரிய காரணமான பாவனாவை பழிவாங்கவே திலீப் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கலைஞர்களின் நிஜ வாழ்க்கை சினிமாவையே மிஞ்சி விடும் போலவே..

Malayalam actress Bhavana abduction case Co Star Dileep may be arrested

manju warror bhavana

 

தனுஷ் உடன் மோத காரணம் சொல்லும் இயக்குனர்

தனுஷ் உடன் மோத காரணம் சொல்லும் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kajol vip2தனுஷ் தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

முதல் பாகத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, அந்த பாடல்கள் அண்மையில் வெளியானது.

இந்த மாதம் 28ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதே நாளில் கிரகணம் என்ற படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா மற்றும் கயல் சந்திரன் இணைந்து நடித்துள்ள இப்படத்தை இளன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இதுகுறித்து இளன் கூறியதாவது…

கிரகணம் படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் நான் தனுஷின் ரசிகர். அவருடைய படம் வெளியாகும் நாளில் என் படமும் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறினார்.

VIP2 and Graghanam movie clash on Dhanush Birthday

grahanam director ilan

More Articles
Follows